Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 3, 2025

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 03


முச்சங்கங்கள் இருந்தமைக்கான சான்றுகள்

தமிழகத்தில் முதல், இடை, கடை என மூன்று சங்கங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுவது குறித்து பல்வேறு மாறுபட்டக் கருத்துக்கள் இருந்தாலும் அது குறித்த பல சான்றுகளும் இருப்பதை மறுக்க முடியாது. சங்கம் இருப்பதற்கான சான்றுகளை மூன்று கூறுகளாக பகுக்கலாம். அவை,

1. செப்பேடு
2. இலக்கியச் சான்றுகள்
3. உரை சான்றுகள்

செப்பேடு

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு சின்னமனூர் செப்பேட்டில் காணப்படும் குறிப்பு:

"மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்"

இலக்கியச் சான்று

தமிழ் இலக்கியங்களில் சங்கம் இருந்தமைக்குப் பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக, சங்க இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கியங்களில் சங்கம் இருந்தமைக்கான சான்றுகள் விரவி இருக்கின்றன.

சங்க இலக்கியம்:

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமோடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை" - புறம்:72

"பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண்
அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை" - அகம்(உரைப்பாயிரம்)

" தொல்லாணை நல்லாசிரியர்,
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்" - மதுரைக்காஞ்சி

பக்தி இலக்கியம்:

"சங்க முகத்தமிழ் சங்க மலித்தமிழ்" - திருமங்கையாழ்வார்

"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனக் கிழிதருமிக் கருளினோன் காண்" - நாவுக்கரசர்

"உயர்மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்" - மாணிக்கவாசகர்

"தலைச்சங்கப் புலவனார் தன்முன்" - சேக்கிழார்

"சங்கத்தமிழ் மூன்றும் தா" - ஒளவையார்

உரைச்சான்றுகள்:

இலக்கியங்களுக்கு உரை தந்த உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் சங்கம் இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளனர். அவை,

சிலப்பதிகார உரை - அடியார்க்குநல்லார்
தொல்காப்பிய உரை - பேராசிரியர்
தொல்காப்பிய உரை - நச்சினார்க்கினியர்

No comments:

Post a Comment