Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 9, 2025

10TH TAMIL - தொகைநிலைத் தொடர்


ஒரு தொடரில் இரு சொற்களுக்கு மத்தியில் சொல்லோ, உருபோ மறைந்து வருவது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

இத்தொகைநிலைத் தொடர் ஆறுவகைப்படும். அவை, வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பனவாகும்.

வேற்றுமைத்தொகை

இரண்டு சொற்களுக்கு மத்தியில் ஆல்குஇன்அதுகண் என்ற வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

எ.கா. மதுரை சென்றார் 

இத்தொடர், மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதைக் காணலாம்.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

எ.கா. தேர்ப்பாகன் 

இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர்பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன. 

வினைத்தொகை

வினைப்பகுதி + பெயர்ச்சொல் = வினைத்தொகை

அதாவது. வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும். 

இவ்வினைத்தொகையில் காலம் மறைந்து வரும்

காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா. வீசுதென்றல்கொல்களிறு

வீசுகொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல்களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாக வந்துள்ளன. 

மேலும் இவை வீசிய காற்றுவீசுகின்ற காற்றுவீசும் காற்று எனவும் கொன்ற களிறுகொல்கின்ற களிறுகொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. 

காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் மறைந்து வந்துள்ளதை உணரலாம்.

பண்புத்தொகை

பண்பு + பெயர் = பண்புத்தொகை

நிறம்வடிவம்சுவைஅளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகியஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்வட்டத் தொட்டி - வட்டமான தொட்டிஇன்மொழி – இனிமையான மொழி.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப்பெயர் + பொதுப்பெயர் = இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகியஎன்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

எ.கா. மார்கழித் திங்கள்சாரைப்பாம்பு.

திங்கள்பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழிசாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.

உவமைத்தொகை

உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

எ.கா. மலர்க்கை (மலர் போன்ற கை)

மலர் - உவமைகை - உவமேயம் (பொருள்) இடையே 'போன்றஎன்னும் உவம் உருபு மறைந்து வந்துள்ளது.

உம்மைத்தொகை

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல்எடுத்தல்முகத்தல்நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

எ.கா. அண்ணன் தம்பிதாய் சேய்

அண்ணனும் தம்பியும்தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

அன்மொழித்தொகை

வேற்றுமைவினைபண்புஉவமைஉம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்

முறுக்கு மீசை வந்தார்

இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார்முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

1. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைகள்.

அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஒன்பது
ஈ) பன்னிரண்டு

2. ஒரு தொடரில் ஐ என்ற உருபு மறைந்து வருவது.

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

3. மதுரை சென்றார் - இலக்கணக்குறிப்பு தருக

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

4. கீழ்க்கண்டவற்றுள் உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைக்கான எடுத்துக்காட்டு.

அ) மதுரை சென்றான்
ஆ) தேர்ப்பாகன்
இ) செங்காந்தள்
ஈ) தாய்சேய்

5. வினைப்பகுதியை அடுத்து பெயர்ச்சொல் அமைவது.

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

6. காலம் கரந்த பெயரெச்சம்.

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) வீசுதென்றல்
ஆ) தேர்ப்பாகன்
இ) ஏவுகணை
ஈ) அலைபேசி

8. பொருந்தாத இணையைக் கண்டறிக

அ) செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை
ஆ) வெள்ளை நிலா - வடிவப் பண்புத் தொகை
இ) முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை
ஈ) இன்சொல் - சுவைப் பண்புத் தொகை

9. ஆகிய என்னும் உருபு மறைந்து வருவது

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

10. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வருவது

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

11. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) மார்கழித் திங்கள்
ஆ) சாரைப்பாம்பு
இ) தமிழ்மொழி
ஈ) தாய்சேய்

12. சிவப்புச் சட்டை பேசினார் என்பது

அ) அன்மொழித்தொகை
ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) பண்புத்தொகை

No comments:

Post a Comment