Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 13, 2025

6TH TAMIL - இன்பத் தமிழ்


பாடலின் பொருள்

தமிழுக்கு அமுது என்று பெயர்

இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.

தமிழுக்கு நிலவு என்று பெயர்

இன்பத்தமிழ் எங்கன் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

தமிழுக்கு மணம் என்று பெயர்

அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.

தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது

நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.

தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது

இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.

தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது

தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.



சொல்லும் பொருளும் 

நிருமித்த - உருவாக்கிய 
விளைவு - வளர்ச்சி 
சமூகம் - மக்கள் குழு 
அசதி - சோர்வு
வான் – வானம்
இணை – சமம்
சுடர் – ஒளி

எதிா்ச்சொல்
  
இளமை x முதுமை
புகழ் x இகழ்
அசதி x சுறுசுறுப்பு
ஒளி x இருள்
இன்பம் x துன்பம்
அமுதம் x விடம்


தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மமா உனக்கும் எனக்கும்!
அமிழ்ததே! நீ இல்லலை என்றறால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!
தமிழே! உன்னனை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்! - காசி ஆனந்தன்

பாரதிதாசன் குறிப்பு

பெயர் : பாரதிதாசன்
இயற்பெயர் : சுப்புரத்தினம்
பிறந்த ஊர் : புதுச்சேரி
பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
பணி : தமிழாசிரியர்
சிறப்புப்பெயர் : பாவேந்தர்,புரட்சிக் கவிஞர்
காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை

இயற்றிய நூல்கள் : 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாரதிதாசனின் இயற்பெயர்

அ) சுப்பிரமணியன்
ஆ) சுப்புரத்தினம்
இ) சுப்புரத்தினதாசன்
ஈ) சுப்புக்குட்டி

2. யார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் தன்பெயரை மாற்றிக் கொண்டார்.

அ) திரு.வி.க
ஆ) சுரதா
இ) பாரதியார்
ஈ) சுத்தானந்த பாரதியார்

3. பாரதிதாசன் நூல் அல்லாத ஒன்று,

அ) இருண்டவீடு
ஆ) குடும்ப விளக்கு
இ) இன்பக்கடல்
ஈ) ஞானரதம்

4. பாரதிதாசன் பாடுபொருள் அல்லாத ஒன்று.

அ) தேசபக்தி
ஆ) பெண்கல்வி
இ) பொதுவுடைமை
ஈ) பகுத்தறிவு 

5. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) புரட்சிகவி
ஆ) புதுமைக்கவி
இ) பாவேந்தர்
ஈ) புதுவைக்கவிஞர்

6. பாரதிதாசன் தமிழை வருணிக்காத சொல்.

அ) நிலவு
ஆ) மனம்
இ) வானம்
ஈ) பால்

7. பொருத்தி விடை காண்க.

அ) நிருமித்த –  1. மக்கள் குழு
ஆ) விளைவு – 2. சோர்வு
இ) சமூகம் – 3. உருவாக்கிய
ஈ) அசதி – 4. வளர்ச்சி

அ) 3, 2, 4, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 4, 3, 1

8. பிரித்து எழுதுக - அமுதென்று

அ) அமுது + என்று
ஆ) அமது + ஒன்று
இ) அமு + தென்று
ஈ) அமுது + தென்று

9. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று

10. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்

விடை : தமிழெங்கள்

11. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்

12. தமிழே! உயிரே! வணக்கம்!, தாய்பிள்ளை உறவம்மமா உனக்கும் எனக்கும்! - இது யாருடைய வரிகள்

அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) காசி ஆனந்தன்
ஈ) க. சச்சிதானந்தம்

No comments:

Post a Comment