சங்க இலக்கியம்
- பாண்டியர்கள்
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்க காலம்எனப்படும்.
- கி.மு. 2 நூற்றாண்டு
முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை
உள்ள இடைப்பட்டக் காலத்தைச் சங்க காலம் என்பர்.
- சங்க
காலத்தில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.
- சங்க
இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் செய்யுட்கள் என்று கூறுவார் பேராசிரியர்.
- சங்க
இலக்கிய நூல்களைத் தொகை, பாட்டு என
இரண்டாகப் பிரிப்பர்.
- பல
புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தொகை என்றும் தனி ஒரு புலவர் பாடிய
பாடலைப் பாட்டு என்றும் கூறுவர்
- தொகை என்பது எட்டுத்தொகையைக் குறிக்கும்
- பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும்.
- எட்டுத்தொகை
என்பது எட்டுத் தொகை நூல்களின் தொகுப்பாகும்.
- சங்க
இலக்கியங்களைத் திணை இலக்கியங்கள் என்றும் கூறுவர்.
- சங்க
இலக்கியத்தில் வரும் அகப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றிலும் புறப்பாடல்கள்
புலவர்கள் கூற்றிலும் அமைந்துள்ளன.
- சங்க இலக்கியங்களை பதினெண்
மேற்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
- எட்டுத்
தொகையில் எட்டுத் தொகை நூல்கள் உள்ளன. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநாநூறு
என்பனவாகும்.
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.
- எட்டுத்
தொகை நூல்களை அகம், புறம் (அகத்திணை
நூல்கள்,
புறத்திணை நூல்கள்) என இரண்டாகப் பிரிப்பர்.
- எட்டுத்தொகை நூல்களில் அகத்திணை நூல்கள் ஐந்து.
- அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பனவாகும்.
- எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை நூல்கள் இரண்டு.
- அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனவாகும்.
- எட்டுத்தொகை
நூல்களுள் அகமா? புறமா? என்ற
ஐயம்கொண்ட நூல் பரிபாடல்.
- பரிபாடலை
அகப்புற நூல்கள் என்றும் கூறுவர்.
- எட்டுத் தொகையுள் பாடப்பட்ட யாப்பினால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு.
- அவை, கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு) என்பன.
- இந்த
கலிப்பாவும் பரிபாடலும் அகத்திணைப் பாடுதற்குரிய பாக்களாகத் தொல்காப்பியர்
கூறுவார்.
- எட்டுத்
தொகை நூல்களுள் காலத்தால் முந்தைய நூல் புறநானூறு.
- எட்டுத்
தொகை நூல்களுள் காலத்தால் பிந்தைய நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை. பரிபாடல்
என்பன
- ‘நல்’ என்ற
அடைமொழிக் கொண்ட நூல் நற்றிணை.
- ‘நல்ல’ என்ற
அடைமொழிக் கொண்ட நூல் குறுந்தொகை.
- ‘ஒத்த’ என்ற
அடைமொழிக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து.
- ‘ஓங்கு’ என்ற
அடைமொழிக் கொண்ட நூல் பரிபாடல்.
- ‘கற்றறிந்தார்
ஏத்தும்’ என்ற
அடைமொழிக் கொண்ட நூல் கலித்தொகை.
- எட்டுத்தொகை
நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல்
ஆகியன தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுத் தொகுக்கப்பெற்ற தனிநிலைச்
செய்யுட்களாகும்.
- ஐங்குறுநூறு. கலித்தொகை
ஆகியன சொல்லாலும், பொருளாலும் தொடர்ந்து பாடப்பட்ட தொடர்நிலைச்
செய்யுட்களாகும்.




No comments:
Post a Comment