Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 11, 2025

10TH TAMIL - புதிய நம்பிக்கை


நூல் வெளி

புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. 'உனக்குப் படிக்கத் தெரியாது“ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடிபிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது. உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்டகல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.

இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

முன்தோன்றிய மூத்தகுடி

"கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" - ஐங்குறுநூறு 188:2


பாடக் குறிப்புகள்
1. உனக்கு படிக்க தெரியாது என்ற நூலை இயற்றியவர் - கமலாலயன்
2. வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் - கமலாலயன்
3. உனக்குப்படிக்க தெரியாது என்ற நூல் யாரைப்பற்றியது - கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"
4. கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன? வே. குணசேகரன்
5. உனக்குப் படிக்க தெரியாது என்ற வார்த்தையால் உள்ளத்தில் அடி பெற்றவர் யார்? மேரி மெக்லியோட் பெத்யூன்
6. மேரி குடும்பம் எந்த வகை பயிரை பயிரிட்டிருந்தது? பருத்தி
7. பருத்திக் காட்டில் முதல் பருத்தி மொட்டை பார்த்தவர் யார்? மேரி மெக்லியோட் பெத்யூன்
8. மேரி மெக்லியோட் பெத்யூன் பெற்றோர் யார்? சாம் மற்றும் பாட்ஸி
9. உன்னால் படிக்க முடியாது என்று மேரியைப் பார்த்து கூறியது யார்? பென் வில்சனின் குழந்தைகள்
10. மேரி படிப்பதற்கு உதவியது யார்? வில்சன்
11. மெயஸ்வில்லிக்குப் போய்ச் சேர மேரி நடக்க வேண்டிய தூரம் என்ன? 5 மைல்கள்
12. மேரி பள்ளிப்படிப்பை முடித்த பின் எங்கே செல்ல விரும்பினாள்? கல்லூரி
13. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது? ஐங்குறுநூறு
14. கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது? தூத்துக்குடி


1. கமலாலயன் இயற்பெயர்.


அ) வே. குணசேகரன்
ஆ) கு. மார்த்தாண்டம்
இ) ம. மணிவண்ணன்
ஈ) இராஜேந்திரன்

2. வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

அ) வே. குணசேகரன்
ஆ) கு. மார்த்தாண்டம்
இ) ம. மணிவண்ணன்
ஈ) இராஜேந்திரன்

3. கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருநெல்வேலி
ஆ) கன்னியாகுமரி
இ) மதுரை
ஈ) தூத்துக்குடி

4. கொற்கை கோமான் கொற்கையும் பெருந்துறை என்று குறிப்பிடும் நூல்

அ) அகநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) புறநானூறு
ஈ) நற்றிணை

5. உனக்குப் படிக்கத் தெரியாது என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரிமெக்லியோட் பெத்யூன் _______ உருவாக்கிடக் காரணமானது.

அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை
இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை

6. மேரிமெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள்

i. சமையல் செய்து 
ii. தோட்டமிட்டு
iii. பொது இடங்களில் பாட்டுப் பாடி 
iv. பிச்சையெடுத்து

அ) i, ii, iii சரி
ஆ) ii, iii, iv சரி
இ) iii மட்டும் சரி
ஈ) நான்கும் சரி

7. அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெதயூன் _______ சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.

அ) உலகெங்கும் மூலை முடுக்குளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
ஆ) கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
இ) மறுமணம் மறுக்கப்பட்ட
ஈ) உழைக்கும்

9. மேரி மெக்லியோட் பெதயூன் என்னும் அமெரிக்க கல்வியாளரின், வாழ்க்கையை உனக்கு படிக்கத் தெரியாது என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்.

அ) அகிலன்
ஆ) கமலாலயன்
இ) கீதாலயன்
ஈ) ஜெயகாந்தன்

No comments:

Post a Comment