1️⃣திருவள்ளுவர் விருது
திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986ஆம் ஆண்டு முதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது: செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமு
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர் (1986): தவத்திரு குன்றக்குடி அடிகளார்
2️⃣பெருந்தலைவர் காமராசர் விருது
தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர் (2006): ஏ. எஸ். பொன்னம்மாள்
3️⃣பேரறிஞர் அண்ணா விருது
தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு பேரறிஞர் அண்ணா விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது:
திரு. எல். கணேசன்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர் (2006): ஆர். எம். வீரப்பன்
4️⃣மகாகவி பாரதியார் விருது
பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர் பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது: கவிஞர் கபிலன்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர்: கவிஞர் மதிவண்ணன்
5️⃣பாவேந்தர் பாரதிதாசன் விருது
தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது: கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதி
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர்: கவிஞர். சுரதா
6️⃣தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது
சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 1979ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது:
மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர்: திரு. ஜெகசிற்பியன்
7️⃣முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது:
திரு. வே.மு.பொதியவெற்பன்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
முதல் விருது பெற்றவர்: முனைவர் மு.தமிழ்க்குடிமகன்
8️⃣தந்தை பெரியார் விருது
சமூக நீதி கிடைக்க பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது: திரு. விடுதலை இராஜேந்திரன்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
9️⃣அண்ணல் அம்பேத்கர் விருது
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டுக்கான விருது:
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. இரவிக்குமார்
பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை
🔟முத்தமிழறிஞர் கலைஞர் விருது
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024இல் தோற்றுவிக்கப்பட்டது.
திரு. முத்து வாவாசி
No comments:
Post a Comment