வரலாறு மற்றும் நாகரிகம்
1. மானுடவியல் (Anthropology) என்ற சொல் பெறப்பட்ட கிரேக்க வார்த்தைகள்: Anthropos (மனிதன்) மற்றும் Logos (எண்ணங்கள்/காரணங்கள்).
2. History (வரலாறு) என்ற ஆங்கிலப் பதம் பெறப்பட்ட கிரேக்கச் சொல்: இஸ்டோரியா (Istoria).
3. வரலாற்றின் தந்தை: ஹெரோடோட்டஸ்.
4. "விசாரிப்பதன் மூலம் கற்றல்" என்ற பொருள் கொண்ட சொல்: இஸ்டோரியா.
5. மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்: செம்பு (தாமிரம்).
6. வெண்கலக் காலம் குறிப்பது: மக்கள் வெண்கலத்தாலான பொருட்களைப் பயன்படுத்திய காலம்.
7. உலகின் மிகப் பழமையான மெசபடோமியா நாகரிகம் முற்பட்ட ஆண்டுகள்: சுமார் 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
8. ஹரப்பா நாகரிகத்தை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்: சார்லஸ் மேசன்.
9. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் (ASI) முதல் நில அளவையாளர்: அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.
10. குரோ-மேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ள குகைகள்: லாஸ்காஸ் குகைகள் (பிரான்ஸ்).
11. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் தோன்றிய இடம்: கிழக்கு ஆப்பிரிக்கா.
12. ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள்: ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா.
13. புதிய கற்காலத்தைச் சேர்ந்த நினைவுக்கல் (Menhir) கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்: சிங்கரிபாளையம் (திருப்பூர் மாவட்டம்) மற்றும் வெம்பூர் (தேனி).
14. தொல்பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்கள் உள்ள மாவட்டங்கள்:
o கீழ்வலை - விழுப்புரம் மாவட்டம்.
o உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்.
o குமுதிபதி மற்றும் மாவடைப்பு - கோயம்புத்தூர் மாவட்டம்.
வேதகாலம் மற்றும் மதங்கள்
1. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் அரசியல் அமைப்பின் அடிப்படை: இரத்த உறவுகள்.
2. ரிக் வேத கால ஆரியர்கள் பயன்படுத்திய நாணயங்கள்: நிஷ்கா, சத்மனா (தங்கம்) மற்றும் கிருஷ்ணாலா (வெள்ளி).
3. "நாளந்தா" என்னும் சொல்லின் பொருள்: நா + அலம் + தா (வற்றாத அறிவை அளிப்பவர்).
4. சமண மதத்தின் இறுதி லட்சியம்: அனைத்து உயிரினங்களும் முக்தி அடைவது.
5. பௌத்த மதத்தை நிறுவிய புத்தர் ஞானம் பெற்ற வயது: 35 ஆம் வயது (துறவறம் மேற்கொண்டது 29 ஆம் வயதில்).
மகதப் பேரரசு மற்றும் மௌரியர்கள்
1. ஹரியங்கா வம்சத்தைத் தோற்றுவித்தவர்: பிம்பிசாரர்.
2. மகதப் பேரரசின் புகழ் பெற்ற நான்கு அரச வம்சங்கள்: ஹரியங்கா, சிசுநாக, நந்த, மற்றும் மௌரிய வம்சம்.
3. மகதத்தின் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர்: உதயன்.
4. மகாபத்ம நந்தரைத் தொடர்ந்து ஆட்சி செய்த அவருடைய எட்டு மகன்கள் அழைக்கப்பட்ட விதம்: நவநந்தர்கள்.
5. சந்திரகுப்த மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி: பத்ரபாகு.
6. கலிங்கப் போரின் பயங்கரத்தை விளக்கும் அசோகரின் கல்வெட்டு: 13-வது பாறைக் கல்வெட்டு.
7. அசோகரை தர்மத்தின் வழிக்கு மாற்றியதாகக் கூறப்படும் பௌத்த துறவி: உபகுப்தர்.
8. கலிங்கப் போருக்குப் பின் அசோகர் தர்மத்தின் வழியைப் பின்பற்றியதை விளக்கும் பாறைக் கல்வெட்டு: 13-வது பாறைக் கல்வெட்டு.
சுங்கர், கன்வர் மற்றும் குஷாணர்கள்
1. கலிங்க அரசர் காரவேலர் எந்த அரசர்களின் சமகாலத்தவர்: சுங்க அரசர்களின் சமகாலத்தவர்.
2. சுங்க வம்சத்தின் கடைசி அரசரான தேவபூதியை கொன்றவர்: வாசுதேவ கன்வர்.
3. கன்வ வம்சத்தின் கடைசி அரசரான சுசர்மனை தோற்கடித்தவர்: சிமுகா (சாதவாகன மரபைத் தோற்றுவித்தவர்).
4. பாக்டீரியாவின் அரசன் மினாண்டரின் படையை முறியடித்த சுங்க அரசர்: புஷ்யமித்திர சுங்கர்.
5. அக்னிமித்திரனின் மகன் வசுமித்திரர் கிரேக்கர்களைத் தோற்கடித்த நதிக்கரை: சிந்து நதிக்கரை.
6. குஷாணர்கள் எந்த பழங்குடி இனத்தின் பிரிவினர்: யூச்-சி (Yueh-chi) பழங்குடி இனம்.
7. குஷாணப் பேரரசர் கனிஷ்கர் பின்பற்றிய பௌத்தப் பிரிவு: மகாயான பௌத்தம்.
