தனிவினையும் கூட்டுவினையும்
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனிவினை, கூட்டுவினை என இருவகைப்படுத்தலாம்.
தனிவினை
படி படியுங்கள் படிக்கிறார்கள்.
மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். இவற்றில் படி என்னும் வினையடியும் சில ஓட்டுகளும் உள்ளன. படி என்னும் வினையடி , பகாப்பதம் ஆகும். அதை மேலும் பொருள் தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்க முடியாது. இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளை கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.
கூட்டுவினை
ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்.
மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன அவற்றின் வினையடிகள். அவை பகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில் கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.
கூட்டுவினைகள் பொதுவாக மூன்று வகையாக ஆக்கப்படுகின்றன.
1) பெயர் + வினை = வினை
தந்தி + அடி = தந்தியடி
ஆணை + இடு = ஆணையிடு
கேள்வி + படு = கேள்விப்படு
2) வினை + வினை = வினை
கண்டு + பிடி = கண்டுபிடி
சுட்டி + காட்டு = சுட்டிக்காட்டு
சொல்லி + கொடு = சொல்லிக்கொடு
3) இடை + வினை = வினை
முன் + ஏறு = முன்னேறு
பின் + பற்று = பின்பற்று
கீழ் + இறங்கு = கீழிறங்கு
ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை, முதல் வினை (MAIN VERB) எனப்படும். ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும்.
கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும். துணைவினை, வினையடி வடிவில் இருக்கும். துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும். தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.
துணைவினைகளின் பண்புகள்
1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
தற்காலத் தமிழில் ஆம், ஆயிற்று, இடு, ஒழி, காட்டு, கூடும், கூடாது, கொடு, கொண்டிரு, கொள், செய், தள்ளு, தா, தொலை, படு, பார், பொறு, போ, வை, வந்து, விடு, வேண்டாம், முடியும், முடியாது, இயலும், இயலாது, வேண்டும், உள் போன்ற பல சொற்கள் துணைவினைகளாக வழங்குகின்றன.
1.
பகுபதமாக உள்ள வினையடிகளை ....... வினையடிகள் என்பர்.
அ) தனி
ஆ) கூட்டு
இ) முதல்
ஈ) துணை
2.
கூட்டுவினைகள் பொதுவாக........வகையாக ஆக்கப்படுகின்றன.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
3.
........ மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம்
அதிகமாக உள்ளது.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) திசை
ஈ) வட
4.
ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருள் தரும் வினை
......... வினை எனப்படும்.
அ) தனி
ஆ) கூட்டு
இ) முதல்
ஈ) துணை
5.
............ வினை, வினையடி வடிவில் இருக்கும்
அ) தனி
ஆ) கூட்டு
இ) முதல்
ஈ) துணை
6.
......... வினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
அ) தனி
ஆ) கூட்டு
இ) முதல்
ஈ) துணை
7.
தமிழில் ஏறத்தாழ ...... துனைவினைகள் உள்ளன.
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
8.
கூட்டுவினையின் முதல் வினை ........ அல்லது ......... என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
அ) செய, செய்து
ஆ) செய், செய
இ) செய்து, செய்பு
ஈ) செய்யூ, செய்யிய
9.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்க.
அ) தந்தியடி
ஆ) சுட்டிக்காட்டு
இ) ஓடப் பார்த்தேன்
ஈ) முன்னேறு
10.
‘இரு’ என்பதன் துணைவினைத் தொடர் எது?
அ) புத்தகம் மேசையில் இருக்கிறது.
ஆ) நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்.




No comments:
Post a Comment