Breaking

Sunday, April 5, 2026

9TH TAMIL - இராவண காவியம்


நூல் வெளி 

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

பகுபத உறுப்பிலக்கணம்


பருகிய = பருகு+இன்+ய்+அ;

பருகு - பகுதி;
இன்- இறந்தகால இடைநிலை (ன் கெட்டது விகாரம்);
ய் -உடம்படுமெய்; 
அ --பெயரெச்ச விகுதி

பூக்கும் = பூ + க் + க் + உம்;

பூ - பகுதி; 
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை; 
உம் - வினைமுற்று விகுதி


அருஞ்சொற்பொருள்

  • மைவனம் = மலைநெல்
  • முருகியம் = குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை = பூக்களை உடைய கிளை
  • சிறை = இறகு
  • சாந்தம் = சந்தனம்
  • பூவை = நாகணவாய்ப் பறவை
  • பொலம் = அழகு
  • கடறு = காடு
  • முக்குழல் = கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
  • பொலி = தானியக்குவியல்
  • உழை = ஒரு வகை மான்.
  • வாய்வெரீஇ = சோர்வால் வாய் குழறுதல்
  • குருளை = குட்டி
  • இனைந்து = துன்புறுதல்
  • உயங்குதல் = வருந்துதல்
  • படிக்குஉற = நிலத்தில் விழ
  • கோடு = கொம்பு
  • கல் = மலை
  • முருகு = தேன், மணம், அழகு
  • மல்லல் = வளம்
  • செறு = வயல்
  • கரிக்குருத்து = யானைத்தந்தம்
  • போர் = வைக்கோற்போர்
  • புரைதப = குற்றமின்றி.
  • தும்பி = ஒருவகை வண்டு
  • துவரை = பவளம்
  • மரை = தாமரை மலர்
  • விசும்பு = வானம்
  • மதியம் = நிலவு

இலக்கணக்குறிப்பு

  • பைங்கிளி = பண்புத்தொகை
  • பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும் = எண்ணும்மைகள்.
  • இன்னிளங்குருளை = பண்புத்தொகை
  • அதிர்குரல் = வினைத்தொகை
  • மன்னிய = பெயரெச்சம்
  • வெரீஇ = சொல்லிசை அளபெடை
  • கடிகமழ் = உரிச்சொற்றொடர்
  • மலர்க்கண்ணி = மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை;
  • எருத்துக்கோடு = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கரைபொரு = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மரைமுகம் = உவமைத்தொகை
  • கருமுகில் = பண்புத்தொகை
  • வருமலை = வினைத்தொகை

இராவண காவியம் நூல் குறிப்பு

9TH TAMIL இராவண காவியம்
  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • “தனித்தமிழ்ப் பெருங்காப்பியம்” எனப்படும் நூல் = இராவண காவியம்.
  • இராவண காவியம் நூலில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = 5.
  • இராவண காவியம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3100.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
  • தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
  • இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

இராவண காவியம் நூல் பற்றி அறிஞர் அண்ணா

9TH TAMIL இராவண காவியம்
  • “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா.

புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு

  • இராவண காவியம் நூலின் ஆசிரியர் = புலவர் குழந்தை.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

கோர்வை/கோவை

  • கோ என்பது வேர்ச்சொல்.
  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா; ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

No comments:

Post a Comment