Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 19, 2025

10TH TAMIL - கம்பராமாயணம்


கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைபடுபவர் = பாரதியார்.
  • “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று கூறியவர் = பாரதியார்.
  • கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
  • இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • இது ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  • “ஆற்றுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “நாட்டுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “கங்கைப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கங்கை காண் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கும்பகருணன் வதைப் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்.
  • கம்பராமாயணத்தில் கூறப்படும் நதி = சரயு நதி.
  • “காலனுக்கு தூதரானவர்” என கம்பர் குறிப்பிடுவது = இராமனை.
  • “வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்

கம்பராமாயணம் – நூல் அமைப்பு

  • காண்டம் = 6
  • படலம் = 113
  • மொத்த பாடல்கள் = 10569
  • முதல் படலம் = ஆற்றுப்படலம்
  • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்

காண்டங்கள்

  • பால காண்டம்
  • அயோத்தியாகாண்டம்
  • ஆரண்யகாண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்தகாண்டம்
  • ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் = கம்பர்
  • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி
  • தேரழுந்தூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
  • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
  • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
  • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
  • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
  • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆசிரியரின் சிறப்பு பெயர்

  • கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான்
  • கம்பநாடுடைய வள்ளல்
  • சந்த வேந்தர்
  • தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்

இவரின் படைப்புகள்

  • ஏர் எழுபது
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்
  • சரஸ்வதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)

கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்

  • கம்பசித்திரம்
  • கம்பநாடகம்
  • தோமறுமாக்கதை
  • மானுடம் பாடும் காவியம்
  • இயற்கை பரிணாமம்
  • தமிழர் கவித்துவத்தின் பேரெல்லை
  • முற்காலக் காப்பியங்களை எல்லாம் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழர் உள்ளதை தேக்கி வாய்த்த புகழ் உடையது = கம்பராமாயணம்

கம்பராமாயண சிறப்புகள்

  • மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்.
  • வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
  • வ.வே.சு ஐயர் = பெருங்காப்பிய இலக்கணத்தில் உலகக் காப்பியங்களை எல்லாம் கம்பராமாயணம் வென்றுவிட்டது
  • வையாபுரி பிள்ளை = கம்பன் காவியம் தமிழரின் கவித்துவத்தின் பேரெல்லை
  • எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
  • பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
  • பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
  • கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
  • கவிமணி = கம்பன் கவியே கவி
  • “கல்வியிற் பெரியவர் கம்பர்”
  • “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
  • “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
  • “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
  • தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் = தமிழுக்கு கதியாவர் இருவர்; ககரத்தை கம்பர் என்றும், திகரத்தை திருவள்ளுவர் என்றும் கூறுகிறார்
  • 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
  • சந்த வேந்தர் எனப்படும் கம்பர், தனது கம்பராமாயணத்தில் 460க்கும் மேற்பட்ட சந்தங்களை பயன்படுத்தி உள்ளார்
  • கம்பராமாயணத்தில் ஒவ்வொரு 22 பாடல்களுக்கு ஒருமுறை, சந்தத்தை வேறுபடுத்தி பாடியுள்ளார் கம்பர்
  • காக்கும் பெருமாள் = கம்பர் ஒரே பாடலுக்காகச் சந்ததி மாற்றவும் செய்துள்ளார்
  • “கம்பராமாயணம் பெண் நடையுடையது” என்றவர் = கா.சு.பிள்ளை

பொதுவான குறிப்புகள்

  • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
  • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
  • கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
  • வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
  • கமபராமாயணம் ஒரு வழி நூல்
  • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
  • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
  • கம்பராமாயணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விருத்தம் = கலி விருத்தம்
  • கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
  • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
  • இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
  • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் (10569 பாடல்கள்)
  • கம்பனுக்கு முன்பு இருந்த தமிழ் இராமாயணங்கள் = இராமாயண வெண்பா, சைன ராமாயணம்
  • கம்பராமாயணத்தோடு ஒப்பிடப்படும் உலகக் காப்பியம் = இலியட் (ஹோமர்)
  • உலக அரங்கில் தமிழுக்கு உயரிய மதிப்பைப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் = திருக்குறளும் கம்பராமாயணமும் ஆகும்

மேற்கோள்

  • தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
  • எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
  • இல்லாரும் இல்லை உடையாரும்
  • இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
  • அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
  • இன்று போய் நாளை வா
  • வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
  • வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
  • உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
  • கை வண்ணம் அங்குக் கண்டேன்
  • கால் வண்ணம் இங்குக் கண்டேன்
  • அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
சொல்லும் பொருளும்
  • தாது – மகரந்தத்தூள்
  • மாதவி வேலி – குருக்கத்திக்கொடி
  • கொண்டல் – மேகம்
  • எழினி – திரைச்சீலை
  • வெய்யோன் – சூரியன்
  • திரை – அலை
  • வேழம் – யானை
  • தண்டலை – குளிர்ந்த சோலை
பலவுள் தெரிக.


1. கம்பர் தமது நூலுக்கு இட்டப் பெயர்

அ) இராமாவதாரம்
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) ராம சரிதை

2. இராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை

அ) மூன்று
ஆ) ஆறு
இ) எ ட்டு
ஈ) பத்து

3. கம்பராமாயணப் பாடல்கள் எத்தன்மையுடையது.

அ) சந்தநயம் மிக்கவை
ஆ) கலைநயம் மிக்கவை
இ) அழகுநயம் மிக்கவை
ஈ) அனைத்தும்

4. கம்பர் பிறந்த ஊர்

அ) திருவாரூர்
ஆ) திருவழுந்தூர்
இ) திருவெண்ணைய் நல்லூர்
ஈ) திருநல்லாறு

5. திருவழுந்தூர் அமைந்திருப்பது

அ) சேர நாடு
ஆ) சோழ நாடு
இ) பாண்டிய நாடு
ஈ) தொண்டைநாடு

6. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர்.

அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்

7. சடையப்ப வள்ளலின் ஊர்.

அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்

8. ‘விருத்தம் பாடுவதில் வல்லவர் என்று போற்றப்படுபவர்.

அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்

9. கீழ்க்கண்டவற்றுள் எது கம்பரின் நூல் அல்ல

அ) சரசுவதி அந்தாதி
ஆ) திருக்கை வழக்கம்
இ) கொன்றை வேந்தன்
ஈ) சிலைஎழுபது

10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) சிலைஎழுபது
ஆ) ஆத்திசூடி
இ) ஏரெழுபது
ஈ) திருக்கை வழக்கம்

11. பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு.

அ) சரயு ஆறு
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு

12. கீழ்க்காண்பனவற்றுள் எது கொடி வகையைச் சேர்ந்தது?

அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை

13. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்

14. ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர்.

அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்

15. கீழ்க்கண்டவற்றுள் கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது

16. உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….

அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்

17. ‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?

அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்

18. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது.

அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை

19. “தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்.

அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்

20. ‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது.

அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்

21. ‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்துஇவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள்

அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி

22. பொருத்திக் காட்டுக.

i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்

அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2

23. கொண்டல் என்பதன் பொருள்

அ) மயில்
ஆ) மேகம்
இ) நீலமணி
ஈ) அலை

24. மாதவி வேலி என்பதன் பொருள்

அ) மாதவி கட்டிய வேலி
ஆ) குருக்கத்திக் கொடி
இ) மூங்கில் புதர்
ஈ) முட்புதர்

25. போது என்பதன் பொருள்

அ) பொழுது
ஆ) அரும்பு
இ) வேலி
ஈ) வயல்

No comments:

Post a Comment