Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 06 ( ஐ.நா பற்றியது )

  1. ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN)
  2. ஐ.நா. சபை ஏன் உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
  3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன? உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
  4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941
  5. 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்? அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
  6. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? இலண்டன்
  7. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1946
  8. ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்? பிராங்ளின் ரூஸ்வெல்ட்
  9. ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது? லீக் ஆப் நேஷன்ஸ்
  10. லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது? 1920
  11. ஐ.நா பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்? 5
  12. ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
  13. ஐ.நா சபை எத்தனை உள்ளமைப்புகளைக் கொண்டது? 6
  14. ஐ.நா சபையின் உள்ளமைப்புகள் யாவை? 1. பொதுச்சபை 2. பாதுகாப்புச்சபை 3.பொருளாதார சமூகசபை 4. பொறுப்பாண்மைக்குழு 5. பன்னாட்டு நீதிமன்றம் 6. செயலகம்
  15. ஐ.நா பொதுசபை (General Assembly) எங்குள்ளது? நியூயார்க்
  16. ஐ.நா. பொதுச்சபையில் ஒரு நாட்டுக்கு எத்தனை வாக்குகள் உண்டு? ஒரு வாக்கு மட்டும் தான் (5பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்)
  17. ஐ.நா. பொதுச்சபையில் எதைப் பற்றி விவாதிக்கலாம்? ஐ.நா. சார்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி (பாதுகாப்பு சபை கையாளும் விசயங்கள் தவிர்த்து)
  18. ஐ.நா பொதுச்சபையின் பணிகள் என்ன? ஐ.நா.பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தேர்வு செய்வது போன்றவை.
  19. ஐ.நா பொதுச்சபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது? 2 முறை
  20. .நா சபையின் மகாநாடு எப்போது நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமை
  21. ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
  22. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
  23. சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது? ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)
  24. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்? ஐ.நா. பாதுகாப்புசபை
  25. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன? 5 நாடுகள்
  26. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
  27. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்? ஐ.நா. பொதுச்சபை
  28. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது? 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992
  29. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது? இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.
  30. ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
  31. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 3 ஆண்டுகள்
  32. ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு? 1 ஆண்டு
  33. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)
  34. ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது? 54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்
  35. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன? பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.
  36. ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
  37. ஐ.நா.பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
  38. ஐ.நா.பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது? சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.
  39. ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது? ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)
  40. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது? International Court of Justice திஹேக், நெதர்லாந்து
  41. ஐ.நா.சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்தெந்த நாடுகள் கட்டுப்பட்டவை? ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும்.
  42. ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகின்றனர்? 15
  43. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 9 வருடங்கள்
  44. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் எத்தனை நீதிபதிகளை தேர்வு செய்யலாம்? ஒன்று
  45. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் அலுவல் மொழி எது? ஆங்கிலம், பிரெஞ்சு
  46. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய (2015) தலைவர் யார்? பீட்டர் தோம்கா (ஸ்லோவாகியா)
  47. ஐ.நா சபையின் செயலகம் முதன்முதலில் எங்கிருந்தது? லண்டனில் இருந்தது.
  48. ஐ.நா சபையின் செயலகம் தற்போது எங்குள்ளது? நியூயார்க்
  49. ஐ.நாவின் முக்கிய அமைப்பு எது? ஐ.நா. செயலகம் (Secreteriate)
  50. ஐ.நாவின் பொதுச்செயலாளரை எவ்வாறு தேர்ந்தெடுப்பர்? ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிபாரிசுப்படி பொதுச்சபை நியமிக்கும்
  51. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள் 52 ஐ.நா சபையின் பொதுச்செயலாளராக பதவிபுரிந்தவர் மீண்டும்
  52. அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க சட்டத்தில் இடம் உண்டா ? உண்டு
  53. ஐ.நா சபையின் தற்போதைய (2015) பொதுச்செயலாளர் யார்? பான் கீ மூன் (தென்கொரியா)
  54. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக கானா நாட்டை சார்ந்த யார்
