மதிப்பீடு
1. பதம் என்பதன் வரையறை யாது?
ஓர் எழுத்து தனித்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும்.
சான்று : மா , மாமரம்
2. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
பகுபத உறுப்புகள் ஆறு . அவை ,
* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை
* விகாரம்
3. விகுதி என்றால் என்ன?
சொல்லின் இறுதியில் நின்று திணை , பால் , எண் , இடம் காட்டுவதாக அமைவது விகுதி எனப்படும்.
படித்தான் - படி + த் + த் + ஆன்
திணை - உயர்திணை
பால் - ஆண்பால்
எண் - ஒருமை
இடம் - படர்க்கை
4. பாடுகிறாள் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பாடுகிறாள் - பாடு + கிறு + ஆள்
பாடு - பகுதி
கிறு - நிகழ்கால இடைநிலை
ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி
5. எழுத்துப்பேறு வரையறு.
எழுத்துப்பேறு:
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும். சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப் பேறு.
சான்று :
செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ
த் - எழுத்துப்பேறு
No comments:
Post a Comment