1.
பம்பரத்தின் இயக்கம் எவ்வகை இயக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்? - தற்சுழற்சி இயக்கம்
2.
ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - திசைவேகம்
3.
திசைவேகம் மாறும் வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - முடுக்கம்
4.
பயணிகள் விமானத்தின் வேகம் தோராயமாக எவ்வளவு? - 180 மீ/வி
5.
ராக்கெட்டின் வேகம் தோராயமாக எவ்வளவு? - 5200 மீ/வி
6.
அண்டத்தில் காணப்படும் பருப்பொருளின் நான்காம் நிலை எது? - பிளாஸ்மா நிலை
7.
அடர்த்தியைக் கண்டறியும் சமன்பாடு என்ன? - அடர்த்தி = நிறை / பருமன்
8.
ஒரு நானோமீட்டர் (nm) என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்? - $10^{-9}$ மீட்டர்
9.
தங்கத்தின் தூய்மை எந்த அலகால் அளக்கப்படுகிறது? - காரட்
(Carat)
10. தூய நிலையில் உள்ள தங்கம் என்பது எத்தனை காரட் ஆகும்? - 24 காரட்
11. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தத் தேவைப்படும் வெப்ப அளவு என்ன? - ஒரு கலோரி
12. ஒரு வானியல் அலகு என்பதன் மதிப்பு என்ன? - 149.6
மில்லியன் கிலோமீட்டர்
13. ஒரு காலன் (Gallon) என்பது எத்தனை லிட்டருக்கு சமம்? - 3.785
லிட்டர்
14. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பொருள்கள் எவ்வகைக் கண்ணாடியால் உருவாக்கப்படுகின்றன? - போரோசிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ்)
15. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? - H2O
16. வெங்காயத்தை நறுக்கும் போது கண்ணீர் வரக் காரணமான வேதிப்பொருள் எது? - புரோப்பேன் தயால் S-ஆக்சைடு
17. பாரிஸ் சாந்து (Plaster of Paris)
இன் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? - $CaSO_4
. 1/2H_2O$
18. பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? - C6
H5 OH
19. பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்படும் அணு (74%) எது? - ஹைட்ரஜன் அணு
20. ஓசோன் வாயு எத்தனை ஆக்சிஜன் அணுக்களால் ஆனது? - மூன்று ஆக்சிஜன் அணுக்கள்
21. இயற்கையாகக் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 94 தனிமங்கள்
22. கடினமான மற்றும் பளபளப்பான ஒரே அலோகம் எது? - வைரம்
23. மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம் எது? - கிராபைட்
24. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடைப்பட்ட பண்புகளைக் கொண்ட தனிமங்கள் எவை? - உலோகப்போலிகள்
25. தனிமங்களின் குறியீடுகளை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பு எது? - IUPAC




No comments:
Post a Comment