பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 8
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் --------.
- நச்செல்லையார்
- ஒளவையார்
- காக்கை பாடினி
- வெள்ளி வீதியார்
- மேன்மை தரும் அறம் என்பது---------.
- கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
- மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
- புகழ் கருதி அறம் செய்வது
- பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் ------------,-------------.
- உதியன், சேரலாதன்
- அதியன், பெருஞ்சாத்தன்
- பேகன், கிள்ளி வளவன்
- நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
- சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று கூறியவர் யார்?
- அர்னால்டு
- ஏணிச்சேரி முடமோசியார்
- ஜி.யு. போப்
- மாங்குடி மருதனார்
- இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் என்று வள்ளல் ஆய் அவர்களைப் பாராட்டியவர் யார்?
- ஊன்பொதி பசுங்குடையார்
- மாங்குடி மருதனார்
- ஆவூர் மூலங்கிழார்
- ஏணிச்சேரி முடமோசியார்
- சங்கப்பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் யாரை முதன்மைப்படுத்தி கூறப்பட்டுள்ளன ?
- அரசர்கள்
- அமைச்சர்கள்
- புலவர்கள்
- வள்ளல்கள்
- அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?
- ஆவூர் மூலங்கிழார்
- ஏணிச்சேரி முடமோசியார்
- மாங்குடி மருதனார்
- ஊன்பொதி பசுங்குடையார்
- நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் எது?
- அகநானூறு
- புறநானூறு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?
- ஏணிச்சேரி முடமோசியார்
- மாங்குடிமருதனார்
- ஆவூர் மூலங்கிழார்
- ஊன்பொதி பசுங்குடையார்
- ‘எரியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்’ என்று குறிப்பிடும் நூல்?
- அகநானூறு
- புறநானூறு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- ‘செல்வத்தின் பயனே ஈதல்’ எனக் குறிப்பிடும் நூல் --------.
- அகநானூறு
- பட்டினப்பாலை
- மதுரைக்காஞ்சி
- புறநானூறு
- “இல்லோர் ஒக்கல் தலைவன்” “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்படுபவர் யார்?
- அரசர்கள்
- அமைச்சர்கள்
- புலவர்கள்
- வள்ளல்கள்
- வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவர் யார்?
- பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- ஏணிச்சேரி முடமோசியார்
- ஆவூர் மூலங்கிழார்
- மாங்குடி மருதனார்
- உதவி செய்தலை உதவி ஆண்மை என்று கூறியவர் --------.
- ஈழத்துப் பூதன்தேவனார்
- ஆவூர் மூலங்கிழார்
- ஏணிச்சேரி முடமோசியார்
- மாங்குடி மருதனார்
- வாய்மையை பிழையா நல் மொழி என்று குறிப்பிடும் நூல் --------.
- அகநானூறு
- புறநானூறு
- பட்டினப்பாலை
- நற்றிணை
- ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது --------.
- காலம் மாறுவதை
- வீட்டைத் துடைப்பதை
- இடையறாது அறப்பணி செய்தலை
- வண்ணம் பூசுவதை
- கோடை வயல், மீட்சி விண்ணப்பம் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் --------.
- கண்ணதாசன்
- ஜெயகாந்தன்
- தி.சோ.வேணுகோபாலன்
- புதுமைப்பித்தன்
- எழுத்து காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்-------.
- தி.சோ.வேணுகோபாலன்
- ஜெயகாந்தன்
- கண்ணதாசன்
- புதுமைப்பித்தன்
- தி.சோ.வேணுகோபாலன் பிறந்த ஊர் -------.
- திருவையாறு
- சிறுகூடல்பட்டி
- உறுவையாறு
- தஞ்சாவூர்
- காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்------.
- இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
- என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
- இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
- என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
- கண்ணதாசன் இயற்பெயர் ---------.
- தி.சோ.வேணுகோபாலன்
- முத்தையா
- எத்திராசு
- ராஜநாராயணன்
- கண்ணதாசனின் பிறந்த ஊர் --------.
- திருவையாறு
- சிறுகூடல்பட்டி
- உறுவையாறு
- தஞ்சாவூர்
- சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் --------.
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- தி.சோ.வேணுகோபாலன்
- கண்ணதாசன்
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர்---------.
- புதுமைப்பித்தன்
- தி.சோ.வேணுகோபாலன்
- கண்ணதாசன்
- ஜெயகாந்தன்
- .‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் --------.
- புதுமைப்பித்தன்
- கண்ணதாசன்
- தி.சோ.வேணுகோபாலன்
- ஜெயகாந்தன்
- சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்--------.
- வெண்பா
- அகவற்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- யாப்பின் உறுப்புகள் ---------- வகைப்படும் .
- ஐந்து
- ஆறு
- ஏழு
- எட்டு
- வெண்பாவிற்குரிய ஓசை --------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- திருக்குறளும் நாலடியாரும் -------- பாவால் அமைந்துள்ளன .
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை -----------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது ----------.
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது----------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- கலிப்பாவிற்கு உரிய ஓசை ---------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை ---------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- வெண்பா -------- வகைப்படும் .
- 3
- 4
- 5
- 6
- ஆசிரியப்பா ------------வகைப்படும்.
- 3
- 4
- 5
- 6
- 2 அடி முதல் 12 அடி வரை அமையும் பாவகை -------.
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும் பாவகை --------.
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- இருவர் உரையாடுவது போன்ற ஓசை --------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- ஒருவர் பேசுதல் மற்றும் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை --------.
- செப்பலோசை
- அகவலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
- ‘ இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.
- அகநானூறு
- புறநானூறு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
No comments:
Post a Comment