Breaking

Tuesday, May 5, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 43





வரலாறு மற்றும் பண்பாடு

1. வரலாறு (History): கிரேக்க மூலச்சொல் 'இஸ்டோரியா' என்பதன் பொருள்: விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2. வரலாற்றின் தந்தை: ஹெரடோடஸ்.

3. அசோகர் குறித்த நூல்: சார்லஸ் ஆலன் வெளியிட்டது: The Search for the India's Lost Emperor.

4. 'தம்மா' (பிராகிருதம்) என்பதன் பொருள்: தர்மா (அறநெறி) (சமஸ்கிருதத்தில்).

5. மனித இனம்:

o ஆஸ்ட்ரலோபிதிகஸ்: தோன்றிய இடம் - கிழக்கு ஆப்பிரிக்கா.

o ஹோமோ ஹெபிலிஸ்: வாழ்ந்த பகுதி - தென்னாப்பிரிக்கா.

o ஹோமோ எரக்டஸ்/ஜாவா மனிதன்: வாழ்ந்த பகுதிகள் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா.

o நியாண்டர்தால் மனிதன்: சான்றுகள் கிடைத்த ஐரோப்பிய நாடு - ஜெர்மனி.

o குரோ-மேக்னான்ஸ் மனிதன்: சான்றுகள் கிடைத்த குகை - லாஸ்காஸ் குகைகள் (பிரான்ஸ்).

o ஹோமோ சேப்பியன்ஸ் (நவீன மனிதன்): தோன்றிய இடம் - ஆப்பிரிக்கா.

6. மானுடவியல் (Anthropology): உருவான கிரேக்க வார்த்தைகள் - ஆந்த்ரோபோஸ் (Anthropos) மற்றும் லோகோஸ் (Logos).

சிந்துவெளி நாகரிகம் மற்றும் பண்டைய நகரங்கள்

1. சிந்துவெளி நாகரிகம்:

o காலம்: வெண்கலக் காலம்.

o ஆபரண மணிக்கற்கள்: கார்னிலியன் (சிவப்பு நிறம்).

o அறியாத உலோகம்: இரும்பு.

o அறியாத விலங்கு: குதிரை.

o கப்பல் கட்டும் தளம்: லோதல் (குஜராத்).

o வெண்கலச் சிலை: நடன மாது (மொகஞ்சதாரோ).

o எடையளவு விகிதம்: 1:2:4:8:16:32.

2. பழங்கால நாகரிகங்கள்:

o மெசபடோமியா: ஆறுகள் - யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ்.

o எகிப்து: நதிக்கரை - நைல் நதி.

3. பண்டைய தமிழக நகரங்கள்:

o காஞ்சிபுரம்:

§ புகழாரம் ('கல்வியில் கரையிலாத காஞ்சி'): திருநாவுக்கரசர்.

§ புகழாரம் ('நகரங்களில் சிறந்தது காஞ்சி'): காளிதாசர்.

§ சிறப்புப் பெயர்: கோயில்களின் நகரம்.

o சேர நாடு: தலைநகரம் - வஞ்சி (கரூர்).

o சோழ நாடு: தலைநகரம் - உறையூர் (மற்றும் புகார்).

o பாண்டிய நாடு: தலைநகரம் - மதுரை.

o மதுரை அங்காடிகள்:

§ பகல் நேர அங்காடி: நாளங்காடி.

§ இரவு நேர அங்காடி: அல்லங்காடி.

No comments:

Post a Comment