Breaking

Saturday, April 25, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 07


வரலாறு மற்றும் நாகரிகங்கள்:

1.     வரலாற்றுத் தொடக்க காலம் (Proto-History): வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்.

2.     'தம்மா' (பிராகிருதம்): சமஸ்கிருதத்தில் 'தர்மா', இதன் பொருள் 'அறநெறி'.

3.     மனிதன் புவி எங்கும் பரவிய காலம்: 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.

4.     ஹோமோ ஹேபிலிஸ் மனிதனின் உடல் அமைப்பு: இறுகப்பற்றுவதற்கு வசதியாகப் பெரிய கால் விரல்களையும், முன்பக்கம் நீட்சி குறைந்த தாடையையும் பெற்றிருந்தான்.

5.     மானுடவியல் (Anthropology) - 'Logos' பொருள்: எண்ணங்கள்.

6.     பீகிங் மனிதன்: சீனா.

7.     ஹைடல்பர்க் மனிதன்: லண்டன்.

8.     தொல் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படும் கீழ்வலை: விழுப்புரம் மாவட்டம்.

9.     மெசபடோமியா நாகரிகத்தின் தோராயமான காலம்: 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

10.   ஹரப்பா நாகரிகம் - இரயில் பாதை அமைக்கப்பட்ட நகரங்கள் (1856): லாகூரில் இருந்து கராச்சிக்கு.

11.   ஹரப்பா நாகரிகம் - நகரங்கள் மற்றும் கிராமங்களின் எண்ணிக்கை: 6 பெரிய நகரங்கள், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள்.

12.   வெண்கலக்காலம்: மக்கள் வெண்கலத்தான பொருட்களைப் பயன்படுத்திய காலம்.

13.   மொஹஞ்ச-தாரோ - பரந்து விரிந்த கூடம்: கூட்ட அரங்கு (20 தூண்கள், 4 வரிசைகள்).

14.   சுமேரிய அரசன் அணிகலன் வாங்கிய இடம் (மெலுக்கா): நாரம்-சின்.

15.   'நடன மாது' வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்: மொஹெஞ்ச-தாரோ.

16.   ஒரு பொருளின் வயதை அறியப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்: கார்பன்-14.

17.   கிசே பிரமிடு: குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டது.

18.   ஊர் ஜிகரட் (மெசபடோமியா): ஊர் நம்மு என்ற அரசனால் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கட்டிடம்.

19.   அபு சிம்பல் இரட்டைக் கோயில்கள்: இரண்டாம் ராமெசிஸ் என்ற எகிப்து அரசன் கட்டியது.

20.   தானியக் களஞ்சியம் (செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்): ராகிகர்கி, ஹரியானா மாநிலம்.

21.   பாக்கிஸ்தானில் இன்றும் காணப்படும் பாண்டிய துறைமுகங்களின் பெயர்கள்: கொற்கை, தொண்டி.

22.   மெஹெர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடம்: பலுச்சிஸ்தான் மாநிலம் (பாகிஸ்தான்).

சங்க காலம் மற்றும் வேதம்:

1.     இரட்டைக் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை.

2.     பட்டினப்பாலை நூலின் ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

3.     மதுரை அங்காடிகள்: நாளங்காடி (பகல்), அல்லங்காடி (இரவு).

4.     காஞ்சியில் வாழ்ந்த புகழ்பெற்ற சான்றோர்கள்: தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர்.

5.     சோழநாடு மற்றும் சேரநாட்டின் புகழுக்குரியவை: சோழநாடு - சோறுடைத்து, சேரநாடு - வேழமுடைத்து.

6.     ரிக் வேத காலத்தில் 'விஸ்' அமைப்பின் தலைவர்: விசயபதி.

7.     வேதகால இனக்குழு மன்றங்களில் மிகவும் பழமையானது (அரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது): விதாதா.

8.     வேதகால மன்றங்கள்: சபா (மூத்தோர்களைக் கொண்டது), சமிதி (மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு).

9.     வேதகால சமூக அமைப்பு: தந்தை வழிச் சமூகம்.

10.   ஆரியர்கள் அல்லாத கருப்பு நிற மக்கள் (வேத காலம்): தசயுக்கள், தாசர்கள்.

11.   ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்: தங்கம் (ஹிரண்யா), இரும்பு (சியாமா), தாமிரம்/செம்பு (அயாஸ்).

12.   வேத காலத்தில் குறைவான பெண் தெய்வங்கள்: அதிதி, உஷா.

