1. ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? A. மக்களவை
B. மாநிலங்களவை
C. உச்சநீதிமன்றம்
D. நாடாளுமன்றம்
2. எந்த சட்டப்பிரிவின்படி, துணைக்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத்தலைவர் போல மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A. 66(2)
B. 66(1)
C. 46(1)
D. 46(2)
3. தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A. மாநிலங்களவை – 18; மக்களவை – 39
B. மாநிலங்களவை – 28; மக்களவை – 38
C. மாநிலங்களவை – 39; மக்களவை – 18
D. மாநிலங்களவை – 38; மக்களவை – 28
4. சர்வதேச மாநாடுகளில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்பவர்
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. ஆளுநர்
D. வெளியுறவுத்துறைச்செயலர்
5. ஒருமுறை குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருந்தபோது, குடியரகத் தலைவராக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
A) M. ஹிதயதுல்லா
B) கேஜி பாலகிருஷ்னான்
C) ஜே. கனியா
D) என் வி. ரமனா
6. இந்திய பாராளுமன்ற முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
A. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B. இங்கிலாந்து
C. அயர்லாந்து
D. முன்னாள் சோவியத் யூனியன்
7. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் சரத்து.............?
A. சரத்து 61
B. சரத்து 63
C. சரத்து 74
D. சரத்து 75
8. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத்தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும்போது குடியரசுத்தலைவரின் பணிகளைச் செய்பவர்?
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
D. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
9. கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் அதிகபட்சமாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
A) கேரளா
B) பஞ்சாப்
C) A & B இரண்டும்
D) மேற்கூறிய ஏதுமில்லை
10. இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1949 ஜனவரி 25ம் நாள்
B. 1950 ஜனவரி 28ம் நாள்
C. 1951 ஜனவரி 27ம் நாள்
D. 1952 ஜனவரி 26ம் நாள்
11. இவற்றுள் எந்த கூற்று துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் அல்ல?
A. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
B. மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
C. 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
D. மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
12. மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர்
A. சபாநாயகர்
B. குடியரசுத்தலைவர்
C. பிரதமர்
D. துணைப்பிரதமர்
13. முப்படைகளின் தலைமை தளபதி
A. பிரதமர்
B. துணைக்குடியரசுத்தலைவர்
C. ஆளுநர்
D. குடியரசுத்தலைவர்
14. நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள் மாநிலங்களவை ஒப்புதல் அளிக்க வேண்டும்?
A. 10
B. 12
C. 13
D. 14
15. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்பட்சத்தில் எந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்?
A. சட்டப்பிரிவு 104
B. சட்டப்பிரிவு 109
C. சட்டப்பிரிவு 105
D. சட்டப்பிரிவு 100
16. இந்திய அரசியலமைப்பின் பகுதி _____இல் எந்த சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகின்றனர்
A) பகுதி VI இல் 152 முதல் 237 வரை
B) பகுதி V இல் 52 முதல் 78 வரை
C) பகுதி XVஇல் 324 முதல் 329 வரை
D) பகுதி V இல் 124 முதல் 147 வரை
17. குடியரசுத் துணைத் தலைவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வர குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னர், துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்?"
A) 14 நாட்கள்
B) 7 நாட்கள்
C) 28 நாட்கள்
D) 30 நாட்கள்
18. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளவர் யார்?
A) பிரதமர்
B) குடியரசுத் தலைவர்
C) மக்களவை சபாநாயகர்
D)நிதியமைச்சர்
19. ஒன்றிய அரசின் தலைவர் யார்?
A) குடியரசுத் தலைவர்
B) மாநிலங்களவை தலைவர்
C) பிரதமர்
D) மக்களவை சபாநாயகர்
20. பின்வரும் வாக்கியங்களில் எது சரி?
A) நிதி மசோதாவை அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை.
B) மாநிலங்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
C) நிதி மசோதாவிற்கு மாநிலங்களவை 30 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெளில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்.
D) நிதிமசோதாவைப் பொருத்தவரை, மாநிலங்களவையின் எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்
21. பின்வரும் எந்தப் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆகும்?
A) குடியரசுத் தலைவர்
B) பிரதமர்
C) மக்களவை சபாநாயகர்
D) குடியரகத் துணைத்தலைவர்
22. மாநிலங்களவையின் பதவிக்காலம் எவ்வளவு?
A) 5 ஆண்டுகள்
B) 6 ஆண்டுகள்
C) 3 ஆண்டுகள்
D) நிரந்தர அவை
23. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதிக்குழு அமைக்கப்படுகிறது மற்றும் நிதிக்குழுவை அமைப்பவர் யார்?
A) 5 ஆண்டுகள் & குடியரசுத்தலைவர்
B) 6 ஆண்டுகள் & பிரதமர்
C) 3 ஆண்டுகள் & பிரதமர
D) 4 ஆண்டுகள் & குடியரசுத்தலைவர்
24. இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் பதவியானது எந்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவரின் பதவியைப்போன்றது?
A) இங்கிலாந்து
B) சோவியத் ரஷ்யா
C) அமெரிக்கா
D) கனடா
25. குடியரசுத் தலைவர் வருடத்திற்கு ஒருமுறை சென்று அவரது அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் "ரிட்ரீட் கட்டடம்" எங்குள்ளது?
A) சியாச்சின்
B) காஷ்மீர்
C) சிம்லா
D) ஹைதராபாத்
26. நாடாளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் எத்தனை மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்?
A) 3 மாதங்கள்
B) 6 மாதங்கள்
C) 9 மாதங்கள்
D) 12மாதங்கள்
27. ஒருவர் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவேண்டுமென்றால், அவரின் பெயரை, குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்க் குழுவிலுள்ள எத்தனை வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும்?
A) 50
B) 14
C)10
D) 15
28. குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக எவ்வளவு காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்?
A) 1 மாதம்
B) 3 மாதங்கள்
C) 12 மாதங்கள்
D) 6 மாதங்கள்
29. ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவீதம்பேர் மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது?
A) 10
B) 15
C) 18
D) 21
30. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?
A) மேல்முறையீடு நிதிவரையறை
B) ஆலோசனை நீதிவரையறை
C) தனக்கேயுரிய நீதிவரையறை
D) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
31. குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம் அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடும் சட்டப்பிரிவு எது?
A)74(1)
B)73(1)
C)71(4)
D)70(1)
32. __________ம் ஆண்டு இந்திய அரசுச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
A. 1920
B. 1925
C. 1930
D. 1935
33. மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ______________க்கு அதிகாரம் உண்டு
A. மக்களவை
B. மாநிலங்களவை
C. மாநில சட்டசபை
D. நாடாளுமன்றம்
34. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் --?
A. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
C . துணை குடியரசு தலைவர்
D . பிரதமர்
35. மாநிலங்களவையில் ஜனாதிபதியால் எத்தனை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?
A) 21
B) 12
C) 18
D) 20




No comments:
Post a Comment