Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 9, 2025

10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி


"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவை முஸ்தபா.

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணம்" என்கிறார் மு.கு. ஜகந்நாதர்.

மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது.

வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவைகளே.

தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது.

பாரதியின் மொழிபெயர்ப்பு

Exhibition - காட்சி, பொருட்காட்சி
East Indian Railways - இருப்புப் பாதை
Revolution - புரட்சி
Strike - தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

18ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன.

இரவீந்திரநாத தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது

Camel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் வடம் (கயிறு).

'Underground drainage’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் புதைசாக்கடை

ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. 

புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” - பாரதி

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்."- பாரதி

தெரிந்து தெளிவோம்

மொழிபெயர்ப்பு

எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு.

எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு, 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு, 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு, 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு. - சா. கந்தசாமி


எத்திசையும் புகழ் மணக்க.....

பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும்

பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள." தனிநாயக அடிகள்

மொழிபெயர்ப்பு – செம்மை

  • “Camel” என்பதன் பொருள் = ஒட்டகம், வடம் (கயிறு).
  • “Underground Drainage” என்பதன் தமிழாக்கம் = புதைசாக்கடை (மலையாள மொழியில் இருந்து பெறப்பட்டது)
  • “Telegraph” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைவரி
  • “Television” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைக்காட்சி
  • “Telephone” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைபேசி
  • “Telescope” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைநோக்கி
  • “Telemetry” என்பதன் தமிழ்ச்சொல் = தொலைஅளவியல்
  • “Transcribe” என்பதன் தமிழ்ச்சொல் = படியெடுத்தல்
  • “Transfer” என்பதன் தமிழ்ச்சொல் = மாறுதல்
  • “Transform” என்பதன் தமிழ்ச்சொல் = உருமாற்றுதல்
  • “Transact” என்பதன் தமிழ்ச்சொல் = செயல்படுத்துதல்
1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்? மணவை முஸ்தபா

2. "ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர் யார்? மு. கு. ஜகந்நாதர்

3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்? மரபியலில்

4. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு எது? சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

5. சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு எது? சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

6. வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை? பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்

7. வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன? இராமாயணம், மகாபாரதம்

8. இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும் எதை கருவியாக பயன்படுத்தியது? மொழிபெயர்ப்பு

9. பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த நிறுவனம் மூலம் வெளியிட்டது? சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம்

10. மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் என்பதற்கு உதாரணம் என்ன? "சரண் அடையாவிட்டால் குண்டு வீசப்படும்" என்று அமெரிக்கா ஜப்பானுக்கு செய்தி அனுப்பியது அதற்கு ஜப்பான் அனுப்பிய பதில்?

11. மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்? விடைத்தர அவகாசம் வேண்டும்

12. பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை? Exhibition

13. East Indiyan railway - இருப்புப்பாதை

14. Revolution - புரட்சி

15. Strike - தொழில் நிறுத்தி இருத்தல், வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்

16. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர் யார்? ஷேக்ஸ்பியர்

17. ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர் யார்? ஷேக்ஸ்பியர்

18. 18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன? வடமொழி நூல்கள்

19. ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள் அதிகமாக அறிமுகமாகின? ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்

20. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது எதனால்? மொழிபெயர்பால்

21. கீதாஞ்சலியை இயற்றியவர் யார்? இரவீந்தரநாத் தாகூர்

22. இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்? வங்க மொழியில்

23. இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு? நோபல் பரிசு

24. யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்? பாரதியின் கவிதைகள்

25. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கணக்கிடுவார்கள்? மின்னாற்றலைக் கொண்டு

26. ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்? ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு

27. எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது? பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா

28. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலின் ஆசிரியர் யார்? ராகுல் சாங்கிருத்யாயன், 1942 இந்தி மொழியில் எழுதினார்

29. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் எங்கிருந்து எழுதினார்? ஹிஜிராபாக் மத்திய சிறையில்

30. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)

31. "வால்காவிலிருந்து கங்கை வரை" தமிழில் மொழிபெயர்த்தவர்கள்? 1949

32. 2016 டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு

33. 2016 முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு

34. 2018 யூமா வாசுகி மொழிபெயர்ப்பு

35. Railsleeper என்பதன் பொருள் என்ன? தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை

36. Camel என்பதன் பொருள் என்ன? வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு

37. Underground drainage என்பதன் பொருள் என்ன? புதைச்சாக்கடை

38. Tele என்பதன் பொருள் என்ன? தொலை

39. எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன? ஜெர்மன்

40. பிற மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை? தமிழ் நூல்கள்

41. தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில் மொழிகளின் வரிசைகள் யாது? ஆங்கிலம்

42. மலையாளம் இரண்டாம் இடம்

43. தெலுங்கு மூன்றாம் இடம்

44. இந்தி நான்காம் இடம்

45. கன்னடம் ஐந்தாம் இடம்

46. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது? பயன்கலை

47. எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது? ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

48. எந்த நாட்டுச் சிறு குழுவினரின் படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்? ஆப்பிரிக்கா

49. "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்" என தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்? குலோத்துங்கன்

50. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற வரியை கூறியவர் யார்? பாரதியார்

51. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்? பாரதியார்

52. எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன? பிரான்ஸ் தேசிய நூற்கூடம்

53. இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும் ஏடுகளும் எங்கே உள்ளன? பிரான்சு தேசிய நூற்கூடம்

54. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள சில நூல்கள் யாவை? மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்

55. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்? தனிநாயகம் அடிகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்.

