Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 27, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 1 (மொழியின் சிறப்புகள்)


 மதிப்பீடு

1. முத்தமிழ் தொகைச்சொல்லை விளக்குக.

    முத்தமிழ் - மூன்று + தமிழ்

* இயற்றமிழ்
* இசைத்தமிழ்
* நாடகத்தமிழ்

  • இயற்றமிழ் : இயல்பாக எழுதப்படுவதும் , பேசப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
  • சான்று : இருவகை வழக்கிலும் உள்ள செய்யுளும் , வசனமும் அடங்கிய நூல்களின் தொகுதி.
  • இசைத்தமிழ் : பண்ணோடு கலந்தும் , தாளத்தோடு கூடியும் இசைக்கப்படுவது இசைத்தமிழ் ஆகும்.
  • சான்று : பண்களால் ஆகிய பாடல்கள் கீர்த்தனங்கள் , வரிப்பாட்டு , சிந்து , ஆனந்தக் களிப்பு , கும்மி , தெம்மாங்கு .
  • நாடகத் தமிழ் : இயற்றமிழும் , இசைத்தமிழும் கலக்க நாடகத் தமிழ் பிறக்கும்.
  • சான்று : மனோன்மணியம்
2. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.

எட்டுத்தொகை நூல்கள் :

1 ) நற்றிணை
2 ) குறுந்தொகை
3 ) ஐங்குறுநூறு
4 ) பதிற்றுப்பத்து
5 ) பரிபாடல்
6 ) கலித்தொகை
7 ) அகநானூறு
8 ) புறநானூறு

பத்துப்பாட்டு 

1 ) திருமுருகாற்றுப்படை
2 ) பொருநராற்றுப்படை
3 ) சிறுபாணாற்றுப்படை
4 ) பெரும்பாணாற்றுப்படை
5 ) முல்லைப்பாட்டு
6 ) மதுரைக்காஞ்சி
7 ) நெடுநல்வாடை
8 ) குறிஞ்சிப்பபாட்டு
9 ) பட்டினப்பாலை
10) மலைபடுகடாம்

3. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறுக.

1 ) சிலப்பதிகாரம்
2 ) மணிமேகலை
3 ) குண்டலகேசி
4 ) வளையாபதி
5 ) சீவகசிந்தாமணி

4. பாரதியின் படைப்புகளைப் பட்டியலிடுக.

* பாஞ்சாலி சபதம்
* பாப்பா பாட்டு
* கண்ணன் பாட்டு
* குயில் பாட்டு மற்றும் பல.

No comments:

Post a Comment