Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 15, 2025

6TH TAMIL - வளர் தமிழ்


மொழி
  • மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று.
  • மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது
  • நாம் சிந்திக்க உதவுகிறது
  • சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது
  • பிறர் கருத்தை நாம் அறிய உதவுவது
தமிழ், தமிழ்நாடு, தமிழன்  என்ற சொற்களை முதன் முதலில் எழுத்தாண்ட இலக்கண இலக்கியங்கள்

பூவின் படிநிலைகள்
  1. அரும்பு - பூவின் ஆரம்ப நிலை
  2. மொட்டு- அரும்பு சற்று வளர்ந்த நிலை
  3. முகை- இதழ்கள் விரியத் தொடங்கும் நிலை
  4. மலர்- முழுமையாக இதழ்கள் விரிந்த நிலை
  5. அலர்- பூ நன்றாக விரிந்து, இதழ்கள் சற்றே வளைந்த நிலை
  6. வீ- பூ வாடிய நிலை
  7. செம்மல்- பூ உதிர்ந்த நிலை


இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச் சொற்கள்.

மா என்ற ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்கள்


மரம்விலங்குபெரியதிருமகள்அழகுஅறிவுஅளவுஅழைத்தல்துகள்மேன்மைவயல்வண்டு

ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

Internet -  இணையம்
Face Book - முகநூல்
WhatsApp - புலனம்
Voice Search  - குரல்தேடல்
Search Engineதேடுபொறி
Application - செயலி
Touchscreen - தொடுதிரை
News Paper - செய்தித்தாள்
Radioவானொலி
Television - தொலைக்காட்சி

பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்- நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அன்னி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்ததாள் வாழ்த்துகள்! - அறிவுமதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உலகில் எத்தனை மொழிகள் உன்னன. 

அ) இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள்
ஆ) ஐந்தாயிரத்திற்கும்  மேற்பட்ட மொழிகள்
இ) ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள்
ஈ) பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட மொழிகள்

2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல், இனிதாவது எங்கும் காணோம் - என்று கூறியவர்.

அ) திரு.வி.கா
ஆ) க. சச்சிதானந்தம் 
இ) பாரதியார்
ஈ) காசி ஆனந்தன்

3. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று தமிழ்மொழியின் தொன்மை பற்றி கூறியவர்.

அ) திரு.வி.கா
ஆ) பாரதிதாசன்
இ) பாரதியார்
ஈ) காசி ஆனந்தன்

4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்.

அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) காக்கை பாடினியம்

5. பெரும்பாலான தமிழ் எழுத்துகள் எவ்வாறு உள்ளன.

அ) வலஞ்சுழி எழுத்துகளாக உள்ளன.
ஆ) இடஞ்சுழி  எழுத்துகளாக உள்ளன.
இ) மேற்சுழி எழுத்துகளாக உள்ளன
ஈ) கீழ்ச்சுழி எழுத்துகளாக உள்ளன

6. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி எழுத்துகள் எவை?

அ, எ, ஒள, ண, ஞ
ஆ) அ, இ, ட, ய
இ) அ, எ, ஒள, ண, ஞ
ஈ) இ, வ, ச, ஐ

7. கீழ்க்கண்டவற்றுள் இடஞ்சுழி எழுத்துகள் எவை?

அ, எ, ஒள, ண, ஞ
ஆ) அ, இ, ட, ய
இ) ட, ய, ழ
ஈ) இ, வ, ச, ஐ

8. தமிழ் என்ற சொல்லை முதன் முதலில் எடுத்தான்ட இலக்கண நூல்.

அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) முத்துவீரியம்
ஈ) நன்னூல்

9. தமிழென் கிழவியும் அதனோ ரற்றே -  என்று  கூறும் இலக்கண நூல்.

அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) முத்துவீரியம்
ஈ) நன்னூல்

10. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்நூலில் கையாளப்பட்டது.

அ) நற்றிணை
ஆ) கலித்தொகை
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருவாசகம்

11. தமிழ்நாடு என்ற சொல் சிலப்பதிகாரத்தில் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது.

அ) புகார் காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்

12. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய, இதுநீ கருதினை ஆயின்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல்.

அ) தொல்காப்பியம்
ஆ) அப்பர் தேவாரம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருவாசகம்

13. தமிழன் என்ற சொல் முதன்முதலில் கையாண்ட நூல்

அ) தொல்காப்பியம்
ஆ) அப்பர் தேவாரம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருவாசகம்

14. ‘தமிழன் கண்டாய்’ என்ற தொடர் எந்நூலில் இடம்பெற்றுள்ளது.

அ) திருநெடுந்தாண்டகம்
ஆ) திருக்குறுந்தாண்டகம்
இ) திருத்தாண்டகம்
ஈ) எழில் தாண்டகம்

15. ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்

அ) வளமை
ஆ) சீர்மை
இ) முழுமை
ஈ) 

16. கீழ்க்கண்டவற்றுள் இனிப்பு அல்லாத காய் எது.

அ) மிளகாய்
ஆ) எட்டிக்காய்
இ) சுண்டக்காய்
ஈ) பாகற்காய்

17. பாகற்காய் பிரித்து எழுதுக

அ) பாகு + அல்காய்
ஆ) பாகல் + காய்
இ) பாகு + அல் + காய்
ஈ) பாகற் + காய்

18. முத்தமிழ் -  பிரித்து எழுதுக

அ) முத் + தமிழ்
ஆ) முத்து + அமிழ்
இ) மூன்று + தமிழ்
ஈ) மூ + தமிழ்


19. 'மா' என்னும் சொல்லின் பொருள்.

அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா

20. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

அ) சொற்களின்
ஆ) எழுத்துகளின்
இ) வார்த்தைகளின்
ஈ) எண்களின்

21 உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்! என்று கூறியவர்.

அ) நா. முத்துக்குமார்
ஆ) அறிவுமதி
இ) பா. விஜய்
ஈ) வைரமுத்து

No comments:

Post a Comment