பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 9
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது -------------.
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- வெளிநாட்டு முதலீடுகள்
- அறிவியல் முன்னேற்றம்
- கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது ----------.
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
- ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக பெற்ற விருது ---------------.
- குடியரசுத் தலைவர் விருது
- சாகித்ய அகாதெமி விருது
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது.
- ஜெயகாந்தனின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம் --------------.
- சுந்தர காண்டம்
- பாரீசுக்குப் போ
- உன்னைப் போல் ஒருவன்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர் ------------.
- அசோகமித்திரன்
- கா. செல்லப்பன்
- சி.சு.செல்லப்பா
- ம.பொ.சிவஞானம்
- “ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர் --------.
- அசோகமித்திரன்
- கா. செல்லப்பன்
- ஜெயகாந்தன்
- ம.பொ.சிவஞானம்
- “எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர் -------------.
- அசோகமித்திரன்
- கா. செல்லப்பன்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- ம.பொ.சிவஞானம்
- என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று கூறியவர் --------.
- அசோகமித்திரன்
- கா. செல்லப்பன்
- ஜெயகாந்தன்
- ம.பொ.சிவஞானம்
- சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் -----------.
- அசோகமித்திரன்
- கா. செல்லப்பன்
- ஜெயகாந்தன்
- ம.பொ.சிவஞானம்
- ஜெயகாந்தன் தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு -------------.
- குருபீடம்
- யுகசந்தி
- ஒருபிடி சோறு
- உண்மை சுடும்
- “இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்...” - இவ்வடிகளில் கற்காலம் என்பது ----------.- தலைவிதி
- பழைய காலம்
- ஏழ்மை
- தலையில் கல் சுமப்பது
- கவிஞர் நாகூர் ரூமியின் இயற்பெயர் ------------.
- முகமது நபி
- அப்துல் ரகுமான்
- முகமது ரஃபி
- சந்தா சாகிப்
- கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர் ---------.
- முகமது நபி
- அப்துல் ரகுமான்
- சந்தா சாகிப்
- முகமது ரஃபி
- ----------- மனச் சுமைகள் செங்கற்கள் அறியாது.
- தொழிலாளர்
- முதலாலிகள்
- சித்தாள்
- மற்றவர்கள்
- பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ------ ,--------- வேண்டினார்.
- கருணையன் எலிசபெத்துக்காக
- எலிசபெத் தமக்காக
- கருணையன் பூக்களுக்காக
- எலிசபெத் பூமிக்காக
- கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ---------.
- யுதாசு
- மத்தேயு
- யோக்கோபு
- திருமுழுக்கு யோவான்
- திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் ----------------.
- யுதாசு
- கருணையன்
- யோக்கோபு
- திருமுழுக்கு யோவான்
- கருணையன் தாயார் யார்?
- எலிசபெத்
- மரியன்னை
- தூய மேரி
- இலியா ராணி
- வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்யாசி என்னும் பட்டத்தை வழங்கியவர் --------.
- சந்தாசாகிப்
- மத்தேயு
- யோக்கோபு
- திருமுழுக்கு யோவான்
- இஸ்மத் சன்யாசி என்னும் சொல்லின் பொருள் -------------.
- அருளுடையவர்
- முனிவர்
- அன்பானவர்
- தூய துறவி
- வீரமாமுனிவரின் இயற்பெயர் -------------.
- திருமுழுக்கு யோவான்
- கான்சுடான்சு ஜோசப் பெசுகி
- கருணையன்
- யோக்கோபு
- தமிழின் முதல் அகராதி ------------.
- பேரகராதி
- சதுரகராதி
- கலைக்களஞ்சிய அகராதி
- அகராதி நிகண்டு
- அசும்பு - பொருள் கூறுக.
- மலை
- நிலம்
- காடு
- கிளை
- இலக்கண குறிப்புத் தருக - காய்மணி
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- வினைத்தொகை
- உவமைத்தொகை
- வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி ------------.
- உவமை
- தற்குறிப்பேற்றம்
- உருவகம்
- தீவகம்
- ------- ---க்கு அழகு செய்து சுவையை உண்டாக்கும் அணிகள்.
- உரைநடை
- செய்யுள்
- இலக்கணம்
- துணைப்பாடம்
- இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது --------.
- தன்மையணி
- தீவக அணி
- நிரல்நிறை அணி
- தற்குறிப்பேற்றயணி
- தீவகம் என்னும் சொல்லின் பொருள் ----------.
- விளக்கு
- நெருப்பு
- காற்று
- வெம்மை
- ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் தருவது ------------.
- தன்மையணி
- தீவக அணி
- நிரல்நிறை அணி
- தற்குறிப்பேற்றயணி
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது --------.
- தன்மையணி
- தீவக அணி
- நிரல்நிறை அணி
- தற்குறிப்பேற்றயணி
- எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமையப் பாடுவது -------.
- தன்மையணி
- தீவக அணி
- நிரல்நிறை அணி
- தற்குறிப்பேற்றயணி
- வீரமாமுனிவர் சந்தாசாகிப் என்ற மன்னனிடம் உரையாடுவதற்குக் கற்றுக்கொண்ட மொழி -----------.
- தமிழ்
- ஆங்கிலம்
- தெலுங்கு
- உருது
- தேம்பா + அணி, தேன்+பா+அணி முறையே ---------, ------------ என்பது அதன் பொருளாகும்.
- வாடாத மாலை, தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு
- தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு, வாடாத மாலை
- தேன் போன்ற அணிகலன் , வாடாத மாலை
- தேன் போன்ற அணிகலன் , தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு
- தேம்பாவணி நூலின் ஆசிரியர்---------.
- ஜி.யூ. போப்
- உமறுப்புலவர்
- தாயுமானவர்
- வீரமாமுனிவர்
- தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் ----------.
- கிருத்து
- சூசையப்பர்
- நபிகள் நாயகம்
- சிவன்
- கீழ்காண்பவற்றுள் பொருந்தாதது எது?
- சூசையப்பர்
- கிருத்து
- யோசேப்
- வளன்
- தேம்பாவணி நூலின் காண்டம், படலம், காதை முறையே -----,-----,---- ஆகும்.
- 4, 36, 3615
- 3, 30, 3615
- 3, 36, 3615
- 3, 36, 3516
- தேம்பாவணி படைக்கப்பெற்ற ஆண்டு ------- ஆம் நூற்றாண்டு.
- 15
- 16
- 17
- 18
- கீழ்காண்பவற்றுள் பொருந்தாதது எது?
- தொன்னூல் விளக்கம்
- பரமார்த்தக் குருகதைகள்
- தேம்பாவணி
- இயேசு காவியம்
- சிலை, மிசை, புள் இவற்றின் பொருள்கள் முறையே ------,-------,------ ஆகும்.
- வில், பறவை, மேலே
- மேலே, பறவை, வில்
- வில், மேலே, பறவை
- பறவை, மேலே, வில்
No comments:
Post a Comment