Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 30, 2022

TET, TNPSC Maths (Train Sums) Questions Study Material

  1. இரண்டு இரயில்நிலையங்கள் A,B இடையேயுள்ள தூரம் 200KM. ஒரு வண்டியானது காலை 6 மணிக்கு Aஇல் இருந்து Bஐ நோக்கி 40kmph வேகத்தில் செல்கிறது. மற்றொரு வண்டியானது காலை 7 மணிக்கு B இல் இருந்து A நோக்கி 50kmph வேகத்தில் செல்கிறது எனில் எந்த நேரத்தில் இரண்டு வண்டிகளும் சந்தித்துக் கொள்ளும்?  
    1.  10AM
    2.  9.30AM
    3. 9AM  
    4. 11AM
  2. A என்பவா் தன்வழக்கமாக செல்லும் வேகத்திற்கு பதிலாக 30kmph வேகத்தில் சென்றால் 10 நிமிடங்கள் தாமதமாக தன் அலுவலகத்திற்கு செல்கிறார். அதுவே, 40 kmph வேகத்தில் சென்றால் 10நிமிடங்கள் முன்பாகவே சென்று விடுகிறார் எனில் அவரின் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இடையே உள்ள தூரம் காண்க.  
    1.  30km
    2.  38km
    3. 40km
    4. 48km

  3. ஒரு விரைவு வண்டி 100கிமீ/மணி சராசரி வேகத்துடன் ஒவ்வொரு 75kmக்கும் 3 நிமிடம் நின்று பயணிக்கிறது. புறப்படும் இடத்தில் இருந்து 600km தூரத்தில் உள்ள இடத்தை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும்?
    1.  6 மணி 24நி
    2. 6 மணி 27நி
    3.  6மணி 21நி  
    4. 6மணி 30நி

  4. ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 20வினாடிகளிலும், 120m நீளமான நடைமேடையை 30வினாடிகளிலும் கடக்கிறது எனில் புகைவண்டியின் நீளம் எவ்வளவு?
    1.  130m
    2. 240m
    3.  140m
    4. 120m

  5. 270மீ. நீளமுள்ள ஒரு தொடா் வண்டியானது 60 கி.மீ/மணி வேகத்தில் சென்றால் 230 மீ நீளமுள்ள நடைமேடையை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?  
    1. 40
    2. 50
    3. 60
    4.  30

  6. மணிக்கு 68 கி.மீ. வேகத்தில் செல்லும் மின்தொடா் வண்டி 180 வினாடிகளில் கடக்கும் தூரம் மீட்டரில் எவ்வளவு?
    1. 3400  
    2. 5100
    3. 5000
    4. 6000

  7. ஒரு மனிதன் மொத்த பயணதூரத்தில் 3/5 பகுதியை இரயில் மூலமாகவும் 7/20 பகுதியை பேருந்து மூலமாகவும் மீதமுள்ள 6.5 கிமீ-யை நடந்தும் கடக்கின்றான் எனில் அவரது பயணத்தின் மொத்த தூரம்  
    1. 65கிமீ
    2. 100கிமீ
    3. 120கிமீ
    4. 130கிமீ

  8. ஒரு கார் மணிக்கு 108 கிலோமீட்டா் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த கார் 15 நொடிகளில் எவ்வளவு தூரம் செல்லும்?  
    1. 45மீ
    2.  55மீ
    3.  450மீ
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  9. படத்திலிருந்து ஒரு காரானது 4.5 மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தை கடந்திருக்கும்?  
    1.  180km  
    2. 140km
    3.  200km
    4.  220km

  10. ஒரு மணிக்கு 108கிமீ வேகத்தில் செல்லும் ஒரு மின் தொடா்வண்டி, பாதை ஓரம் உள்ள ஒரு மரத்தை 10 வினாடிகளில் கடந்து செல்லுமாயின் அவ்வண்டியின் நீளம் (மீட்டரில்)
    1.  400
    2.  350
    3. 300  
    4.  450

No comments:

Post a Comment