அ)  மணவை முஸ்தபா
ஆ) மு. கு. ஜகந்நாதர்
இ) மு. கணபதிப் பிள்ளை
ஈ) கோபிகா ஜடேஜா

2. "ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும் 
என்றவர். 

அ)  மணவை முஸ்தபா
ஆ) மு. கு. ஜகந்நாதர்
இ) மு. கணபதிப் பிள்ளை
ஈ) கோபிகா ஜடேஜா

3. உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர்

அ)  மணவை முஸ்தபா
ஆ) மு. கு. ஜகந்நாதர்
இ) மு. கணபதிப் பிள்ளை
ஈ) கோபிகா ஜடேஜா

3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

அ) உவமயியல்
ஆ)  மரபியல்
இ) எழுத்தியல்
ஈ) சொல்லியல்

4. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு.

அ) எசாலம் செப்பேடு
ஆ) சின்னமனூர்ச் செப்பேடு
இ) இந்தியச் செப்பேடு
ஈ) சோழர் செப்பேடு


5. சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு.

அ) எசாலம் செப்பேடு
ஆ) சின்னமனூர்ச் செப்பேடு
இ) இந்தியச் செப்பேடு
ஈ) சோழர் செப்பேடு

6. கீழ்க்கண்டவற்றுள் வடமொழி தழுவி எழுதப்படாத நூல்

அ) பெருங்கதை
ஆ) சீவகசிந்தாமணி
இ) கம்பராமாயணம்
ஈ) பெரியபுராணம்

7. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர்

அ) ஷேக்ஸ்பியர்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) பாரதியார்
ஈ) திருவள்ளுவர்

8. ஜெர்மன் நாட்டுப் படைப்பாளர் போல கொண்டப்பட்டவர்

அ) ஷேக்ஸ்பியர்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) பாரதியார்
ஈ) திருவள்ளுவர்

9. கீதாஞ்சலியை இயற்றியவர்

அ) சுந்தரம்பிள்ளை
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) பாரதியார்
ஈ) திருவள்ளுவர்

10. இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்

அ) இந்தி
ஆ) வங்கம்
இ) தெலுங்கு
ஈ) குஜராத்தி

11. இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலி எந்த மொழியில் மொழிபெயர்த்தபின் நோபல் பரிசு கிடைத்து.

அ) இந்தி
ஆ) ஆங்கிலம்
இ) தெலுங்கு
ஈ) குஜராத்தி

12. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலின் ஆசிரியர்

அ) கணமுத்தையா
ஆ) ராகுல் சாங்கிருத்யாயன்
இ) யூமா வாசுகி 
ஈ) என். ஸ்ரீதர்

13. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர்

அ) கணமுத்தையா
ஆ) முத்து மீனாட்சி
இ) யூமா வாசுகி 
ஈ) என். ஸ்ரீதர்

14 . எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது.

அ) பாட்னா பல்கலைக்கழகம்
ஆ) ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
இ) அமெரிக்கா பல்கலைக்கழகம்
ஈ) மலேசியா பல்கலைக்கழகம்

15. 
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர்

அ) பாரதியார்
ஆ) பாரதிராசன்
இ) தனிநாயகம் அடிகள்
ஈ) நாமக்கல் கவிஞர்

16. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர்

அ) பாரதியார்
ஆ) பாரதிராசன்
இ) தனிநாயகம் அடிகள்
ஈ) நாமக்கல் கவிஞர்

17. இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம்

அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) நவீன இலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்

18. மொகு சாஸ்ட்டு என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்

அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடை தர அவகாசம் வேண்டும்
இ) விரை தர முடியாது
ஈ)  கேள்வி கேட்க அவகாசம் வேண்டும்

19. காசினியல் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும் என்று கூறியவர்

அ) குலோத்துங்கன்
ஆ) இராஜேந்திரன்
இ) இராஜராஜன்
ஈ) பராந்தகன்

20. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

அ) 1942
ஆ) 1944
இ) 1947
ஈ) 1949

பொருத்துக

1. யூமா வாசுகிஅ. 1942
2. முத்துமீனாட்சிஆ. 1949
3. ராகுல் சாங்கிருத்யாளன்இ. 2016
4. கணமுத்தையாஈ. 2018
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

பாரதியின் மொழிபெயர்புகளைப் பொருத்தி காட்டுக

1. பொருட்காட்சிஅ. Strike
2. இருப்புப்பாதைஆ. Revolution
3. புரட்சிஇ. East Indian Railways
4. வேலைநிறுத்தம்ஈ. Exhibition
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் மொழிபெயர்க்கப்ட்ட ஆண்டும், மொழிபெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக

1. கணமுத்தையாஅ. 1949
2. டாக்டர் என்.ஸ்ரீதர்ஆ. 2016
3. முத்துமீனாட்சிஇ. 2016
4. யூமாவாசுகிஈ. 2018
விடை : 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ

No comments:

Post a Comment