
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் - பா. எண். 2:4-12
சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- ஊழி – யுகம்
- ஊழ – முறை
- தண்பெயல் – குளிர்ந்த மழை
- ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
- பீடு – சிறப்பு
- ஈண்டி – செறிந்து திரண்டு
இலக்கணக் குறிப்பு
- ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
- வளர்வானம் – வினைத்தொகை
- செந்தீ – பண்புத்தொகை
- வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
- கிளர்ந்த – பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
கிளர்ந்த = கிளர் + த் (ந்) + த் + அ
- கிளர் – பகுதி
- த் – சந்தி
- த் (ந்) – ந் ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
நூல் வெளி
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
தெரிந்து தெளிவோம்
இல்நுழைகதிர்
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
.............................................................
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் 3 - 1 - 6)
அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
2. எட்டுத்தொகைநூல்களுள் ஒன்று
ஆ) நாலடியார்
இ) பரிபாடல்
ஈ) மூதுரை
3. இதுவரைக்கும் நமக்கு கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் என்ணிக்கை
ஆ) 34
இ) 44
4. விசும்பில் ஊழி எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்
ஆ) கீரந்தையார்
இ) மருதனார்
ஈ) ஓதலாந்தையார்
5. பரிபாடலை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது.
ஆ) புகழ் பரிபாடல்
இ) உயர் பரிபாடல்
ஈ) நற்பரிபாடல்
6. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்
ஆ) கலித்தொகை
இ) பட்டினப்பாலை
ஈ) பரிபாடல்
7. பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள்
ஆ) உரையாசிரியர்கள்
இ) வரலாற்று ஆசிரியர்கள்
ஈ) ஆய்வாளர்கள்
8. எட்வின் ஹப்பிள் என்பவர்
ஆ) அமெரிக்க மருத்துவர்
இ) போர்ச்சுக்கீசிய மாலுமி
ஈ) அமெரிக்க வானியல் அறிஞர்
9. எட்வின் ஹப்பிள் எந்த ஆண்டு நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிருபித்தார்.
ஆ) 1924
இ) 1931
ஈ) 1934
10. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் என்று குறிப்பிடும் நூல்.
ஆ) கலித்தொகை
இ) திருவாசகம்
ஈ) பரிபாடல்
11. முதல் பூதம் எனப்படுவது.
ஆ) ஆகாயம்
இ) காற்று
ஈ) நீர்
12. கருவளர் வானத்து இசையில் தோன்றி
உருஅறி வார ஒன்றி ஊழியும் - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள இலக்கிய நயம்?
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
13. பரிபாடலில் புவிக்கு உவமையாக கூறப்பட்ட ஊழி.
ஆ) நெருப்புப் பந்து
இ) உருவம் இல்லா காற்று
14. கீழ்க்கண்டவற்றுள் நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்தது
ஆ) நீர்
இ) தீ
ஈ) பூமி
15. விசும்பு என்பதன் பொருள்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
16. ஊழி என்பதன் பொருள்
இ) யுகம்
ஈ) முறை
இ) யுகம்
ஈ) முறை
18. ஆர்தருபு என்பதன் பொருள்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
20. குளிர்ந்த மழை என்னும் பொருள் தரும் சொல்
ஆ) விசும்பு
இ) தண்பெயல்
ஈ) ஈண்டி




No comments:
Post a Comment