Breaking

Thursday, March 19, 2026

10TH TAMIL - முத்தொள்ளாயிரம்‌





1. சேரநாடு

அள்ளல்‌ பழனத்‌(து) அரக்காம்பல்‌ வாயவிழ
வெள்ளம்தீப்‌ பட்ட(து) எனவெரீஇப்‌ புள்ளினம்தம்‌
கைச்சிறகால்‌ பார்ப்பொடுக்கும்‌ கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல்‌ கோக்கோதை நாடு.

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

சொல்லும்‌ பொருளும்‌

அள்ளல்‌ - சேறு;
பழனம்‌ - நீர்‌ மிக்க வயல்‌;
வெரீஇ - அஞ்சி;
பார்ப்பு - குஞ்சு;

அணி - தற்குறிப்பேற்ற அணி

2. சோழநாடு

காவல்‌ உழவர்‌ களத்துஅகத்துப்‌ போர்‌ஏறி
நாவலோஓ என்றைசக்கும்‌ நாளோதை - காவலன்தன்‌
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்‌ போலுமே
நல்யானைக்‌ கோக்கிள்ளி நாடு.

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது

சொல்லும்‌ பொருளும்‌

நாவலோ - நாள்‌ வாழ்க என்பது போன்ற வாழ்த்து;
இசைத்தால்‌ - ஆரவாரத்தோடு கூவுதல்‌.

அணி - உவமை அணி

3. பாண்டியநாடு

நந்தின்‌ இளஞ்சினையும்‌ புன்னைக்‌ குவிமொட்டும்‌
பந்தர்‌ இளங்கமுகின்‌ பாளையும்‌-சிந்தித்‌
திகழ்முத்தம்‌ போல்தோன்றும்‌ செம்மற்றே தென்னன்‌
நகைமுத்த வெண்குடையான்‌ நாடு.

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

சொல்லும்‌ பொருளும்‌

நந்து - சங்கு;
கமுகு - பாக்கு.
முத்தம்‌ - முத்து

அணி - உவமை அணி

இலக்கணக்‌ குறிப்பு

வெரீஇ - சொல்லிசையளபெடை
கொல்யானை, குவிமொட்டு - வினைத்தொகைகள்
இளங்கமுகு, வெண்குடை - பண்புத் தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்‌

கொண்ட = கொள்(ண்‌) + ட்‌ + ௮
கொள்‌ - பகுதி (ண்‌ ஆனது விகாரம்‌)
ட் ‌- இறந்தகால இடைநிலை
௮ - பெயரெச்ச விகுதி


பலவுள் தெரிக

1. முத்தொள்ளாயிரம் _______ பாவால் ஆனது


வெண்பா
கலிப்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா


விடை : வெண்பா

2. முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னர் சேரர்
சோழர்
பாண்டியர்
மூவரும்

விடை : மூவரும்




3. அச்சமில்லா நாடுசேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
பல்லவ நாடு

விடை : சோழ நாடு

4. ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடுசேர நாடு
பாண்டிய நாடு
சோழ நாடு
பல்லவ நாடு

விடை : சோழ நாடு




5. முத்துடை நாடு சேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு

6. பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : சேர நாடு




7. யானைப்படைகளை உடைய நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : சோழ நாடு

8. முத்துகளான வெண் கொற்றக் குடை உள்ள நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு




9. நவலோ என்று அழைத்தவர் வீரர்கள்
உழவர்
சோழன்
சேரன்

விடை : உழவர்

10. பந்தர் இளங்கமுகின் என்பதில் பந்தர் என்பது குறிக்கும் சொல்

பாக்கு
பந்தல்
முத்து

விடை : பந்தல்
கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு நாட்டின் ______ பாடுவதை புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

விடை : வளத்தை

2. பிற்காலக் காப்பியங்களில் ______ தவறாது இடம் பெற்றது.

விடை : நாட்டுவளம்

3. முத்தெள்ளாயிரத்தின் ஆசிரியர் ______

விடை : அறிய இயலவில்லை

4. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் ______




விடை : முத்தெள்ளாயிரம்

5. முத்தெள்ளாயிரம் ______ பாடல்களை கொண்ட நூல்

விடை : 900

6. வயல்களில் விரிந்திருந்தவை ______

விடை : அரக்காம்பல்

7. முத்தெள்ளாயிரத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ______

விடை : 108

No comments:

Post a Comment