9TH TAMIL - மகனுக்கு எழுதிய கடிதம்
- கவிஞர் நா.முத்துகுமார், தன் மகனுக்கு எழுதியதாக இக்கடிதம் அமைந்துள்ளது.
- “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என்று கூறியவர் = திருவள்ளுவர்.
- கைபேசியின் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.
- கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள்.
- கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன.
- தாகூர், நேரு, டி.கே.சி., வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு. வரதராசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
