தேசிய செய்திகள்
PM SVANidhi மொபைல் செயலி அறிமுகம்.
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால், “தெரு வியாபாரிகளுக்காக, கடன் வழங்கும் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கும், சில திட்டம் சம்பந்தப்பட்ட தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கும்” PM SVANidhi என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- இந்தத் செயலி மூலம் “தெருவோர வியாபாரிகளிடையே சுயதொழில் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்தத் திட்டமானது கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட “தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை ஏற்படுத்துகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஒருங்கிணைந்த கூட்டுறவுகளை மேம்படுத்த “இந்தியா மற்றும் நேபாளம்” இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
- “வணிகம் மற்றும் வர்த்தகம், நீர்மின் திட்டங்கள், எல்லை தாண்டிய பெட்ரோலிய குழாய் இணைப்பு, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளின் மேம்பாடு மற்றும் பணம் செலுத்தும் வழிமுறைகள்” என பல துறைகளில் இந்தியாவும் நேபாளமும் இணைந்து செயல்பட ஜூன்1 அன்று ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
- “பொருளாதாரம், கல்வி, எரிசக்தி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகள்” ஆகிய துறைகளில் இந்திய-நேபாள உறவை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தங்கள் ஒரு சாதனை மைல்கல்லாக அமையும் என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் GOBARdhan-என்ற ஒருங்கிணைந்த பதிவு போர்ட்டலைத் தொடங்கி வைத்துள்ளார்.
- ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர், ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத், இந்திய அளவில் இயற்கை எரிவாயு மற்றும் CBG துறையில் முதலீடு மற்றும் பங்கேற்பை மதிப்பிடுவதற்கு, GOBARdhan-க்கான ஒருங்கிணைந்த பதிவு போர்ட்டலைத் தொடங்கி வைத்துள்ளார்.
- இந்தியாவில் CBG/இயற்கை எரிவாயு ஆலைகளை அமைப்பதற்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வலைதள களஞ்சியமாக இது செயல்படும். Galvanizing Organic Bio-Agro Resources Dhan (GOBARdhan) என்பது இந்திய அரசின் ஒரு முக்கிய வளர்ச்சிக்கான முயற்சியாகும், இது “முழுமையான அரசாங்க அணுகுமுறையின் அடிப்படையிலும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கழிவுகளை செல்வமாக மாற்றும் முறையையும்’ வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NHPC மற்றும் VUCL ஆகியவை நேபாளத்தில் நீர்மின்சார திட்டத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்திய அரசு நிறுவனமான NHPC மற்றும் நேபாளத்தின் Vidhyut Utpadan Company Limited (VUCL) ஆகியவை நேபாளத்தில் ஃபுகோட் கர்னாலி நீர்மின் திட்டத்தை (480MW) மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஜூன் 1 அன்று கையெழுத்திட்டன.
- இதன் மூலம் கர்னாலி ஆற்றின் நீரோட்டத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்த மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை நேபாளத்தின் மின் அமைப்பில் ஒருங்கிணைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் நிறுவப்பட்ட திறனானது 480 மெகாவாட்டாக இருக்கும் மற்றும் சராசரி ஆண்டு உற்பத்தி சுமார் 2448 ஜிகாவாட்டாக இருக்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NTPC மற்றும் UPRVUNL ஆகியவை “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட பூங்காக்கள் மற்றும் திட்டங்களின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
- ரிஹான்ட் நீர்த்தேக்கம் மற்றும் பிற நீர்நிலைகள், அயோத்தி நகரின் சூரியமயமாக்கலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சோலார் PV திட்டத்தின் மேம்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் ஆகியவற்றில் சூரியசக்தி திட்டங்களை அமைக்க NTPC க்ரீன் எனர்ஜி லிமிடெட்(NGEL) மற்றும் UPRVUNL ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இத்திட்டம் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை அதிகமாக பயன்படுத்த முடியும் என்றும் இது மற்ற எரிசக்தி வளங்களை பிற நாடுகளிலிடமிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
உலக வானிலை அமைப்பின்(WMO) தலைவர் பதவியை UAE வென்றுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) இயக்குநர் ஜெனரல் டாக்டர். அப்துல்லா அல் மண்டூஸ், 2023 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு WMO இன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- “ஆசியாவைச் சேர்ந்த ஒரு GCC வானிலை ஆய்வாளர்” மற்றும் அரபு வானிலை ஆய்வாளர் ஒருவர் WMO இன் தலைவராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நியமனங்கள்
திரிபுரா பணியகத்தை(CADRE) சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி “ராஜீவ் சிங்” மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி-யாக பதவியேற்பு.
