Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 30, 2022

TET, TNPSC Maths (Percentage) Questions Study Material

  1. ஒரு தோ்வில் 30% மாணவா்கள் ஆங்கிலப் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. 40% மாணவா்கள் ஹிந்தி பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் 20% மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை எனில் இரண்டு பாடத்திலும் தோ்ச்சி பெற்றவா் சதவீதம் என்ன?  
    1.  50%  
    2.  20%
    3.  10%
    4. 60%

  2. ஒரு நாற்காலியின் விலை ரூ.2100 யிலிருந்து ரூ.2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தை காண்க.  
    1.  15%
    2.  20%
    3.  10%
    4. 25%

  3. ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?  
    1. 50%
    2. 25%
    3. 56.25%  
    4. 46.25%

  4. ஆல்கஹால் 20% உள்ள 5லி திரவ கலவையோடு 1லி நீா் சோ்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது.  
    1. 16 2/3%
    2. 15%
    3. 20%
    4. 16%

  5. 12 பொருட்களின் வாங்கிய விலைக்கு 10 பொருட்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்  
    1.  18
    2.  16 2/3%
    3.  20%  
    4.  25%

  6. ரூ.414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15% எனில் வாங்கிய விலை என்ன?  
    1. 400
    2. 314
    3. 326
    4. 360

  7. ஓா் இரு சக்கர ஊா்தியின் குறித்த விலை 17000 அந்த நிறுவனம் 1700 தள்ளுபடி அளித்திடின் அந்த வண்டிக்கு அளித்த தள்ளுபடி சதவீதம் என்ன?  
    1. 15%
    2. 25%
    3. 5%
    4. 10%

  8. இராம்குமார் தன்னுடைய வருமானத்தில் 70% செலவு செய்கிறார். அவரின் வருமானம் 15% அதிகரிக்கும் பொழுது அவரின் செலவை 10% அதிகரிக்கிறார் எனில் அவரின் சேமிப்பு எவ்வளவு உயரும்?  
    1. 76.67%
    2. 36.6%
    3. 26.67%
    4. 15%

  9. ஒரு கடைக்காரா் குறித்த விலையில் 10% தள்ளுபடி கொடுத்தும் 10% லாபம் அடைகிறார். அவரின் குறித்த விலை ரூ330 எனில் அடக்க விலை  
    1. 270
    2. 300
    3. 280
    4. 250

  10. ஒரு பொருளின் இயக்க ஆற்றல் 19% குறைந்தால் அதன் திசைவேகம் எவ்வளவு குறையும்?  
    1. 5%
    2.  10%
    3. 15%
    4. 20%

  11. 25% இல் 25% எதற்குச் சமம்?  
    1. 6.25
    2. 0.625
    3. 0.0625
    4. 0.50625

  12. வியாபாரி ரூ.36க்கு பொருளை விற்கும் பொழுது 10% நஷ்டமடைகிறார், எனில் ரூ.45க்கு விற்கும் பொழுது அவா் அடையும் இலாப சதவீதம்  
    1. 16.5%
    2. 13.5%
    3. 9%
    4. 12.5%

  13. ஒரு பொருளின் விலை 4 வருடங்களில் 16 மடங்காகிறது எனில் வருடாந்திர சதவீத உயா்வு  
    1. 100
    2. 40
    3. 60
    4. 20

  14. A என்பவா் 10,000 த்திற்கு ஒரு குதிரை வாங்கி அதனை B என்பவருக்கு 10% இலாபம் வைத்து விற்றார் B என்பவா் C என்பவருக்கு 10% நஷ்டத்திற்கு விற்றார் எனில் C என்பவா் குதிரை என்ன விலைக்கு வாங்கியிருப்பார்?  
    1. 10,000
    2. 9,900
    3. 9999
    4. 11,000

  15. 72% தானியங்கி மீட்டா்கள் சரியாக வேலைசெய்யும் நிலையில் உள்ளன எனில் எவ்வளவு பரிசோதனை செய்திருந்தால் 270 தானியங்கி மீட்டா்கள் சரியானதாயிருக்கும்?  
    1. 375
    2. 470
    3. 475
    4. 720