  55. பணிபுரிந்தவர்? கோஃபி அன்னான் (1997)
  56. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக எகிப்து நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? பொட்ரோஸ் காலி (1992)
  57. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பெரு நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஜாவியர் பெரிஸ் டி குவையர் (1982)
  58. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? குர்ட் வான்ஹைம் (1972)
  59. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பர்மா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஊதாண்ட் (1961)
  60. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக சுவீடன் நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டாக் .ஹாமர் ஸ்கால்டு (1953)
  61. ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக நார்வே நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டிரைக்வே-லை (1946)
  62. ஐ.நா. சபையின் அலுவல் மொழிகள் எவை? ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ரஷ்யா, ஸ்பானிஷ், அரபி.
  63. ஐ.நா. சபை எப்போது உருவாக்கப்பட்டது? 24.10.1945
  64. ஐ.நா. சபையின் மொத்த உறுப்பு நாடுகள் எத்தனை? 193 நாடுகள்
  65. ஐ.நா. சபையில் இந்தியா உறுப்பினராக சேர்ந்தது எப்போது? 30.10.1945
  66. ஐ.நா. சபையில் 193-வது உறுப்பினராக சேர்ந்த நாடு எது? தெற்கு சூடான் (2011)
  67. ஐ.நா. சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் எவை? சீனா,பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
  68. ஐ.நா. சபையின் வீட்டோவின் அதிகாரம் என்ன? ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் வீட்டோ
  69. அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு ‘வீட்டோ” செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.
  70. ஐ.நா தினத்தை என்று கொண்டாடுகிறோம்? அக்டோபர் 24
  71. ஐ.நாவின் சின்னம் எது? இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்
  72. ஐ.நாவின் கொடி எது? இளம் நீல பின்புலத்தில் வெண்மை நிற ஐ.நா.சின்னத்தில்
  73. வடதுருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக்கிளைகள் சுற்றி நிற்பதாக அமைந்துள்ளது.
  74. ஐ.நாவின் சின்னம் எதை குறிப்பிடுகிறது? உலக அமைதி
  75. ஐ.நா. சபையின் முகவரி எது? First Avenue, UN Plaza, New York City, USA, Website www.UN.org
  76. ஸட்டன் பிளேஸ் என்பது யாருடைய மாளிகை? ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகை
  77. ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகையான ஸட்டன் பிளேஸ் எங்குள்ளது? மன்ஹாட்டன் நகரம் (அமெரிக்கா)
  78. ஸட்டன் பிளேஸ் மாளிகை யார் யாருக்கு அளித்தது? 18 ஏக்கர்
  79. ஐ.நா சபை அமைந்துள்ள 18 ஏக்கர் நிலம் யார் பரிசாக அளித்தது? ஜான் டி. ரோக்
  80. ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள 18 ஏக்கர் நிலப்பகுதி எத்தகைய நிலப்பகுதியாக கருதப்படுகிறது?சர்வதேச நிலப்பகுதியாக (International Territory)
  81. ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருந்த பின்னர் தனது நாட்டின் அதிபரானவர் யார்? குர்ட் வான்ஹைம் (ஆஸ்திரியா)
  82. விளையாட்டு கூட்டமைப்புகள் தவிர்த்து உலக நாடுகள் உறுப்பினராக உள்ள முதல் மற்றும் இரண்டாவது அமைப்பு எது? முதல் அமைப்பு ஐ.நா.சபை (193 உறுப்பினர்கள்) இரண்டாவது அமைப்பு இன்டர்போல் (190 உறுப்பினர்கள்)
  83. ஐ.நா.சார்ட்டரில் இந்தியாவிற்காக கையொப்பமிட்டவர் யார்? சர்.இராமசாமி முதலியார்
  84. உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஒரே இந்தியப் பெண்மணி யார்? ராஜ்குமாரி அம்ருத்கௌர்
  85. ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் உரையாற்றிய இந்தியர் யார்? வி.கே.கிருஷ்ண மேனன் (1957)
  86. ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் துணை இயக்குனராக பதவி வகித்த இந்தியர் யார்? ஜஸ்டிஸ் பி.என்.பகவதி
  87. ஐ.நா. அண்டர் செகரெட்டரியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? சசி தரூர்
  88. இண்டர் பார்லிமெண்டரி யூனியனின் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண்மணி யார்? நஜ்மா ஹெப்துல்லா
  89. ஐ.நா. சபையில் முதன்முதலில் இந்தியில் உரையாற்றியவர் யார்? ஏ.பி.வாஜ்பாய்
  90. ஐ.நா சபையில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்? எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1966)
  91. உலக வங்கியின் இவாலுவேஷன் டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?வினோத் தாமஸ்
  92. உலக சுகாதாரக் கழகத்தின் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்? விஜயேந்திரா என்.கவுர்
  93. சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய இந்திய நீதிபதி யார்? ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரி
  94. ஐ.நாவில் இந்தியாவின் தற்போதைய நிரந்தர உறுப்பினர் யார்? அசோக்குமார் முகர்ஜி
  95. ஐ.நாவின் 190வது உறுப்பினர் நாடு எது? சுவிட்சர்லாந்து (2002)
  96. ஐ.நாவின் 191வது உறுப்பினர் நாடு எது? கிழக்கு டிமெர் (2002)
  97. ஐ.நாவின் 192வது உறுப்பினர் நாடு எது? மோன்டனெக்ரா (2006)
  98. 2015 நிலவரப்படி ஐ.நாவில் உறுப்பினராக சேர்ந்த கடைசி நாடு எது? தெற்கு சூடான் (193வது நாடாக 2011ல் சேர்ந்தது)
  99. ஐ.நா சபையில் உறுப்பினராக இல்லாத நாடுகள் எவை? கொசாவா, சஹ்ராவி அரபுக்குடியரசு, துருக்கிய சைப்ரஸ், தைவான், பாலஸ்தீன அதாரிட்டி, வாடிகன் நகரம்.
  100. ஐ.நா. சபை 2015ம் ஆண்டை எவ்வாறு அறிவித்துள்ளது? சர்வதேச ஒளிவருடம் (Year of Light) சர்வதேச மண்வருடம் (Year of Soil)
  101. ஐ.நா.சபை 2014-ம் ஆண்டை எவ்வாறு அறிவித்தது? சர்வதேச குடும்ப விவசாய வருடம்.
  102. ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24

No comments:

Post a Comment