Breaking

Saturday, April 25, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 14




சமணம் மற்றும் பௌத்தம்

1. கி.மு. 6 ஆம் நூற்றாண்டை 'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் யார்?
விடை: வில் டூராண்ட்.

2. மகாவீரர் பவபுரி என்ற இடத்தில் இறந்தார், அந்த இடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை: பீகார்.

3. சமண மதத்தில் 'தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது' என்ற பொருளைத் தரும் சமஸ்கிருதச் சொல் எது?
விடை: ஜினா.

4. மகாவீரர் பண்டைய எந்த மரபுகளை மறு ஆய்வு செய்தார்?
விடை: சிரமானிய (Siramanic) மரபுகளை.

5. சமண மதத்தில் இறுதி தீர்ப்பு என்ற நம்பிக்கை உள்ளதா?
விடை: இல்லை, சமணம் அதனை மறுக்கிறது.

6. சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் 'அறவோர் பள்ளி' என எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
விடை: மணிமேகலை.

7. பௌத்த மதத்தை நிறுவிய கௌதம புத்தர் எந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்?
விடை: சாக்கிய அரச குடும்பம்.

8. புத்தர் தனது எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார்?
விடை: 29 ஆம் வயதில்.

9. பௌத்த மதத்தில் ஒரு பௌத்தக் கோவில் அல்லது தியானக்கூடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சைத்தியம்.

10. ஹீனயானம் என்ற பௌத்தப் பிரிவு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தேரவாதம்.

11. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றி படிக்க எங்கு பல ஆண்டுகள் தங்கியிருந்தார்?
விடை: நாளந்தா பல்கலைக்கழகம்.

12. பௌத்த ஜாதகக் கதைகள் ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அஜந்தா குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளன?
விடை: மகாராஷ்டிரா (ஔரங்காபாத்தில்).

13. சீனாவில் கன்பூசியனிசத்தை தோற்றுவித்தவர் யார்?
விடை: கன்பூசியஸ் (குங் பு த்சே).

மகாஜனபதங்கள் மற்றும் மௌரியப் பேரரசு

1. பண்டைய இந்தியாவின் கண-சங்கங்களில் 'சங்கா' என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: மன்றம்.

2. 'கணா' என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
விடை: சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களை.

3. 16 மகாஜனபதங்களில் ஒன்றான 'அவந்தி'யின் முக்கிய பகுதி அல்லது தலைநகரம் எது?
விடை: உஜ்ஜைனி.

4. மகாஜனபதங்களில் ஒன்றான 'கோசலம்' எந்தப் பகுதியில் அமைந்திருந்தது?
விடை: கிழக்கு உத்திரப்பிரதேசம்.

5. மகாஜனபதங்களில் ஒன்றான 'வத்சம்' எங்கு அமைந்திருந்தது?
விடை: கோசாம்பி (அலாகாபாத்).

6. முதல் பௌத்த மாநாட்டைக் கூட்டிய அஜாதசத்ரு யாருடைய சமகாலத்தவர் ஆவார்?
விடை: புத்தரின் சமகாலத்தவர்.

7. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்ட மகத அரசர் யார்?
விடை: உதயன்.

8. நந்த வம்சத்தின் முதல் அரசர் யார்?
விடை: மகாபத்ம நந்தர்.

9. நந்த வம்சத்தின் கடைசி அரசனான தனநந்தர் யாரால் வெற்றி கொள்ளப்பட்டார்?
விடை: சந்திரகுப்த மௌரியர்.

10. மௌரியப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனை கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன?
விடை: 570 கண்காணிப்பு கோபுரங்கள்.

11. சந்திரகுப்த மௌரியர் சமணச் சடங்கான 'சல்லேகனா' செய்து எங்கு உயிர் துறந்தார்?
விடை: சரவணபெலகொலா (கர்நாடகா).

12. பிந்துசாரர் தனது மகன் அசோகரை எந்தப் பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
விடை: உஜ்ஜைனி.

13. அசோகரின் கல்வெட்டுகளில் வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை எது?
விடை: கரோஸ்தி.

14. கரோஸ்தி மொழியில் அரசருடைய பட்டப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள குஷாண அரசர் யார்?
விடை: இரண்டாம் கட்பிசஸ்.

15. நகர நிர்வாகத்திற்கு உதவியாக இருந்த அதிகாரிகளான ஸ்தானிகா, கோபா என்பவர்கள் யாருக்குக் கீழ் பணியாற்றினர்?
விடை: நகரிகா.

சங்க காலம்

1. 'The Periplus of Erythrean Sea' (எரித்திரியக்கடலின் பெரிப்ளஸ்) என்பது எதற்கான சான்று?
விடை: சங்க காலம் பற்றிய அயல்நாட்டவர் குறிப்பு.

2. கரூர்க்கு அருகே உள்ள எந்தக் கல்வெட்டு சங்க காலத்தைச் சேர்ந்தது?
விடை: புகளுர் கல்வெட்டு.

3. சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்த காலம் எது?
விடை: சங்க காலம்.

4. இளஞ்சேட்சென்னி, கோச்செங்கணான், பெருநற்கிள்ளி ஆகியோர் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்?
விடை: சோழர் வம்சம்.

5. நெடியோன், நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்?
விடை: பாண்டிய வம்சம்.

6. மூவேந்தர்களில் 'ஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை' போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டவர்கள் யார்?
விடை: சேரர்கள்.

7. மூவேந்தர்களில் 'சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன்' போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டவர்கள் யார்?
விடை: சோழர்கள்.

8. மூவேந்தர்களில் 'மாறன், வழுதி, செழியன், தென்னர்' போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டவர்கள் யார்?
விடை: பாண்டியர்கள்.

