Breaking

Sunday, April 26, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 30





உள்ளாட்சி மற்றும் மக்களாட்சி:

1. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை: ரிப்பன் பிரபு.

2. இந்தியாவின் மிகப்பழமையான உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு: 1688.

3. "தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம்" நிறைவேற்றப்பட்ட ஆண்டு: 1994 ஆம் ஆண்டு.

4. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கால அளவு: 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

5. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக தமிழக அரசு உயர்த்திய ஆண்டு: 2016 (33% லிருந்து).

6. பேரூராட்சி அமைப்பின் நிர்வாக அலுவலர்: செயல் அலுவலர் (EO).

7. தேசிய ஊராட்சி தினம் (National Panchayati Raj Day): ஏப்ரல் 24.

8. உலக மக்களாட்சி தினத்தை ஐ.நா சபை அறிவித்த ஆண்டு: 2007 ஆம் ஆண்டு.

9. உலக மக்களாட்சி தினம் கொண்டாடப்படும் தேதி: செப்டம்பர் 15.

10. நேரடி மக்களாட்சியில் சட்டங்களை உருவாக்குபவர்கள்: மக்கள் (நேரடியாக).

சர்வதேச மற்றும் பொது கேள்விகள்:

1. "A.M" (Anti Meridiem) என்பதன் பொருள்: நண்பகலுக்கு முன்னதாக.

2. "P.M" (Post Meridiem) என்பதன் பொருள்: நண்பகலுக்குப் பிறகு.

3. ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை (AH1): டோக்கியோ முதல் துருக்கி வரை.

4. பனாப் (Banaue) படிக்கட்டு முறை நெல் விவசாயம் பிரபலமானது: பிலிப்பைன்ஸ் நாட்டில்.

5. சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day): டிசம்பர் 11.

6. செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டங்களை வென்ற ஆண்டுகள்: 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012.

7. காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐ 'சர்வதேச அகிம்சை நாள்' ஆக ஐ.நா சபை அங்கீகரித்த ஆண்டு: 2007 ஆம் ஆண்டு.

8. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் (Tsunami) அலைகளின் உயரம்: தோராயமாக 30 மீட்டர் உயரம் வரை.

9. சுனாமியை முன்கூட்டியே அறிய உதவும் அமைப்பான INCOIS: ஐதராபாத்தில் அமைந்துள்ளது (2007ல் அமைக்கப்பட்டது).

10. உலகின் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடான ஐஸ்லாந்தில் மக்கள் அடர்த்தி: ஒரு சதுர கி.மீட்டருக்கு 3 நபர்கள்.

11. ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப்புனுகின் விலை: தோராயமாக 63,000 அமெரிக்க டாலர்.

12. 1884 ஆம் ஆண்டு தீர்க்கக் கோடுகள் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்ற இடம்: வாஷிங்டன் (அமெரிக்கா).

13. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம்: கன்னியாகுமரி (91.75%).

14. பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதி: மரியானா அகழி (10,994 மீட்டர்).

No comments:

Post a Comment