வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்கள்
1. நினைவுச் சின்னங்கள்: கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், தஞ்சாவூர் பெரிய கோவில்.
2. நாணயத்தின் அளவு: டெல்லி சுல்தான் காலத்தின் ஒரு ஜிட்டல் நாணயம் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது.
3. சமய இலக்கியங்கள்:
o தேவாரம்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் இயற்றியது.
o திருவாசகம்: மாணிக்கவாசகர் இயற்றியது.
o பெரியபுராணம் (சேக்கிழார்): சோழர்கள் காலத்தியது.
4. வரலாற்று நூல்கள்:
o தபகத்-இ-நஸிரி (மின்கஜ் உஸ் சிராஜ்): நஸ்ருதின் மாமூதால் ஆதரிக்கப்பட்டவர்.
o தசுக்-இ-ஜாஹங்கீரி (ஜஹாங்கீர்): 17 ஆம் நூற்றாண்டு நூல்.
o தாரிக்-இ-பதானி (பதானி): 1595 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
வட இந்திய அரச வம்சங்கள் (ராஜபுத்திரர்கள், பாலர்)
1. அக்னிகுலத் தோன்றல்கள்: சோலங்கிகள் என அழைக்கப்பட்ட ராஜபுத்திரர்கள் - சாளுக்கியர்கள்.
2. பிரதிகார அரசர்கள்: வத்சராஜாவைத் தொடர்ந்து நாகபட்டர் மற்றும் ராமபத்ரா பொறுப்பேற்றனர்.
3. பால வம்சத்தின் வலிமை மிக்க அரசர்: ராமபத்திராவுக்குப் பிறகு அரியணை ஏறியவர் - மிகிரபோஜர்.
4. பௌத்த மத ஆதரவாளர்: சிறந்த பால அரசர் - தர்மபாலர்.
5. வரலாற்றாசிரியர் கூற்று: தர்மபாலர், தேவபாலர் காலத்தை வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க அத்தியாயங்கள் எனக் கூறியவர் - ஆர்.சி. மஜும்தார்.
6. பால வம்ச வீழ்ச்சி: முதலாம் மகிபாலரின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்டது.
ஓவியம் மற்றும் கட்டிடக்கலை
1. ஓவியப் பாணி: பிக்கனேர், ஜோத்பூர், மேவார், ஜெய்சால்மர், புரி ஆகிய இடங்களில் காணப்படுவது - ராஜஸ்தானி பாணி.
2. அரண்மனை அமைவிடம்: மான்சிங் அரண்மனை - குவாலியர்.
3. சமணக் கோவில்: அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவில் - வெண்மைநிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
டெல்லி சுல்தானியம் மற்றும் முகலாயர் படையெடுப்புகள்
1. சிந்துவின் தலைநகரம்: முகமது பின் காசிமால் கைப்பற்றப்பட்ட சிந்துவின் தலைநகரம் - அரோர்.
2. பூஜ்ஜியத்தின் முக்கியத்துவம்: இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் - அராபியர்கள்.
3. கஜினி மாமூதுவின் படையெடுப்புகள்:
o 1011: பஞ்சாபிலுள்ள நாகர்கோட் மற்றும் தானேஸ்வர் நகரங்களை சூறையாடினார்.
o 1018: மதுராவைக் கொள்ளையடித்தார்.
4. முதலாம் தரெய்ன் போர்: முகமது கோரிக்கு எதிராகப் போரிட்டவர் - பிருதிவிராஜ் சௌகான்.
5. ரக் ஷாபந்தன் விழா: 1905 வங்கப் பிரிவினையின் போது தொடங்கியவர் - ரவீந்திரநாத் தாகூர்.
சோழர் வம்சம்
1. பண்டைய சோழ அரசின் சிறப்பு: கரிகாலன் ஆட்சிக்காலத்தில் சிறப்பான இடத்தை வகித்தது.
2. சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் (9ஆம் நூற்றாண்டு): விஜயாலயன்.
3. ஸ்ரீவிஜய பேரரசைக் கைப்பற்றியவர்: முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படை.
4. உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டவர்: அதிராஜேந்திரன் (வீர ராஜேந்திரனின் மகன்).
5. முதலாம் ராஜராஜனின் மகள்: குந்தவை (சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார்).
6. சாளுக்கிய-சோழ வம்சத்தைத் தொடங்கியவர்: முதலாம் குலோத்துங்கன்.
7. இன்றைய தமிழகத்தில் பாண்டியர் ஆட்சியை நிறுவியவர் (1279): முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
8. உத்திரமேரூர் கிராமம்: காஞ்சிபுரம் மாவட்டம்.
9. சோழர் கால நிலவரி (காணிக்கடன்): மகசூலில் 3ல் 1பங்கு.
10. ஏரிக்கரைத் தடுப்பணை (கங்கை கொண்ட சோழபுரம்): முதலாம் ராஜேந்திர சோழன் உருவாக்கியது.
11. வணிக அமைப்புகள் ஒருங்கிணைப்பு: அஞ்சு-வண்ணத்தார் மற்றும் மணி-கிராமத்தார் இணைந்து - ஐநூற்றுவர், திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என அழைக்கப்பட்டனர்.
பாண்டியர் வம்சம்
1. ஆட்சியை மீட்டெடுத்தவர்கள்: களப்பிரர்களை வெற்றிகொண்டு தென்தமிழகத்தில் ஆட்சியை நிறுவியவர்கள் - பாண்டியர்கள் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு).
2. சைவத்திற்கு மாறிய அரசன்: அரிகேசரி (சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது).
3. பாண்டிய அரசின் முடிவு: இரண்டாம் ராஜசிம்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதால் கடுங்கோனால் எழுச்சி பெற்ற பாண்டிய அரசு முடிவுக்கு வந்தது (920இல்).
4. வெளிநாட்டுப் பயணி பதிவு: மார்கோபோலோ (சதி நிகழ்வுகள் மற்றும் அரசர்களின் பலதார மணத்தை பதிவு செய்துள்ளார்).
5. டெல்லிக்குத் தப்பிச்சென்ற இளவரசர்: சுந்தர பாண்டியன் (தந்தையார் மாறவர்மன் குலசேகரனைக் கொன்று).
6. பாண்டியர் கால நிர்வாகம்:
o அரசு செயலகம்: எழுத்து மண்டபம்.
o நாடுகளை நிர்வகித்தவர்: நாட்டார்.




No comments:
Post a Comment