Breaking

Saturday, April 11, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 12


1.   மனித உணவுக் குழாயின் நீளம் தோராயமாக எவ்வளவு? - 9 மீட்டர்

2.   உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய எந்த நொதி உள்ளது? - அமைலேஸ்

3.   இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் பெயர் என்ன? - ஹைட்ரோகுளோரிக் அமிலம்

4.   மூச்சுப்பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் அமைப்பு எது? - குரல்வளை மூடி (எப்பிகிளாட்டிஸ்)

5.   நுரையீரல்களைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன? ப்ளூரா (Pleura)

6.   மனித இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது? - நான்கு அறைகள்

7.   மனித இதயத்தை மூடியுள்ள பாதுகாப்பு உறையின் பெயர் என்ன? பெரிகார்டியம்

8.   ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இருக்கும்? - 72 முதல் 80 வரை

9.   அசுத்த இரத்தத்தினைக் கடத்தும் தமனியின் பெயர் என்ன? - நுரையீரல் தமனி

10.  சுத்த இரத்தத்தினைக் கடத்தும் சிரையின் பெயர் என்ன? - நுரையீரல் சிரை

11.  மூளையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உறைகளின் பெயர் என்ன? - மூளை உறைகள் (Meninges)

12.  நமது உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுவது எது? மூளை

13.  சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது? - நெஃப்ரான்

14.  நமது உடலில் உள்ள நீரின் சதவீதம் என்ன? - 70 சதவிகிதம்

15.  குழந்தைகள் பிறக்கும் பொழுது தோராயமாக எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? - 300க்கும் அதிகமான எலும்புகள்

16.  மனிதக் கண்ணின் மூன்று முக்கியப் பகுதிகள் யாவை? - கார்னியா, ஐரிஸ், கண்மணி (பியூப்பில்)

17.  மனிதனின் புறச் செவி மடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பின்னா (Pinna)

18.  உணவை அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மாஸ்டிகேசன்

19.  முருங்கை இலையில் நிறைந்துள்ள முக்கிய வைட்டமின்கள் யாவை? - வைட்டமின் - A மற்றும் C

20.  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் என்ன? - கிரிட்டினிசம்

21.  கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் உலகளவில் இந்தியாவின் இடம் என்ன? - இரண்டாவது இடம்

22.  டெங்கு காய்ச்சல் எந்த வைரஸால் ஏற்படுகிறது? - DEN-1, 2 (பிளெவி வைரஸ்)

23.  இளம் சிவப்பு கண் நோய் (Conjunctivitis) எந்த நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது? - வைரஸ் மற்றும் பாக்டீரியாவால்

24.  டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியா எது? - சால்மோனெல்லா டைபி

25.  தட்டம்மை (வாரிசெல்லா) எந்த வைரஸால் ஏற்படுகிறது? - வரிசெல்லா ஜோஸ்டர்

No comments:

Post a Comment