பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 1
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து
வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் .- அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- ஆ) க.சச்சிதானந்தன்
- இ) பாரதியார்
- ஈ) நப்பூதனார்
- பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
- துரைமாணிக்கம்
- கனகசபை
- சுப்பையா
- சுப்பிரமணி
- பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல?
- உலகியல் நூறு
- பாவியக்கொத்து
- மாங்கனி
- மகபுகுவஞ்சி
- பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல
- நூறாசிரியம்
- கனிச்சாறு
- எண்சுவை எண்பது
- குருஞ்சிதிட்டு
- தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- க.சச்சிதானந்தன்
- பாரதியார்
- நப்பூதனார்
- நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- க.சச்சிதானந்தன்
- பாரதியார்
- நப்பூதனார்
- தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.
- தட்டை
- கழி
- அடி
- கழை
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- ஜி.யூ. போப்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை, தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளில் இல்லை.
- ஒரு பொருள் பல சொல்
- பலபொருள் ஒரு சொல்
- ஒன்றொழிப் பொதுச்சொல்
- ஓரெழுத்து ஒருமொழி
- சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
- க. அப்பாத்துரையார்
- தமிழழகனார்
- மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவநேயப் பாவாணர்.
- க. அப்பாத்துரையார்
- தமிழழகனார்
- மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- பக்தி இலக்கியம்
- சங்க இலக்கியம்
- ஐம்பெருங்காப்பியங்கள்
- தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ----------- ஆகும்.
- கவிமணி
- மொழிஞாயிறு
- சந்தக்கவிமணி
- பாவலரேறு
- சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவநேயப் பாவாணார்.
- க. அப்பாத்துரையார்
- தமிழழகனார்
- சார்பெழுத்துகள் --------------- வகைப்படும்
- 10
- 2
- 12
- 18
- உயிரளபெடை ------------- வகைப்படும்.
- 2
- 3
- 5
- 7
- சூடு – இச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும்.
- தொழிற்பெயர்
- முதனிலைத் தொழிற்பெயர்
- எதிர்மறைத் தொழிற்பெயர்
- முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
- இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
- கெடுதல்
- கெடு
- கேடு
- செல்லாமை
- செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை --------------- அளபெடை ஆகும்.
- இன்னிசை
- சொல்லிசை
- இசைநிறை
- ஒற்றளபெடை
- அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்.
- குறுகி ஒலித்தல்
- நீண்டு ஒலித்தல்
- திரிதல்
- ஓசை மாறுபடாது ஒலித்தல்
- மொழி -------------- வகைப்படும்
- 2
- 3
- 4
- 5
- ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை -------------.
- 2
- 3
- 11
- 12
- ’மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----
- வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
- பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
- அணிகலன்களும்
வணிக கப்பல்களும் - வணிக கப்பல்களும் அணிகலன்களும்
- ’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். – இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---------
- இலையும் சருகும்
- தோகையும் சண்டும்
- தாளும் ஓலையும்
- சருகும் சண்டும்
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------
- எந்+தமிழ்+நா
- எந்த+தமிழ்+நா
- எம்+தமிழ்+நா
- எந்தம்+தமிழ்+நா
- ’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே----------------- பாடிய; கேட்டவர்
- பாடல்; பாடிய
- கேட்டவர் ; பாடிய
- பாடல் ; கேட்டவர்
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்
பயிர்வகை ---------.- குலை வகை
- மணி வகை
- கொழுந்து வகை
- இலை வகை
- குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்
அடைமொழிகளின் முறையே--------,------,---------,--------- ஆகும்.- நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
- ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
- ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்
- நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும், ஓங்கு
- பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே உள்ள பாடல்கள் ------,------- ஆகும்.
- அழகார்ந்த செந்தமிழே, செப்பரிய நின்பெருமை
- செப்பரிய நின்பெருமை, அழகார்ந்த செந்தமிழே
- முத்தமிழ் துய்ப்பதால், செப்பரிய நின்பெருமை
- முத்தமிழ் துய்ப்பதால், அழகார்ந்த செந்தமிழே
- தமிழழகனார் பாடிய சிற்றிலககியங்களின் எண்ணிக்கை --------.
- 10
- 12
- 18
- 96
- இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி -----
- சமஸ்கிருதம்
- சீனம்
- தெலுங்கு
- தமிழ்
- போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பெட்ட கார்டிலா நூல் ------ எழுத்துருவில் அச்சிடப்பட்டது.
- பாலி
- பிராகிருதம்
- வட்டெழுது
- ரோமன்
Hi
ReplyDelete👍🏻
ReplyDeletevery useful
ReplyDeleteGood
ReplyDeleteVery good . I am able correct my mistakes and to know the different types of questions.
ReplyDeleteThank you so much...
Useful test
ReplyDelete