மதிப்பீடு
1. யாப்பின் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
யாப்பின் உறுப்புகள் ஆறு ஆகும் . அவை முறையே ,
* எழுத்து
* அசை
* சீர்
* தளை
* அடி
* தொடை
2. ஓரசைச்சீருக்குரிய வாய்பாடு யாது?
அசை வாய்பாடு
நேர் நாள்
நிரை மலர்
நேர்பு காசு
நிரைபு பிறப்பு
3. அசை பிரிக்கும் போது கவனிக்க வேண்டியவை யாவை?
1. மெய்யெழுத்தின் பக்கத்தில் கோடிடுக.
2. நெடில் பக்கத்தில்/ கோடிடுக.
3. இருகுறில் அடுத்து) கோடிடுக.
4. ஒற்று, ஆய்தம் அலகு பெறாது. எனவே அவற்றை நீக்கி, ஓரெழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துகள் இருப்பின் நிரையசை எனவும் கொள்ள வேண்டும்.
4. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு கூறுக.
'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
வ.எ. சீர் அசை வாய்பாடு
1 . எண்/ணென்/ப நேநேநே தேமாங்காய்
2 . ஏ / னை நேர்நேர் தேமா
3. எழுத்/தென்/ப நிநேநே புளிமாங்காய்
4. இவ்/விரண்/டும் நேநிநே கூவிளங்காய்
5. கண்/ணென்/ப நேநேநே தேமாங்காய்
6. வா/ழும் நேர் நேர் தேமா
7. உயிர்க்/கு நிரைநேர் பிறப்பு
பிறப்பு எனும் வாய்பாடு கொண்டு இக்குறட்பா முடிவடைந்துள்ளது.
No comments:
Post a Comment