13.   வேதகால நான்கு ஆஸ்ரமங்களில் 'கிரகஸ்தம்' என்பதன் பொருள்: திருமண வாழ்க்கை.

தமிழகத்தின் தொன்மை:

1.     பண்டைய தமிழகத்தின் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள்: பெருங்கற்காலப் பண்பாட்டின் கூறு.

2.     தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் (கீழடிக்கு அடுத்தபடியாக): பொருந்தல் - திண்டுக்கல் மாவட்டம்.

3.     பையம்பள்ளியில் கிடைத்த சான்றுகள்: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள்.

4.     பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற 'கொடுமணல்' அமைவிடம்: ஈரோடு மாவட்டம்.

5.     மென்ஹிர் எனப்படும் நினைவுத் தூண்கள் (திருப்பூர் மாவட்டம்): சிங்கரிபாளையம்.

சமணம் மற்றும் பௌத்தம்:

1.     சமண நூல்கள் மற்றும் பௌத்த நூல்களின் பெயர்கள்: சமண நூல்கள் - அங்கங்கள், பௌத்த நூல்கள் - திரிபிடகங்கள் மற்றும் ஜாதகங்கள்.

2.     சமண மதத்தின் அடிப்படைத் தத்துவம்: அகிம்சை அல்லது அறவழி.

3.     சமண நடத்தை விதிகள்: அஸ்தேய (திருடாமை), பிரம்மச்சரியா (திருமணம் செய்து கொள்ளாமை).

4.     சுவேதாம்பரர்கள் பயன்படுத்திய ரஜோகரனா: கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்.

5.     மதுரைக்கு அருகில் சமணர் குகைகள் (பாண்டவர் படுக்கை) காணப்படும் கலிஞ்சமலை: அரிட்டாப்பட்டி கிராமம்.

6.     சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் சமணத் துறவி: கவுந்தியடிகள்.

7.     புத்தரை வளர்த்த சிற்றன்னை: கௌதமி.

8.     புத்தர் ஆழ்ந்த தியானம் மேற்கொண்ட மரம்: அரசமரம்.

9.     பௌத்த விகாரைகள்: மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழும் இடங்கள்.

10.   ஸ்தூபி: புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னம்.

11.   ஹீனயானம்: தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நோக்கம் என்று நம்பிய பௌத்தப் பிரிவு.

12.   புத்தரைப் பற்றிய 'ஜாதக கதைகள்' ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ள குகைகள்: அஜந்தா குகைகள் (மகாராஷ்டிரா).

13.   நான்காவது பௌத்த மாநாட்டைக் காஷ்மீரில் கூட்டிய அரசர்: அரசர் கனிஷ்கர்.

14.   காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த தர்க்கவியல் அறிஞர்: தின்னகர்.

  1. மகதப் பேரரசுகள்:
  2. சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த பண்டைய மகத அரசர்: காலசோகா.
  3. நவநந்தர்கள்: மகாபத்ம நந்தரைத் தொடர்ந்து ஆட்சி செய்த அவருடைய எட்டு மகன்கள்.
  4. சந்திரகுப்த மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி: பத்ரபாகு.
  5. பிந்துசாரரை கிரேக்கர்கள் அழைத்த பெயர் ('எதிரிகளை அழிப்பவன்' எனப் பொருள்படும்): அமிர்தகதா.
  6. அசோகர் தர்மத்தைப் பரப்புவதற்காக நியமித்த புதிய அதிகாரிகள்: தர்ம மகாமாத்திரர்கள்.
  7. மௌரியர் காலத்தில் நிலவரியாக வசூலிக்கப்பட்ட 'பாகா'வின் அளவு: மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  8. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதாவைக் கொன்றவர்: புஷ்யமித்ர சுங்கர் (படைத் தளபதி).

சங்க கால மூவேந்தர்கள் மற்றும் பிறர்:

1.     சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்கள்: அந்திரன், திதியன், நன்னன்.

2.     சங்க காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் கடவுள்கள்: குறிஞ்சி - முருகன், முல்லை - மாயோன்.

3.     சங்க காலத்தில் மருதம் மற்றும் நெய்தல் நில மக்களின் தொழில்கள்: மருதம் - வேளாண்மை, நெய்தல் - மீன்பிடித்தல்/உப்பு உற்பத்தி.

4.     சங்க காலப் பெண்பாற்புலவர்கள்: அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.

5.     வீரக்கல் அல்லது நடுகல்: போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடப்பட்ட கற்கள்.

6.     முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்ட மூத்த பிளினியின் நூல்: இயற்கை வரலாறு (Natural History).

No comments:

Post a Comment