பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 3
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
- கூவிளம் தேமா மலர்
- கூவிளம் புளிமா நாள்
- தேமா புளிமா நாள்
- புளிமா தேமா பிறப்பு
- ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---------.
- புறநானூறு
- தென்றல் விடு தூது
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- ’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --------.
- புறநானூறு
- தென்றல் விடு தூது
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- ’பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் -------------.
- புறநானூறு
- குறுந்தொகை
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- ’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் -----------.
- கொன்றை வேந்தன்
- குறுந்தொகை
- சிலப்பதிகாரம்
- நற்றிணை
- காசிக்காண்டம் – இந்நூலை எழுதியவர்?
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதியார்
- வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் --------------.
- புறநானூறு
- குறுந்தொகை
- நறுந்தொகை
- நற்றிணை
- சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்-------------.
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதியார்
- மலைபடுகடாம் – இந்நூலை எழுதியவர்?
- பெருங்கெளசிகனார்
- நப்பூதனார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதியார்
- மலைபடுகடாம் – இந்நூலின் வேறுபெயர்------------.
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- கூத்தராற்றுப்படை
- பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
- தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
- தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
- தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
- தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
- ‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது --------.
- புத்தூர்
- மூதூர்
- பேரூர்
- சிற்றூர்
- அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------.
- வேற்றுமை உருபு
- எழுவாய்
- உவம உருபு
- உரிச்சொல்
- காசிக்காண்டம் என்பது -----------.
- காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- காசி நகரத்தின் பெருமையைக் குறிக்கும் நூல்
- காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
- ’விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறநானூறு . இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை---------.
- நிலத்திற்கேற்ற விருந்து
- இன்மையிலும் விருந்து
- அல்லிலும் விருந்து
- உற்றாரின் விருந்து.
- ”இல்லறம் புரிவது விருந்தோம்பல் பொருட்டே” என்றவர் யார்?
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- திருவள்ளுவர்
- பாரதியார்
- ”விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்---------.
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- கலிங்கத்துப்பரணி
- ”இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் , இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே”
என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்-----------.- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- புறநானூறு
- நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று கொடுத்த உணவுப்பொருளாகச்
சிறுபாணாற்றுப்டை கூறும் உணவுப்பொருள் எது?- குழல் மீன் கறி
- வஞ்சரம் மீன் கறி
- தினை மாவு
- நெய்யில் பொரித்த கறி
- அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, சமைத்து, சிவனடியாருக்கு
வழங்கியவர் -------.- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- மாறநாயனார்
- பாரதியார்
- ஆண்டுதோறும் மினசோட்டா தமிழ்ச்சங்கம் மூலம் வாழையிலை விருந்து வைக்கும் நாடு--------.
- ரஷ்யா
- சிங்கப்பூர்
- அமெரிக்கா
- மலேசியா
- விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறும் ஒழுக்கங்களின் எண்ணிக்கை--------.
- ஒன்பது
- பத்து
- பன்னிரண்டு
- பதினெட்டு
- ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைப்பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தம் என்று கூறும் நூல்----------.
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- விவேகசிந்தாமணி
- முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும்
நூல்------.- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- விவேகசிந்தாமணி
- முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் ------------.
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதியார்
- வெற்றிவேற்கை என்னும் நூலை எழுதியவர்-------.
- இளங்கோவடிகள்
- நப்பூதனார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதியார்
- கொடுக்கப்பட்டுள்ள நூல்களுள் அதிவீரராம பாண்டியர் எழுதாத நூல் எது?
- நைடதம்
- லிங்கபுராணம்
- மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- திருக்கருவை அந்தாதி
- மலைபடுகடாம் நூலின் அடிகளின் எண்ணிக்கை ------------.
- 583
- 584
- 582
- 585
- மலைபடுகடாம் – இதன் உருவகம் முறையே--------.
- யானை – மலை, பல்வகை ஓசை – மதம்
- யானை – மதம், பல்வகை ஓசை – மலை
- யானை – மலை, பல்வகை ஓசை – ஆறு
- யானை – மலை, பல்வகை ஓசை – தந்தம்
- வேண்டிய என்னும் கூட்டுநிலைப் பெயரெச்சம் எவ்வாறு உருவாகின்றது?
- பெயரெச்சங்கள், செய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
- பெயரெச்சங்கள், செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
- பெயரெச்சங்கள், செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
- பெயரெச்சங்கள், செய்யூ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேரும் போது
'எய்துேர் எய்தாப் பழி' இக்குறள் அடிக்கு மபாருந்தும் ோய்ப்பாடு எது?
ReplyDeleteAns enna
DeleteHai
DeleteAns
DeleteAns solla
ReplyDelete