Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 18, 2020

எழுத்தாளர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி.



பிறப்பு:

கல்கி (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.

35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும்.

தமிழிசை வளர்ச்சிக்கு பங்கு:

சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி.
தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை “தரம் குறையுமா” எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம்வெளியிட்டுள்ளது.

படைப்புகள்:

  • தியாகபூமி (1938-1939)
  • மகுடபதி (1942)
  • அபலையின் கண்ணீர் (1947)
  • சோலைமலை இளவரசி (1947)
  • அலை ஓசை (1948)
  • தேவகியின் கணவன் (1950)
  • மோகினித்தீவு (1950)
  • பொய்மான் கரடு (1951)
  • புன்னைவனத்துப் புலி (1952)
  • அமரதாரா (1954)
  • பார்த்திபன் கனவு (1941 – 1943)
  • சிவகாமியின் சபதம் (1944 – 1946)
  • பொன்னியின் செல்வன் (1951 – 1954)

சிறுகதைகள்:

  • சுபத்திரையின் சகோதரன்
  • ஒற்றை ரோஜா
  • தீப்பிடித்த குடிசைகள்
  • புது ஓவர்சியர்
  • வஸ்தாது வேணு
  • அமர வாழ்வு
  • சுண்டுவின் சந்நியாசம்
  • திருடன் மகன் திருடன்
  • இமயமலை எங்கள் மலை
  • பொங்குமாங்கடல்
  • மாஸ்டர் மெதுவடை
  • புஷ்பப் பல்லக்கு
  • பிரபல நட்சத்திரம்
  • பித்தளை ஒட்டியாணம்
  • அருணாசலத்தின் அலுவல்
  • பரிசல் துறை

விருதுகள்:

சங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை)

No comments:

Post a Comment