தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்துகளை இரண்டாகப் பகுக்கலாம்
- வரி வடிவம் - கண்ணால் காணக் கூடியது - எழுதுதல்
- ஒலி வடிவம் - காதால் கேட்கக்கூடியது. - பேசுதல்
உயிர் எழுத்துகள்
- உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு
- அவை , அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ என்பனவாகும்.
குறில் எழுத்துகள்
- குறுகி ஒலிக்கும் எழுத்துகள் என்பதால் குறில் எனப்பட்டது.
- இக்குறில் எழுத்து ஐந்து ஆகும்.
- அவை, அ, இ, உ, எ, ஒ என்பனவாகும்.
நெடில் எழுத்துகள்
- நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் என்பதால் நெடில் எனப்பட்டது.
- இந்நெடில் எழுத்து ஏழு ஆகும்.
- அவை, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்பனவாகும்.
மெய் எழுத்துகள்
- மெய் எழுத்துகள் மொத்தம் பதினெட்டு
- அவை, க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பனவாகும்
- இவற்றை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பகுக்கலாம்.
வல்லின எழுத்துகள்
- வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லின எழுத்துகள் என்பர்.
- இவ்வல்லின எழுத்துகள் ஆறு ஆகும்
- அவை, க், ச், ட், த், ப், ற் என்பனவாகும்
மெல்லின எழுத்துகள்
- மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லின எழுத்துகள் என்பர்.
- இம்மெல்லின எழுத்துகள் ஆறு ஆகும்
- அவை, ங், ஞ், ண், ந், ம், ன் என்பனவாகும்
இடையின எழுத்துகள்
- வன்மையும் மென்மையும் இல்லாமல் இடைப்பட்டு ஒலிக்கும் எழுத்துகளை இடையின எழுத்துகள் என்பர்.
- இவ்விடையின எழுத்துகள் ஆறு ஆகும்
- அவை, ய், ர், ல், வ், ழ், ள் என்பனவாகும்.
உயிர்மெய் எழுத்துகள்
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் சேர்ந்து உருவான 216 எழுத்துகளை உயிர்மெய் எழுத்துகள் என்பர்.
- இவற்றை உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரண்டாக பகுப்பர்.
- உயிர்மெய்க் குறில் எழுத்துகள் 5 X 18 = 90
- உயிர்மெய் நெடில் எழுத்துகள் 7 X 18 = 126
மாத்திரை
- எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு மாத்திரை எனப்படும்.
- ஒருமனிதன் இயல்பாக கண் இமைக்கும் நேரமும் கைநொடிக்கும் நேரமும் ஒரு மாத்திரை கால அளவாகும்.
எழுத்துகளின் மாத்திரை அளவுகள்
- குறில் ஒரு மாத்திரை
- நெடில் இரண்டு மாத்திரை
- மெய் அரை மாத்திரை
- ஆய்தம் அரை மாத்திரை




No comments:
Post a Comment