பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 5
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது
மொழிபெயர்ப்பு” என்று சொன்னவர்-------.- பாரதி
- மணவை முஸ்தபா
- கவிமணி
- ம.போ.சி
- மொழிபெயர்த்தல் என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டவர்?
- தொல்காப்பியர்
- தண்டி
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- “சதம்” என்பதன் பொருள்---------------.
- பத்து
- நூறு
- ஆயிரம்
- பத்தாயிரம்
- “சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை” என்று யார், யாரிடம் கூறினான்?
- கபிலரிடம் குசேலப் பாண்டியன்
- இடைக்காடனாரிடம் குசேல பாண்டியன்
- இறைவனிடம் குசேல பாண்டியன்
- குசேல பாண்டியனிடம் இடைகாடனார்
- “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்” – இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள்.
- ஆற்றுநீர் பொருள்கோள்
- நேர் நிரல்நிறைப் பொருள்கோள்
- கொண்டுகூட்டு பொருள்கோள்
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
- ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி------.
- சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
- அருந்துணை என்பதைப் பிரித்தால் -------.
- அருமை + துணை
- அரு + துணை
- அருமை + உணை
- அருந்து + உணை
- “இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது --------- வினா.
“அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறுவது -------- விடை.
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது ……. வினா.
“அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறுவது …… விடை.- ஐயவினா, வினா எதிர்வினாதல்
- அறிவினா, மறைவிடை
- அறியா வினா, சுட்டு விடை
- கொளல் வினா, இனமொழி விடை
- “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
- தமிழ்
- அறிவியல்
- கல்வி
- இலக்கியம்
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் …. ஆவார். இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் --------- ஆவார்.
- அமைச்சர், மன்னன்
- அமைச்சர், இறைவன்
- இறைவன், மன்னன்
- மன்னன், இறைவன்
- மொழிபெயர்த்தல் என்னும் தொடரை மரபியலில் குறிப்பிட்டவர் --------- .
- தொல்காப்பியர்
- தண்டி
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ – இத்தொடர் யாருடையக் கூற்று ஆகும்.
- பாரதியார்
- தண்டி
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- ’மொகு சாஸ்டு’ - என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள் ----------.
- மறுக்கிறோம்
- தண்டிக்கிறோம்
- பணிகிறோம்
- விடைதர அவகாசம் வேண்டும்
- இராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது இந்தி மொழியில் எழுதிய நூல் ---------.
- கங்கையிலிருந்து குமரிவரை
- மும்பையிலிருந்து தானேவரை
- வால்காவிலிருந்து கங்கைவரை
- வால்காவிலிருந்து குமரிவரை
- ’பயன் கலை’ என்று என்று மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ---------.
- கருத்துப் பகிர்வுக்கு உதவுவதால்
- மேடைப்பேச்சுக்கு உதவுவதால்
- மொழிவளர்ச்சிக்கு உதவுவதால்
- புதிய இலக்கியம் உருவாக்குவதால்
- பிரான்சு தேசிய நூற்கூடத்தில் இல்லாத தமிழ் இலக்கியம் இவற்றுள் எது?
- மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்
- சரளிப்புத்தகம்
- புதுச்சேரியம்மன் பிள்ளைத்தமிழ்
- கவிராயன் கதை
- நீதி வெண்பாவினை எழுதியவர்-----------.
- செய்குத்தம்பி பாவலர்
- தண்டி
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- சதாவனம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்-----------.
- செய்குத்தம்பி பாவலர்
- தண்டி
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்------.
- செய்குத்தம்பி பாவலர்
- உமறுபுலவர்
- நன்னூலார்
- மணவை முஸ்தபா
- ஒரே நேரத்தில் -------- செயல்களைச் செய்பவரை சதாவதானி என்று குறிப்பிடுவர் .
- பத்து
- நூறு
- ஆயிரம்
- பதினெட்டு
- திருவிளையாடற்புராணம் இயற்றிவர் ------------ ஆவார்.
- செய்குத்தம்பி பாவலர்
- தண்டி
- நன்னூலார்
- பரஞ்சோதி முனிவர்
- திருவிளையாடற்புராணத்தில் ------- காண்டங்களும் ----------- காதைகளும் உள்ளன.
- 2,64
- 3,64
- 2, 30
- 3, 30
- வேதாரண்யம் என்னும் ஊரின் மற்றுமொரு பெயர்-----------.
- திருத்தணி
- திருப்பதி
- திருமறைக்காடு
- திருப்பெருந்துறை
- பரஞ்சோதி முனிவர் ----------- ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- 15
- 16
- 17
- 18
- திருவிளையாடல் பற்றி கூறும் திருவிளையாடற்புராணம் தவிர்த்த மற்றுமொரு நூல் -------.
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- சிலப்பதிகாரம்
- அரசரின் முரசு கட்டிலில் உறங்கிய புலவர் மோசிக்கீரனார்க்கு கவரி வீசிய அரசன் --------------.
- நெடுஞ்செழியன்
- கரிகாலன்
- பெருஞ்சேரல் இரும்பொறை
- செங்குட்டுவன்
- அரசரின் முரசு கட்டிலில் உறங்கிய புலவர் மோசிக்கீரனார்க்குக் கவரி வீசிய
பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்தியைக் கூறும் நூல் --------.- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- பரிபாடல்
- சிலப்பதிகாரம்
- ”மாசற விசித்த வார்புறு வள்பின்…” என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல் ---------.
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- சிலப்பதிகாரம்
- எட்டு விடைகளில் வெளிப்படை விடைகளின் எண்ணிக்கை ----------.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
- . எட்டு விடைகளில் குறிப்பு விடைகளின் எண்ணிக்கை ------------.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
- பொருள்கோள் ------------ வகைப்படும்.
- இரண்டு
- ஆறு
- நான்கு
- எட்டு
- “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” என்னும் வினாவுக்கு, ”இவ்வழியாகச்
செல்லுங்கள்” என்று கூறும் விடை---------.- சுட்டு
- மறை
- நேர்
- ஏவல்
- ”எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, ”யார் எழுதி தருவார்கள்?” என்று
விடயளிப்பது ----------- விடை.- சுட்டு
- மறை
- வினா எதிர் வினாதல்
- ஏவல்
No comments:
Post a Comment