1.
தனிமங்களுக்கு ஆங்கில எழுத்துக்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்தும் முறையை பரிந்துரைத்தவர் யார்? - பெர்சீலியஸ்
2.
தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன? - ஆரும்
3.
மனித உடலில் அதிக அளவு (99%) காணப்படும் முக்கிய தனிமங்கள் எவை? - ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ்
4.
அணுவை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டவர் யார்? - J.J.
தாம்சன்
5.
அணுக்கருவினுள் உள்ள நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையைக் கொண்டுள்ளன? - மின்சுமையற்றவை
6.
நியூக்ளியான்கள் என அழைக்கப்படுபவை எவை? - புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்
7.
ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - ஐசோபார்கள்
8.
மீள் மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக? - தொட்டால் சிணுங்கி தாவரம் (அல்லது பனிக்கட்டி உருகுதல்)
9.
மீளா மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக? - பால் தயிராதல் (அல்லது உணவு செரித்தல்)
10. வளிமண்டலத்தின் அடிவளி மண்டலம் (Troposphere) புவியிலிருந்து எவ்வளவு உயரம் வரை அமைந்துள்ளது? - 16 கி.மீ
11. காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு என்ன? - 0.03%
12. உலக வாழிட நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? - அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை
13. பூமியில் உள்ள மொத்த நீரில் நன்னீரின் சதவீதம் எவ்வளவு? - 3 சதவீதம்
14. துருவ பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளில் உள்ள நன்னீரின் சதவீதம் என்ன? - 68.7%
15. திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன? - 2016
16. நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன் எது? - ப்ராக்ஷிமா சென்டாரி
17. ப்ராக்ஷிமா சென்டாரி நமது சூரிய குடும்பத்திலிருந்து எவ்வளவு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது? - 4.22
ஒளி ஆண்டு
18. தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ள முக்கிய இடங்கள் யாவை? - நெய்வேலி, எண்ணூர்
19. தமிழ்நாட்டில் நீர்மின் நிலையங்கள் அமைந்துள்ள முக்கிய இடங்கள் யாவை? - மேட்டூர், பாபநாசம்
20. தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் எங்கு அமைந்துள்ளன? - கல்பாக்கம், கூடங்குளம்
21. ஆக்சிஜன் வாயுவினைக் கண்டறிந்து பெயரிட்டவர் யார்? - ஜோசப் பிரிஸ்ட்லி
22. நைட்ரஜன் வாயுவினைக் கண்டறிந்தவர் யார்? - டேனியல் ரூதர்ஃபோர்டு
23. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவை என்பதை நிரூபித்தவர் யார்? - ஜான் இன்ஜென்ஹவுஸ்
24. ஆணிவேர் தொகுப்பு உள்ள தாவரங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக? - மா, வேம்பு
25. சல்லிவேர் தொகுப்பு உள்ள தாவரங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக? - நெல், வாழை (அல்லது கரும்பு, தென்னை)




No comments:
Post a Comment