Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 5, 2024

TNPSC Group 4 Tamil Syllabus

பகுதி – அ: இலக்கணம்

  1. பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல்- (i) இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
  5. பொருந்தாச் சொல்லை கண்டறிதல்.
  6. பிழை திருத்தம் – சந்திப்பிழை நீக்குதல், ஒருமை பன்மை பிழையை நீக்குதல், மரபு பிழைகள் வழுஉச்சொற்களை நீக்குதல், பிற மொழிச் சொற்களை நீக்குதல்.
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
  9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை கண்டறிதல்
  10. வேர்ச் சொல்லைத் தேர்தல்
  11. வேர்ச்சொல் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும், தொழிற்பெயர் உருவாக்கல்
  12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
  13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
  14. பெயர்சொல்லின் வகை அறிதல்
  15. இலக்கண குறிப்பு
  16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
  17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
  18. தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் கண்டெழுதுதல்
  19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல்.
  20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல்.
  21. பழமொழிகள்

பகுதி – ஆ: இலக்கியம்

  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( இருபத்தைந்து அதிகாரம் மட்டும் ) [அன்பு,பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னாசெய்யாமை, கூடாநட்பு, உழவு]
  2. அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
  3. கம்பராமாயணம், இராவணகாவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள்.
  4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
  5. சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
  6. பெரிய புராணம் – நாலாயிர திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
  7. சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
  8. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
  9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
  10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

Read More: TNPSC Group 4 General Studies Syllabus

பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
  2. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
  3. புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.
  4. தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு – மகாத்மாகாந்தி – மு.வரதாசனார் – பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
  5. நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.
  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்
  7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
  8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  9. உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
  10. ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  12. ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
  13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத்தொண்டு .
  14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
  15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும்
  16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
  17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
  18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.
  19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
  20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
  21. நூலகம் பற்றிய செய்திகள்

TNPSC Group 4 Syllabus PDF – Download

No comments:

Post a Comment