Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 30, 2022

TET, TNPSC Maths (Compound Interest) Questions Study Material

  1. கூட்டு வட்டி முறையில் ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது? 
    1. 400%  
    2. 200%
    3.  300%
    4. 150%
  2. ரூ.800 ஆனது 5% கூட்டு வட்டி வீதத்தில் ரூ.882 ஆக எடுத்துக் கொள்ளும் காலம் _____ ஆண்டுகள்  
    1.  4
    2.  3
    3. 2
    4. 1

  3. ரூ.800 என்ற அசல் இரண்டாண்டு முடிவில் ரூ.915,92 ஆகிறது எனில் அதன் கூட்டு வட்டி சதவீதம் காண்க?
    1.  6%
    2. 4%
    3.  7%  
    4. 8%

  4. கூட்டு வட்டியில் ஒரு அசலானது இரண்டு ஆண்டுகளில் ரூ.672 ஆகவும் மூன்று ஆண்டுகளில் ரூ.714 ஆகவும் ஆகிறது எனில் வட்டி வீதத்தை காண்க.
    1.  5%
    2.  3.5%
    3. 6 ¼%
    4. 7.5%

  5. ஒரு நிதி மையத்தில் மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு ரூ.7,000 முதலீடு செய்தார். கூட்டு வட்டி முறையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தக் தொகையும் யாவை?  
    1. கூட்டு வட்டி – ரூ. 3,246 தொகை – ரூ. 13,246
    2.  கூட்டு வட்டி – ரூ. 3,646 தொகை – ரூ. 10,646
    3.  கூட்டு வட்டி – ரூ. 6,436 தொகை – ரூ. 16,046
    4.  கூட்டு வட்டி – ரூ. 4,636 தொகை – ரூ. 14,636

  6. ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில் ரூ.30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ.4347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி.
    1. 2  
    2. 2 ½
    3. 3
    4. 4

  7. ஆண்டிற்கு 10% வீதம் அரையாண்டில் கூட்டு வட்டி கணக்கீடல் மூலம் குறிப்பிட்டத் தொகைக்கு 6 மாதங்களுக்குப் பெறப்பட்ட வட்டித் தொகை ரூ.2100 எனில், முதலீடு செய்யப்பட்டத் தொகையைக் காண்க.  
    1. 36000
    2. 38000
    3. 40000
    4. 42000

  8. வங்கி ஒன்றில் ரூ. 2000 சேமிப்பு தொகையாக செலுத்தப்படுகிறது. கூட்டு வட்டி அளிக்கும் வங்கியானது முதல் ஆண்டிற்கு r% வட்டியும், இரண்டாம் ஆண்டிற்கு 5% வட்டியும் அளிக்கிறது. இரண்டாம் ஆண்டு முடிவில் பெறப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.2163 எனில், r இன் மதிப்பினை காண்க.  
    1. 5%
    2.  10%
    3.  3%
    4.  2%

  9. ரூ.1000 ஆனது 10% ஆண்டு கூட்டுவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1331 ஆகும்?  
    1. 2
    2. 3  
    3. 4
    4. மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

  10. கூட்டு வட்டியில் ஒரு தொகையானது இருமடங்காக 10 ஆண்டுகளில் ஆகிறது எனில் நான்கு மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்.
    1.  10
    2.  40
    3. 20  
    4.  30

No comments:

Post a Comment