Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 9, 2025

10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள்



நூல் வெளி

கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளனஇவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

கரிசல் இலக்கியம்

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன். அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக தொடர்கிறது.

வட்டார வழக்குச் சொற்கள்

பாச்சல் - பாத்தி
பதனம் - கவனமாக
நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
மகுளி - சோற்றுக் கஞ்சி
வரத்துக்காரன் - புதியவன்
சடைத்து புளித்து - சலிப்பு
அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
தொலவட்டையில் - தொலைவில்

முன்தோன்றிய மூத்தகுடி

"கறங்கு இசை விழவின் உறந்தை....." அகநானூறு, 4:14


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கோபல்லபுரத்து மக்கள் என்பது.

அ) சிறுகதை
ஆ) கவிதை
இ) புதினம்
ஈ) நாவல்

2. கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினத்தை எழுதியவர்

அ) ஜெயமோகன்
ஆ) ஜெயகாந்தன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) இந்திரா பார்த்தசாரதி

3. கி. ராஜநாராயணன் பிறந்த ஊர்.

அ) இளையான்குடி
ஆ) இடைசெவல்
இ) உறையூர்
ஈ) கரூர்

4. கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினம் எதனைப் பின்னணியாகக் கொண்டது.

அ) நிலவுடமைப் போராட்டம்
ஆ) சுதந்திரப் போராட்டம்
இ) அடக்குமுறை
ஈ) வறுமை

5.  கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்த ஆண்டு. 

அ) 1988
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996

6. கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர்.

அ) கு. அழகிரிசாமி
ஆ) பூமணி
இ) கி. ராஜநாராயணன்
ஈ) வீரவேலுசாமி

7. எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்

அ) கி. ராஜமோகன்
ஆ) கி. ராமானுஜம்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கிருஷ்ணகுமார்

8. வட்டார புனைகதை மரபைத் தொடங்கியவர்

அ) கி. ராஜநாராயணன்
ஆ) ஜெயமோகன்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) இந்திரா பார்த்தசாரதி

9. கரிசல் இலக்கியம் என்பது ........... பகுதியைச் சுற்றிய வட்டாரத்தைச் சார்ந்தது.

அ) கோவில்பட்டி
ஆ) உறையூர்
இ) கரூர்
ஈ) திருச்சி

10. கி.ராஜநாராயணனுக்கு முன் கரிசல் மண்ணின் படைப்பாளி.

அ) பா.செயப்பிரகாசம்
ஆ) சோ. தர்மன்
இ) கு.அழகிரிசாமி
ஈ) பூமணி

11. கரிசல் இலக்கியத்தோடு தொடர்பில்லாத ஒருவர்.

அ) வீரவேலுசாமி
ஆ) வேலராமூர்த்தி
இ) ந.பிச்சமூர்த்தி
ஈ) பூமணி

12. கறங்கு இசை விழாவின் உறந்தை எனக் குறிப்பிடும் நூல்

அ) கலித்தெகை
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நளவெண்பா

13. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரைக் குறிப்பிடும் நூல்.

அ) கலித்தெகை
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நளவெண்பா

14. பொருத்தி விடை காண்க.

1. பாச்சல் அ. சோற்றுக்கஞ்சி
2. பதனம் ஆ. மேல்கஞ்சி
3. நீத்திப்பாகம் இ. கவனமாக
4. மகுளி ஈ.பாத்தி

அ) 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ
ஆ) 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ
இ) 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – இ, 4 – ஆ

15. பொருத்தி விடை காண்க.

1. வரத்துக்காரன் அ. புதியவன்
2. பதனம் ஆ. கவனம்
3. அலுக்கம் இ. அழுத்தம்
4. தொலவட்டையில் ஈ. தொலைவில்

அ) 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ
ஆ) 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ
இ) 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – இ, 4 – ஆ

No comments:

Post a Comment