Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 1, 2021

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 600(அகர வரிசையில்)

இங்கே சொடுக்கவும்

அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24. அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25. அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42. அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
43. அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47. அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்
56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்
57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள

60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73. ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்
77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700
84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59
85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700
88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

101. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137. உண்டாட்டு - கள்குடித்தல்
138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156. உலகின் முதல் நாவல் – பாமெலா
157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக் கவிஞர் -சுரதா
159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு

170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181. எயில் காத்தல் – நொச்சி
182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்

201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்

221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை - ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
257. கல்கியின் முதல் நாவல் - விமலா
258. கலம்பக உறுப்புகள் - 18
259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா


: 281. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301. கிரவுஞ்சம் என்பது – பறவை
302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750
303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்

346. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373. சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
383. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்
384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை

401. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
402. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
403. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408. சேயோன் - முருகன்
409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414. சைவசமயக் குரவர்கள் - நால்வர்
415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும


417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார்
428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435. தண்டி ஆசிரியர் - தண்டி
436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள்
437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்
479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்

488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
490. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் - திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்

551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் – சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்

No comments:

Post a Comment