  16. 10 லிட்டா் கரைசலில் 30% அமிலம் கலந்திருந்தால் கலக்கப்பட்ட அமிலம் எவ்வளவு லிட்டா்?  
    1. 1.5
    2. 3
    3. 4.5
    4. 4

  17. ஒரு வியாபாரி 33 மீட்டா் துணியை விற்றால் 11 மீட்டா் துணி விற்ற அளவு இலாபம் அடைகிறார் எனில் அவரின் இலாப %
    1.  25%
    2.  30%
    3.  33%
    4.  33.33%  

  18. எத்தனை சதவீத மாணவா்கள் கணினியியலை விரும்பவில்லை?  
    1.  91%
    2.  9%
    3.  82%
    4.  18%

  19. ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணில் ஐந்தில் மூன்று மடங்கை விட 15 குறைவு எனில் அந்த எண்.
    1.  48
    2.  52
    3.  50  
    4.  70

  20. (x – y)ன் 50% = (x + y)-ன் 30% எனில் x-ல் y-ன் சதவீதம் என்ன?  
    1.  25%  
    2.  50%
    3.  75%
    4.  100%

  21. ஒரு கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களில் 18% ஆனது 36 எனில் மொத்த முள்ள ஆரஞ்சு பழங்களில் எண்ணிக்கை  
    1.  100
    2.  150
    3.  200
    4.  300

  22. 2013-இல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 125000, அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014 இல் மக்கள் தொகையைக் காண்க.  
    1.  8750
    2.  133750  
    3.  116250
    4.  125000

  23. ஒருவா் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20% அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவா் எத்தனை ரூபாய்க்கு விற்க வேண்டும்?  
    1.  ரூ.800
    2.  ரூ.760
    3.  ரூ.720
    4.  ரூ.680

  24. இருவா் ஒரு தோ்தலில் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற்றவா் 65% வாக்குகள் பெற்றார். மேலும் 300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனில் பதிவான மொத்த ஓட்டுகள் எத்தனை?  
    1.  350
    2.  650
    3.  1000  
    4.  3000

  25. ஒரு நபா் ஒரு காரை ரூ.1,40,000க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன் அடக்க விலை என்ன?
    1.  ரூ.1,50,000
    2.  ரூ.1,25,000
    3.  ரூ. 2,00,000
    4.  ரூ.1,75,000  

  26. இரண்டு போ் போட்டியிடும் ஒரு தோ்தலில் 68 வாக்குகள் செல்லாதவை. வெற்றி பெற்ற போட்டியாளா் 52% வாக்குகள் பெற்று தோற்றவரை விட 98 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் எனில் மொத்தம் வாக்குகள் எத்தனை?  
    1.  2382
    2.  2450
    3.  2518  
    4.  2550

  27. ஓா் உணவகத்தில் 60% சைவ உணவும், 30% அசைவ உணவும் மற்றும் 15% இரண்டு வித (சைவ மற்றும் அசைவ) உணவும் சாப்பிட்டார்கள் அந்த உணவகத்தில் 96 போ் இருந்தனா். இதில் எத்தனை போ் எவ்வித உணவையும் சாப்பிடவில்லை.  
    1.  20
    2.  24
    3.  26
    4.  28

  28. ஒரு மாணவன் ஓா் எண்ணை 5/3 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 3/5 ஆல் பெருக்கினால் அவனுக்கு பிழையின் சதவீதம் என்ன?  
    1.  64%
    2.  54%
    3.  44%
    4.  34%

  29. 40 குவிண்டாலானது 2 மெட்ரிக் டன்னில் எத்தனை சதவீதம் உள்ளது?
    1.  2%
    2.  20%
    3.  150%
    4.  200%  

  30. ஒரு பசுவை 20% இலாபத்தில் ரூ.2400க்கு விற்றால் அதன் அடக்க விலை என்ன?
    1.  ரூ.1000
    2.  ரூ.2000  
    3.  ரூ.1800
    4.  ரூ.1500

No comments:

Post a Comment