9. சோழர்களின் அடையாள மாலை மற்றும் தலைநகரங்கள் எவை?
விடை: அத்திப்பூ மாலை, உறையூர்/புகார்.

10. சங்க காலத்தில் கிராமத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடை: கிழார்.

11. சங்க காலத்தில் பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை: அரசுக்கட்டிலேறுதல் அல்லது முடிசூட்டுவிழா.

12. பட்டத்து இளவரசருக்கு இளையோர் சங்க காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை: இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல்.

13. சங்க காலத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: படைக்கொட்டில்.

14. சங்க கால உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: மண்டலம்.

குப்தர்கள் மற்றும் ஹர்ஷர் காலம்

1. குப்த அரச வம்சத்தில் நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?
விடை: ஸ்ரீகுப்தர்.

2. குப்தப் பேரரசு 'தேசம்' அல்லது 'புக்தி' எனும் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு யாரால் நிர்வகிக்கப்பட்டது?
விடை: உபாரிகா (ஆளுநர்கள்).

3. குப்தர்களின் நிர்வாகத்தில் ஒற்றர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை: தூதகா.

4. காமாந்தகரால் எழுதப்பட்ட 'நிதிசாரம்' எனும் நூல் எதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது?
விடை: அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமான வழிகள்.

5. 'சிரேஸ்தி' வணிகர்கள் எனப்பட்டவர்கள் யார்?
விடை: ஒரு இடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.

6. குப்தர்கள் கால உலோகச் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டான சுல்தான் கஞ்ச் புத்தர் சிலையின் உயரம் என்ன?
விடை: ஏழரை அடி.

7. குதிரைகளைப் பலி கொடுத்து செய்யப்படும் வேள்வியான அஸ்வமேத யாகத்தை நடத்திய அரச வம்சம் எது?
விடை: குப்தர்கள்.

8. சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை ஆரியப்பட்டர் எந்த நூலில் விளக்கியுள்ளார்?
விடை: சூரிய சித்தாந்தம்.

9. ஹர்ஷர் சீனப்பயணி யுவான் சுவாங்கை முதன்முதலாக எங்கு சந்தித்தார்?
விடை: கஜன்கலா (ராஜ்மகாலுக்கு அருகே).

10. ஹர்ஷரின் காலத்தில் வசூல் செய்யப்பட்ட மூன்று முக்கிய வரிகள் யாவை?
விடை: பாகா, ஹிரண்யா, பாலி.

11. ஹர்ஷர் கூட்டிய இரண்டு பௌத்தப் பேரவைகள் எங்கு நடைபெற்றன?
விடை: கன்னோசி மற்றும் பிரயாகை.

12. ஹர்ஷரின் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மாணவர்களும் துறவிகளும் தங்கியிருந்தனர்?
விடை: 10,000 பேர்.

பல்லவர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள்

1. 'மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு' எந்த அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் சான்றாகும்?
விடை: பல்லவ அரசர்கள்.

2. காசக்குடிச் செப்பேடுகள் எந்த அரச வம்சத்தைப் பற்றிய சான்றாகும்?
விடை: பல்லவர்கள்.

3. பல்லவர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டான வராகர் குகை எங்குள்ளது?
விடை: மாமல்லபுரம்.

4. தட்சிண சித்திரம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது?
விடை: முதலாம் மகேந்திரவர்மன்.

5. பெருந்தேவனார் மகாபாரதத்தை தமிழில் 'பாரதவெண்பா' எனும் பெயரில் யாருடைய ஆதரவில் மொழிபெயர்த்தார்?
விடை: இரண்டாம் நந்திவர்மன்.

6. குடுமியான்மலை மற்றும் திருமயம் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்களின் எவ்வகை ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன?
விடை: இசை மீதான ஆர்வம்.

7. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரூ யாருடைய அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்?
விடை: இரண்டாம் புலிகேசி (சாளுக்கியர்).

8. முதல் கீழைச் சாளுக்கிய அரசராகப் பொறுப்பேற்றவர் யார்?
விடை: விஷ்ணுவர்த்தனர்.

9. சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்ட பட்டடக்கல்லிலுள்ள விருப்பாக்ஷா கோவில் எதனால் கட்டப்பட்டது?
விடை: கற்களால் (மணற்கற்களால்).

10. ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
விடை: கன்னடம்.

11. முதலாம் கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட எல்லோரா கைலாசநாதர் கோவில் எந்த கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது?
விடை: திராவிடக் கட்டடக்கலைக் கூறுகள்.

புவியியல்

1. சூரியனின் வெப்பம் புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் எவ்வளவு நேரம் ஆகின்றது?
விடை: 8.3 நிமிடங்கள்.

2. புதன் கோள் தன்னைத்தானே சுற்றி வர எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது?
விடை: 58.7 நாட்கள்.

3. சனி கோளின் துணைக்கோள்களில் வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் ஒரே துணைக்கோள் எது?
விடை: டைட்டன்.

உள்ளாட்சி நிர்வாகம் (தமிழ்நாடு)

1. தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊர் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
விடை: பேரூராட்சி.

2. தமிழ்நாட்டில் 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
விடை: மாவட்ட ஊராட்சி (அல்லது பல பகுதிகளாக).

3. தமிழ்நாட்டில் கிராம சபை கூடும் முக்கிய நாட்கள் யாவை?
விடை: ஜனவரி 26, ஆகஸ்டு 15, அக்டோபர் 2.

4. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தும் அமைப்பு எது?
விடை: மாநில தேர்தல் ஆணையம்.

5. தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை கோயம்பேடு.

No comments:

Post a Comment