Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 7, 2024

தமிழ் இலக்கிய வினா விடைகள் - 01

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 01 

1. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள். 

கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)

2.  அகராதி நிகண்டு ஆசிரியர்

சிதம்பரம் வனசித்தர்

3.  அகலிகை வெண்பா நூலாசிரியர்

சுப்பிரமணிய முதலியார்


4.  அசோகன் காதலி நாவலாசிரியர்

அரு.ராமநாதன்

5.  அசோமுகி நாடக ஆசிரியர்

அருணாசலக் கவி

6.  அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்

தழிஞ்சி


7.  அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்

ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து

8.  அடிநூல் ஆசிரியர்

நத்தத்தனார்

9.  அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்

பொன்னப்ப காங்கேயன்


10.  அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட  அற நூல்

திருக்குறள்


11.  அமிர்த சாகரர் பிறந்த ஊர்

தீபங்குடி


12.  அரக்கு மாளிகை நாவலாசிரியர்

லட்சுமி


13. அரசனால் செய்யப்படும் சிறப்பு

மாராயம், எட்டி , ஏனாதி, காவிதி,

14.  அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது

கண்படை நிலை – வாகைத் திணை


15.  அரசனுக்கு அறிவுரை கூறுவது

செவியறிவுறூஉ –பாடாண்


16. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன்

நின்ற சீர் நெடுமாறன்


17.  அரிச்சந்திர புராண ஆசிரியர்

வீரகவிராயர்

18.  அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர்

 மாணிக்கவாசகர்


19. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல்

திருப்புகழ்

20.  அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர்

 ஒட்டக்கூத்தர்


21.  அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் 

ஔவையார்


22.  அந்தகக் கவிராயர் எழுதிய உலா 

திருவாரூர் உலா

23.  அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் 

பதிற்றுப்பத்து – நான்காம் பத்து

24.  அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் 

ஆலாபனை - 1999


25.  அப்பாவின் ஆசை, சிறுவர் நாடகம் 

அரு. இராமநாதன்

26.  அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர்

ஆ.சிங்காரவேலு முதலியார்

27.  அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் 

  மறைமலையடிகள்


28.  அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் 

அம்பிகாபதி

29. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் 

தி.ஜானகிராமன்

30. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர்

கல்கியின் மகள் ஆனந்தி

 

No comments:

Post a Comment