Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 6, 2022

10 STD TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK - 2 (08.08.22 TO 12.08.22)

தலைப்பு :

  • செயற்கை நுண்ணறிவு, பெருமாள் திருமொழி

துணைக்கருவிகள் :

  • விளக்கப்படம்
  • மடிக்கணினி

நோக்கம் :

  • வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.
  • அறிவியல் கருத்துகள் பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத்திறனை அறிதல்.

கற்றல் திறன்கள் :

  • குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி மூலம் மருத்துவம் சார்ந்த அறிவியலை அறிதல்.

ஊக்கமூட்டுதல்:

  • ‘செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைப் பார்த்துள்ளீர்களா’ என மாணவர்களிடம் கேட்டல்.
  • பக்தி இலக்கியமான பெருமாள் திருமொழியில் அறிவியல் கருத்து நிறைந்துள்ள பாடலை அறிதல்.

பாட அறிமுகம

  • “தமிழ் மருத்துவம் என்றால் என்ன?” என மாணவர்களிடம் கேட்டல்.
  • செயற்கை நுண்ணறிவு’ என்னும் பாடப்பகுதியை விளக்கிக் கூறுதல்.

தொகுத்தல் :

  • ‘செயற்கை நுண்ணறிவு’ பாடத்தினை வாசிக்கச் செய்தல்.
  • ‘செயற்கை நுண்ணறிவு’ தொடர்பான காணொலிகளைக் காட்டல்.
  • திறன்பேசியில் உள்ள மென்பொருள் தன்மைகளை எடுத்துரைத்தல்.
  • விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
  • உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர் வாளால் அறுத்துச் சுட்டாலும் ஆக நன்மைக்கே என்று நோயுற்றவர் உணர்வார். வித்துவக்கோட்டில் உள்ள அன்னையே! எத்தகைய துன்பம் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்” எனப் பாடலின் கருத்தை விளக்குதல்,

மனவரைபடம் : செயற்கை நுண்ணறிவு

மனவரைபடம் : பெருமாள் திருமொழி

விளக்குதல் : செயற்கை நுண்ணறிவு

  • எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் ஒரேநாளில் வந்து விடுவதில்லை. படிப்படியான வளர்ச்சியே ஆகும்.
  • செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது; கண் அறுவை மருத்துவம் செய்கிறது; சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.
  • 2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன், நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. 
  • இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி,  ‘இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கி இருக்கின்றது.

விளக்குதல் : பெருமாள் திருமொழி

  • பக்தி இலக்கியத்தில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துகளைத் தொகுத்துணரத்தல்.

மதிப்பீடு :

  • செயற்கை நுண்ணறிவின் பயன்களைக் குறிப்பிடுக ?
  • வாட்சன் குறிப்பு வரைக ?
  • உனதருளே பார்ப்பள் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

கற்றல் விளைவுகள் :

  • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்பட சொல்லப்படும் பாங்கறிந்து மொழியைக் கையாளுதல், தொழில்சார் கருத்துக்களைப் புதுப்பித்தல்
  • அறிவியல் கருத்துக்கள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து, எதிர்வினையாற்றுதல்

தொடர்பணி :

  • இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக.
  • தமிழர் மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொப்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.

No comments:

Post a Comment