Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - பாரத ரத்னா எம் ஜி ஆர் ராமச்சந்திரன்


  • எம்.ஜி.ஆரின் குடும்பம் கேரளாவை சேர்ந்தவர்கள்.
  • பெற்றோர் = கோபாலன் – சத்தியபாமா
  • இவர்களின் ஐந்தாவது மகன் = எம்.ஜி.இராமச்சந்திரன்
  • பிறந்த தேதி = 1917 ஜனவரி 17 ஆம் நாள்
  • குடும்ப சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.
  • எம்.ஜி.ஆர் சிறுவனாக இருந்த பொழுது தந்தையை இழந்தார்.
  • அவரின் தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு குடிபெயர்ந்தார்.
  • கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் எம்.ஜி.ஆர் கல்வி பயின்றார்.
  • பள்ளி மாணவர்களுக்காக காமராசர் துவக்கிய மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவுத் திட்டமாக மாற்றினார் எம்.ஜி.இராமச்சந்திரன்
  • இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் “பாரத்” பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

எம்.ஜி.ஆர் சிறப்புப் பெயர்கள்

  • புரட்சித்தலைவர்
  • எம்.ஜி.ஆர்
  • புரட்சி நடிகர்
  • மக்கள் திலகம்
  • பொன்மனச் செம்மல்

புரட்சி நடிகர்

  • வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரும் அவரது அண்ணனும் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் நாடக குழுவில் சேர்ந்தனர்.
  • எம்.ஜி.ஆர் தமது நடிப்பாற்றலால் நாடகக்குழுவின் முதன்மை நடிகராக உயர்ந்தார்.

பாரத் பட்டம்

  • இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் “பாரத்” பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

8TH TAMIL பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்

எம்.ஜி.ஆர் செயல்படுத்திய சமூக நலத்திட்டங்கள்

  • உழவர்களின் கடன் தள்ளுபடி
  • ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்
  • ஆதரவற்ற மகளிர்க்கு திருமண உதவித் திட்டம்
  • தாய்சேய் நல இல்லங்கள்
  • பற்பொடி வழங்கும் திட்டம்
  • நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம்
  • முதியோர் உதவித்தொகை திட்டம்
  • வேலைவாய்பு அற்றோருக்கு உதவித்தொகை திட்டம்

எம்.ஜி.ஆரின் தமிழ் வளர்ச்சி பணிகள்

  • பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை செயல்படுத்தி, தமிழ் எழுத்து முறையை எளிமை ஆக்கினார்.
  • மதுரையில் “ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை” சிறப்பாக நடத்தினார்.
  • தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் “தமிழ்ப் பல்கலைக்கழகத்தை” தோற்றுவித்தார்.

எம்.ஜி.ஆர் சிறப்புகள்

  • சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.
  • தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது;
  • சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது.
  • அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
  • எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017 – 2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

1.             எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த இடம்.

அ)          கேரளா               

ஆ)         கண்டி 

இ)          குடந்தை             

ஈ) சென்னை

2.             எம்.ஜி. ராமச்சந்திரன், கோபாலன் – சத்தியபாமாவுக்கு ......... மகனாகப் பிறந்தார்.

அ)          ஒரே                      

ஆ)         மூன்றாம்           

இ)          ஐந்தாம்              

ஈ)           எட்டாம்

3.             ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்.

அ)          கோவை              

ஆ)         சேலம்  

இ)          மதுரை               

ஈ)           தஞ்சை

4.             எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு ‘பாரத ரத்னா விருது’ எப்போது வழங்கப்பட்டது.

அ)          1917                       

ஆ)         1988                       

இ)          2017                       

ஈ)           2018

5.             எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த ஆண்டு

அ)          1917                       

ஆ)         1988                       

இ)          2017                       

ஈ)           2018

6.             மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர்.

அ)          காமராசர்                                                         

ஆ)         இராஜாஜி

இ)          எம்.ஜி.ஆர்                                                          

ஈ)           கக்கன்               

7.             சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர்.

அ)          காமராசர்                                                         

ஆ)         இராஜாஜி

இ)          எம்.ஜி.ஆர்                                                         

ஈ)           கக்கன்               

8.             இந்திய அரசு எம்.ஜி. ராமச்சந்திரனின் நடிப்பிற்கு வழங்கிய பட்டம்

அ)          பாரத ரத்னா                                     

ஆ)         பாரத்

இ)          பத்மஸ்ரீ                                                                

ஈ)           பத்மபூஷன்

9.             எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம்.

அ)          சென்னை பல்கலைக் கழகம்               

ஆ)         திருவள்ளுவர் பல்கலைக் கழகம்

இ)          அண்ணா பல்கலைக் கழகம்

ஈ)           அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

10.          ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்.

அ)          காமராசர்         

ஆ)         அண்ணா           

இ)          எம்.ஜி.ஆர்         

ஈ)           கலைஞர்

No comments:

Post a Comment