பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 7
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும். மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
- திருப்பதியும் திருத்தணியும்
- திருத்தணியும் திருப்பதியும்
- திருப்பதியும் திருச்செந்தூரும்
- திருப்பரங்குன்றமும் பழனியும்
- சுதேசி கப்பல் நிறுவனத்தினை தொடங்கியவர் ---------.
- திரு.வி.க
- ம.பொ.சி
- வ.உ.சி
- ஈ. வெ.ரா
- அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் -----------------.
- கல்வி - கேள்வி
- துணிவு - பணிவு
- அறம் - மறம்
- படித்தல்
- ம.பொ.சிவஞானம் தனது உயரிய சொத்தாகக் கருதியது------------------- .
- பதவி
- பொருள்
- நூல்கள்
- பட்டம்
- தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது--------------- .
- திருக்குறள்
- புறநானூறு
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
- "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கியவர்---------- .
- விநாயகம்
- ரஷித்
- ம.பொ.சிவஞானம்
- மங்கலக்கிழார்
- தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தவர் ---------------.
- காமராஜர்
- இராஜாஜி
- அண்ணா
- எம்.ஜி. ஆர்
- மொழி அடிப்படையில் முதன் முதல் பிரிந்த மாநிலம்-------------------- .
- ஆந்திரா
- தமிழ்நாடு
- கேரளா
- குஜராத்
- கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைய பாடுபட்டவர் ----------------.
- ந.முத்துசாமி
- மார்ஷல்.ஏ.நேசமணி
- மு.கருணாநிதி
- எவரும் இல்லை
- ம.பொ.சிவஞானத்தின் தன் வரலாற்று நூல்---------.
- எனது போராட்டம்
- என் சரிதம்
- எனது சரித்திரம்
- என் போராட்டம்
- சிலம்பு செல்வர் ------------------.
- இளங்கோவடிகள்
- ம .பொ. சிவஞானம்
- சீத்தலைச்சாத்தனார்
- நச்சினார்க்கினியர்
- பொன் ஏர் பூட்டும் திங்கள் ---------------- .
- ஆவணி
- ஆடி
- சித்திரை
- தை
- கிராம ஊழியன், பாரத மணி, பாரத தேவி முதலிய இதழ்களின் ஆசிரியர் ----------.
- திரு.வி.க
- கு.ப.ராஜகோபாலன்
- அயோத்திதாசன்
- ஈ.வெ.ரா
- கல் இலக்கியமாய் அமைவது --------------------.
- மெய்க்கீர்த்தி
- கல்வெட்டு
- செப்பேடு
- நடுகல்
- "திருபுவனச் சக்கரவர்த்தி " என்ற பட்டம் சூடியவர் --------------.
- முதலாம் இராசராசன்
- இரண்டாம் இராசராசன்
- முதலாம் ராசேந்திரன்
- இரண்டாம் ராசேந்திரன்
- மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் பெருங்காப்பியம்----------.
- வளையாபதி
- குண்டலகேசி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம் --------------- காண்டம் கொண்டது.
- 3
- 6
- 2
- 4
- "அடிகள் நீரே அருளுக " என்றவர் ------------- .
- சீத்தலைச் சாத்தனார்
- இளங்கோவடிகள்
- திருவள்ளுவர்
- சேக்கிழார்
- ஒருதலைக் காமம் ---------------.
- பெருங்கதை
- கைக்கிளை
- பெருந்திணை
- எவையும் இல்லை
- கல்வி , வீரம் , செல்வம் , புகழ் , கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது ------- திணை.
- பொதுவியல்
- பாடாண்
- வெட்சி
- நொச்சி
- கோட்டையைக் காத்தல் -------------------- திணை .
- நொச்சி
- வஞ்சி
- காஞ்சி
- தும்பை
- "கவிதை வாழ்க்கையின் திறனாய்வு " என்றவர் ---------------- .
- எல்லிஸ்
- ஆர்னால்டு
- பாரதியார்
- பாரதிதாசன்
- புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை ---------.
- மெய்க்கீர்த்தி
- செப்பேடு
- நடுகல்
- ஓவியம்
- காளைகளை ஒட்டிக் கடுகிச்செல் முன்பு --------------. இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன ?
- விரைந்து செல்
- மெதுவாக செல்
- மறைந்து செல்
- கூடிச்செல்
- "மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் " இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன ?
- ஓவியர்
- சிற்பி
- நெய்பவர்
- எண்ணெய்விற்போர்
- ஐம்பெரும் காப்பியம் முறைவைப்பு முறையை குறிப்பிடும் நூல் --------------.
- திருத்தணிகையுலா
- மூவருலா
- அந்தாதி
- கலிங்கத்துப்பரணி
- சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.
- உழவு , மண் , ஏர் , மாடு
- மண் , மாடு , ஏர் , உழவு
- உழவு , ஏர் , மண் , மாடு
- ஏர் , உழவு , மாடு , மண்
- "தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்.
- மேம்பட்ட நிர்வாக திறன் பெற்றவர்
- மிகுந்த செல்வம் உடையவர்
- பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
- நெறியோடு நின்று காவல் காப்பவர்.
- இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம் ---------- .
- நாட்டை கைப்பற்றல்
- ஆநிரை கவர்தல்
- வலிமையை நிலைநாட்டல்
- கோட்டையை முற்றுகையிடல்
- ஆநிரை கவர்தல் ------------------ திணை .
- வெட்சி
- கரந்தை
- நொச்சி
- தும்பை
- வாகை என்பது -------------------- .
- தோல்வி
- மாலை
- வெற்றி
- போர்
- மண்ணாசை கருதி போர் செய்தல் ---------------------- திணை.
- வஞ்சி
- காஞ்சி
- தும்பை
- பாடாண்
- மெய்க்கீர்த்தி என்ற பெயர் --------------------- காலத்தில் வந்தது.
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்லவன்
- அகலிகை, ஆத்ம சிந்தனை முதலிய படைப்புகளுக்கு உரியவர்--------.
- திரு.வி.க
- கு.ப.ராஜகோபாலன்
- அயோத்திதாசன்
- ஈ.வெ.ரா
- முதல்மழை விழுந்ததும் எனத்தொடங்கும் ஏர் புதிது பாடலை இயற்றியவர்--------.
- திரு.வி.க
- கு.ப.ராஜகோபாலன்
- அயோத்திதாசன்
- ஈ.வெ.ரா
- ’சிந்தாமணியாம் திருக்குறள் படைத்தான் …’ என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் --------.
- வளையாபதி
- குண்டலகேசி
- திருத்தணிகையுலா
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- திருமால் குன்றத்தின் வேறுப்பெயர்-------.
- அழகர் மலை
- சுருளிமலை
- வேங்கைக்கானல்
- கொடைக்கானல்
- நெடுவேல் குன்றத்தின் வேறுப்பெயர்---------.
- அழகர் மலை
- சுருளிமலை
- வேங்கைக்கானல்
- கொடைக்கானல்
- இந்திரவிழா ஊரெடுத்தக் காதை இடம்பெற்றுள்ள காண்டம் எது?
- புகார் காண்டம்
- மதுரை காண்டம்
- வஞ்சி காண்டம்
- பாலக்காண்டம்
- இளங்கோவடிகள் எம்மரபைச் சேர்ந்தவர்?
- சேரர்
- சோழர்
- பாண்டியர்
- பல்லவர்
- சிலப்பதிகாரம் --------------- காதைகளைக் கொண்டது.
- 30
- 10
- 13
- 7
- கோவலனையும் கண்ணகியையும் இடைப்பட்ட வழியில் மதுரைக்கு
அழைத்துச்சென்றவர் ------.- அரவணடிகள்
- இளங்கோவடிகள்
- கவுந்தியடிகள்
- செங்குட்டுவன்
- சிலப்பதிகாரம் ------------ நூல் வகையைச் சேர்ந்தது.
- ஐம்பெருங்காப்பியம்
- ஐஞ்சிறுங்காப்பியம்
- சங்க இலக்கியம்
- பக்தி இலக்கியம்
- முத்தமிழ் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் காப்பியம் எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- மணிமேகலையும் சீவக சிந்தாமணியும்
- சீவக சிந்தாமணியும் வளையாபதியும்
- வளையாபதியும் குண்டலகேசியும்
- கரந்தை என்னும் புறத்திணை ------------.
- ஆநிரைகளை கவர்தல்
- ஆநிரைகளை மீட்டல்
- மதிலைக் காத்தல்
- மதிலைச் சுற்றி வளைத்தல்
- காஞ்சி என்னும் புறத்திணை ------------.
- மண்ணாசைக் காரணமாக போர்த்தொடுப்பது
- மண்ணைக் காப்பாற்ற எதிர்த்து போரிடுவது
- மதிலைக் காத்தல்
- மதிலைச் சுற்றி வளைத்தல்
- மதில் போர் பற்றிய புறத்திணைகள் -----------.
- வெட்சி, கரந்தை
- வஞ்சி, காஞ்சி
- நொச்சி, உழிஞை
- தும்பை, வாகை
- எதிரி நாட்டு மதிலைச் சுற்றி வளைத்தல், உள்ளிருந்து தன் நாட்டு மதிலை காத்தல் முறையே ----------, ------------- திணைகள் ஆகும்.
- வெட்சி, கரந்தை
- வஞ்சி, காஞ்சி
- நொச்சி, உழிஞை
- உழிஞை, நொச்சி
- வீரனைப் புகழ்ந்து பாடுவது ---------- திணை.
- வெட்சி
- வஞ்சி
- நொச்சி
- பாடாண்
- மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக்கொத்தாகப் பூக்கும் பூ ------ .
- வாகைப்பூ
- வஞ்சிப்பூ
- நொச்சிப்பூ
- பருத்திப்பூ
- உழிஞைக் கொடியின் வேறுப்பெயர் ---------.
- அவரை
- தூதுவளை
- பாலைக்கொடி
- முடக்கொற்றான்
- காஞ்சி என்பது ஒருவகை -----------.
- நெடுமரம்
- குறுமரம்
- செடி
- கொடி
No comments:
Post a Comment