அருஞ்சொற்பொருள்
- தீர்வன = நீங்குபவை
- உவசமம் = அடங்கி இருத்தல்
- நிழல்இகழும் = ஒளிபொருந்திய
- பேர்தற்கு = அகற்றுவதற்கு
- திரியோகமருந்து = மூன்று யோகமருந்து
- தெளிவு = நற்காட்சி
- திறத்தன = தன்மையுடையன
- கூற்றவா = பிரிவுகளாக
- பூணாய் = அணிகலன்களைஅணிந்தவளே
- பிணி = துன்பம்
- ஓர்தல் = நல்லறிவு
- பிறவார் = பிறக்க மாட்டார்.
நீலகேசி கூறும் கருத்துக்கள்
- நீலகேசி கூறும் நோயின் வகைகள் = மூன்று.
- மருந்தினால் நீங்கும் நோய்கள்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்
- அடங்கி இருப்பன போல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள்ளே இருந்து துன்பம் தருவன.
- நீலகேசி கூறும் மருந்துகள் = மூன்று
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லொழுக்கம்
நீலகேசி நூல் குறிப்பு
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
- இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
- நீலகேசி நூலில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = பத்து.
- சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
- நீலகேசி ஒரு தருக்க நூல்.
- நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
1. சமன சமயக் கருத்துகளை
வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்.
அ) குண்டலகேசி ஆ) நீலகேசி
இ) உதயனகுமார காவியம் ஈ) நாககுமார
காவியம்
2. நீலகேசியில் அமைந்துள்ள
சருக்கங்களின் எண்ணிக்கை.
அ) மூன்று ஆ) எட்டு இ) ஒன்பது ஈ) பத்து
3. நீலகேசி கூறும்
நோயின் வகைகள்
அ) மூன்று ஆ) எட்டு இ) ஒன்பது ஈ) பத்து
4. நீலகேசியின் ஆசிரியர்
பெயர்.
அ) கந்தியார் ஆ) வர்த்தமான தேவர்
இ) திருத்தக்க
தேவர் ஈ) அறியப்படவில்லை
5. பொருந்தாததைத்
தேர்ந்தெடு.
அ) குண்டலகேசி ஆ) நீலகேசி
இ) வளையாபதி ஈ) சீவகசிந்தாமணி
6. ‘தீர்வனவும் தீராத்
திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும்
போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.
அ) கலித்தொகை ஆ) நீலகேசி
இ) திரிகடுகம் ஈ) திருமூலம்
7. நல்லறிவு, நற்காட்சி,
நல்லொழுக்கம் என்பன......... தீர்க்கும் மருந்தாக நீலகேசி குறிப்பிடுகிறது.
அ) பிறவித் துன்பம் ஆ) குற்றங்கள்
இ) குறைகள் ஈ) அனைத்தும்
8. அகற்றுவதற்கு அறியவை
என எவற்றைக் குறிப்பிடுகிறது நீலகேசி.
அ) பாவங்கள் ஆ) பிறவித் துன்பங்கள்
இ) புன்னியங்கள் ஈ) உறவுகள்
9. பொருந்தாத ஒன்றைத்
தேர்ந்தெடு.
அ) நற்சிற்தனை ஆ) நல்லறிவு
இ) நற்காட்சி ஈ) நல்லொழுக்கம்
( விடையாக
வருவது தவிர ஏனையவை, பிறவித் துன்பங்களிலிருந்து நீக்குபவையாக நீலகேசி குறிப்பிடுகிறது)
10. ‘ஓர்தல் தெளிவோடு
ஒழுக்கம் இவையுண்டார், போர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே’ எனக் குறிப்பிடும்
நூல்
அ) கலித்தொகை ஆ) நீலகேசி
இ) திரிகடுகம் ஈ) திருமூலம்




No comments:
Post a Comment