- ஐஜி மற்றும் சிஆர்பிஎஃப் பொறுப்பில் பதவி வகித்திருந்த திரு.ராஜீவ் சிங்கின் இடை-கேடரை “பிரதிநிதித்துவப்படுத்தி”மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி-யாக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
- இவர் தற்போது பதவியிலிருந்த P. டௌங்கள் என்பவருக்கு அடுத்தபடியாக இந்த பதவியை பெற்றுள்ளார். இவர் தற்போது மணிப்பூரில் நிகழ்ந்து வரும் துயர சம்பவங்களை வெகு சீக்கிரமாக முடக்கி அமைதியை நிலைநாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் MRPL ன் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்பு.
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (MRPL) நிர்வாக இயக்குநராக சஞ்சய் வர்மா பொறுப்பேற்றுள்ளார்.
- சஞ்சய் ஜூன் 2020 முதல் MRPL இன் சுத்திகரிப்பு குழுவில் உள்ளார் என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.
உலக வானிலை அமைப்பின் துணைத் தலைவராக IMD DG மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தேர்வு.
- உலக வானிலை அமைப்பின் (WMO) துணைத் தலைவர்களில் ஒருவராக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஜுன் 1 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- “இந்தியாவின் சூறாவளி மனிதர்”என்றழைக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த மொகபத்ரா, 2019 முதல் நாட்டின் முதன்மை வானிலை அலுவலகத்திற்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக வானிலை அமைப்பின் (WMO) வரலாற்றில் முதல் பெண் தலைவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த செலஸ்டே சாலோ நியமனம்.
- உலக வானிலை அமைப்பின் (WMO) வரலாற்றில் முதல் பெண் பொதுச் செயலாளராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த “செலஸ்டி சாலோ” நியமிக்கப்பட்டுள்ளார்.
- சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற “ஐ.நா காலநிலை மற்றும் வானிலை அமைப்பின்” தேர்தலில் காங்கிரஸில் சாலோ பெரும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சாலோ 2014 முதல் அர்ஜென்டினா நாட்டின் “தேசிய வானிலை சேவையின்” இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் பணியகத்தின் பொது மேலாளராக தேபி பிரசாத் பொறுப்பேற்பு.
- இந்திய ரயில்வேயின் மின் பொறியாளரான தேபி பிரசாத் டாஷ், ஜூன் 1 ஆம் தேதி சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் பணியகத்தின்(CLW) பொது மேலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
- பல்வேறு “அதிநவீன ரயில் தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளையாட்டு செய்திகள்
ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ஓமனின் சலாலாவில் உள்ள சுல்தான் கபூஸ் யூத் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் ஜூன் 1 அன்று இரவு நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
- இந்திய அணியானது இந்த ஆண்டில் வென்றதன் மூலம், ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை வரலாற்றில் “அதிக வெற்றி பெற்ற நாடு” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
காது கேளாதோருக்கான “IDCA TR-Nation ODI 2023” போட்டியில் இந்திய அணி வெற்றி.
- 2023 ஆம் ஆண்டுக்கான IDCA TR-Nation ODI காதுகேளாதோருக்கான சர்வதேச போட்டியில் இந்திய அணியானது வங்கதேச அணியை 166 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
- இந்தப் போட்டியானது “ஏப்ரல் 29 முதல் மே 5” வரை நடைபெற்றுள்ளது. நாட்டின் காது கேளாத விளையாட்டு வீரர்களிடையே கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த IDCA TR-Nation ODI போட்டியானது விளையாடப்படுகிறது.
UWW தரவரிசை தொடர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் மன்ஜீத்க்கு வெண்கலம்.
- ஜூன் 1 அன்று நடைபெற்ற UWW தரவரிசை தொடர் மல்யுத்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த மன்ஜீத் ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
- இந்திய வீரர் கஜகஸ்தானின் யெர்சின் அபியரை VPO1 வழியாக 14-9 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
உலக மிதிவண்டி தினம் 2023
- ஒரு நிலையான போக்குவரத்து முறையாகவும், உடல் வலிமைக்கான ஆதாரமாகவும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகவும் மிதிவண்டி ஓட்டுதலின் பல நன்மைகளை மக்களிடையே ஊக்குவிக்க உலகம் முழுவதும் ஜூன் 3 ஆம் தேதி உலக மிதிவண்டி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த தினமானது ஐக்கிய நாடுகளின்(UN) பொதுச் சபையால் “ஏப்ரல் 12, 2018” அன்று நிறுவப்பட்டது. “ஒரு நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றாக சவாரி செய்தல்” (Riding together for a sustainable future) என்பது இந்த ஆண்டிற்கான உலக சைக்கிள் தினத்தின் கருப்பொருள் ஆகும்.
No comments:
Post a Comment