8. மினாண்டர் (பாக்டிரிய அரசன்) மற்றும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையேயான உரையாடல் தொகுக்கப்பட்ட நூல்: மிலிந்த பன்கா.
குப்தர்கள்
1. குப்த அரச வம்சத்தை நிறுவியதாக நம்பப்படுபவர்: ஸ்ரீகுப்தர் (இவருக்குப் பின் அரசரானவர் கடோத்கஜர்).
2. இரண்டாம் சந்திரகுப்தரின் அவைக்களப் புலவர்: காளிதாசர்.
3. காளிதாசரின் புகழ் பெற்ற நாடகங்கள்: சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம்.
4. சமுத்திரகுப்தரின் புகழைப் பாடும் அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்: ஹரிசேனர்.
5. சமுத்திரகுப்தருக்கு வழங்கப்பட்ட பட்டம் (கவிதை, இசை ஆர்வம் காரணமாக): கவிராஜா.
6. குப்தர்களின் ஆட்சியின் போது உடன்கட்டை ஏறும் வழக்கம் (சதி): ஆம், பின்பற்றப்பட்டது.
7. குப்தர்கள் காலத்தில் உலோகம் உருக்கும் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்: மெக்ராலி இரும்புத் தூண் மற்றும் சுல்தான்கஞ்ச் செப்புச் சிலை (7 1/2 அடி).
வட இந்திய அரசுகள்
1. ஹர்ஷவர்த்தனரின் தந்தை பிரபாகர வர்த்தனரின் மறைவிற்குப் பின் அரியணை ஏறியவர்: ராஜ்யவர்த்தனர்.
2. ஹர்ஷர் ஆதரித்து வளர்த்த மதங்கள்: பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் வேத மதத்தையும் வளர்த்தார்.
தென்னிந்திய அரசுகள்
1. களப்பிரர்களின் காலம் (கி.பி. 3 - கி.பி. 6 நூற்றாண்டு) தமிழக வரலாற்றில் வர்ணிக்கப்படுவது: இருண்ட காலம்.
2. களப்பிரர்களின் காலத்தில் இயற்றப்பட்ட புகழ்பெற்ற தமிழ் இலக்கண இலக்கிய நூல்: முத்தொள்ளாயிரம் (மற்றும் சீவக சிந்தாமணி).
3. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கு "சித்திரகாரப்புலி" என்ற பட்டம் வழங்கப்பட்ட காரணம்: ஓவியக் கலையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு.
4. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ரதங்கள் எந்தப் பல்லவ மன்னனின் கட்டிடக்கலைப் பாணியைச் சேர்ந்தவை: மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்) பாணி.
5. முதலாம் புலிகேசியின் சிறப்பைக் கூறும் 'ஐகோல் கல்வெட்டை' இயற்றியவர்: இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் ரவிகீர்த்தி.
6. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவிய தந்திதுர்க்கருக்குப் பின் ஆட்சிக்கு வந்த முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கட்டிய கோயில்: கைலாசநாதர் கோயில்.
7. ராஷ்டிரகூடர்களின் திறமை வாய்ந்த கடைசி அரசர்: மூன்றாம் கிருஷ்ணர்.
8. மூன்றாம் கிருஷ்ணர் இராமேஸ்வரத்தில் கட்டிய கோயில்: கிருஷ்ணேஸ்வரர் கோயில்.
9. சங்க காலத்தில் சோழர்களின் துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம்: பூம்புகார்.
தமிழ்நாடு மற்றும் உள்ளாட்சி
1. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சதவிகிதம்: 60 சதவிகிதம்.
2. மதுரை மாநகரம் "தூங்கா நகரம்" என அழைக்கப்படக் காரணமாக விளங்கிய அங்காடிகள்: நாளங்காடி மற்றும் அல்லங்காடி.
3. தமிழ்நாட்டில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்ட மாவட்டம்: விழுப்புரம் மாவட்டம்.
4. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட உள்ளாட்சி அமைப்பு: நகராட்சி.
5. கிராம சபை கூடும் கூடுதல் நாட்கள் (குறிப்பிட்டவை தவிர): மே 1 (தொழிலாளர் தினம்).
6. மாவட்ட ஊராட்சி (District Panchayat) தோராயமாக ஒரு பகுதியாகப் பிரிக்கப்படும் மக்கள் தொகை: 50,000 மக்கள் தொகைக்கு ஒன்று.
7. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவதற்குள் இடையில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப நடக்கும் தேர்தல்: இடைத்தேர்தல்.
8. தேசிய ஊராட்சி தினம் கொண்டாடப்படும் நாள்: ஏப்ரல் 24.
9. சென்னை மாநகராட்சி (இந்தியாவின் மிகப்பழமையான உள்ளாட்சி அமைப்பு) உருவாக்கப்பட்ட ஆண்டு: 1688.
விளையாட்டு
1. செஸ் விளையாட்டில் 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானவர்: விஸ்வநாதன் ஆனந்த்.
2. 2008 இல் பிரான்ஸின் கேனஸ் நகரில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை: செ. இளவழகி.
3. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 1991-92-ல் பெற்ற முதல் விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்.
பிற தகவல்கள்
1. இந்தியாவின் தேசிய ஊர்வன விலங்கு (18 அடி வரை வளரக்கூடியது): ராஜநாகம் (கருநாகம் / King Cobra).
2. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவுக்கும் முசிறிக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எழுதப்பட்ட பொருள்: பாப்பிரஸ் இலை.




No comments:
Post a Comment