v உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் - தொல்காப்பியர்
v மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது.- காற்றின் இயக்கம்
v மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர். - திருமூலர்
v “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில், ஆயுள் பெருக்கம் உண்டாம் என்று கூறியவர் - பிற்கால ஔவையார்.
v கிழக்கு என்பதற்கு குணக்கு என்ற பெயரும் உண்டு. கிழக்கில் இருந்து வீசப்படும் காற்று கொண்டல் காற்று எனப்படும். இதனை மழைக்காற்று என்றும் கூறுவர்.
v மேற்கு என்பதற்கு குடக்கு என்ற பெயரும் உண்டு. மேற்கில் இருந்து வீசும் காற்று கோடைக் காற்று எனப்படும். இதனை வெப்பக் காற்று என்றும் கூறுவர்.
v வடக்கு என்பதற்கு வாடை என்ற பெயரும் உண்டு. வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடைக்காற்று எனப்படும். இதனை ஊதைக்காற்று என்றும் கூறுவர்.
v தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் தென்றல் காற்று என்பர்.
v ‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல். - சிலப்பதிகாரம்.
v பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலின் ஆசிரியர் - பலபட்டடைச் சொக்கநாத புலவர்
v "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற், செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல். - பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
v "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி, நடந்த இளந்தென்றலே" என்ற பாடலை இயற்றியவர். -கண்ணதாசன்
v "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல் - புறநானூறு (66)
v “களி இயல் யானைக் கரிகால் வளவ!" என்று கரிகாலனைப் பாடும் நூல். - புறநானூறு (66)
v காற்றை ‘‘வளி” என்று குறிப்பிடும் சங்ககாலப் புலவர். - வெண்ணிக் குயத்தியார்.
v தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
v வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
v வளி மிகின் வலி இல்லை என்று கூறும் நூல். - புறநானூறு (51)
v வளி மிகின் வலி இல்லை என்று பாடியவர். - ஐயூர் முடவனார்
v கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர். -மதுரை
இளநாகனார்
(புறநானூறு 55)
v காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்’ என்பது புதுமொழி.
v உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா
ஐந்தாம் இடத்தில் உள்ளது.
v காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம்
முதலிடம் வகிக்கிறது.
v குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு,
ஒரு
இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
v காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
v குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சுக்காற்றை வெளிவிடும் இயந்திரங்கள் - குளிர்பதனப்
பெட்டி,
குளிரூட்டி
காற்றில் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் அமிலமழை பெய்கிறது.
v உலகக் காற்று நாள் - ஜூன் 15
v தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை,
திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர். - தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்
அ) தொல்காப்பியர்
ஆ) திருவள்ளுவர்
இ) கம்பர்
ஈ) காக்கை பாடினியார்
2. மனிதர்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது.
அ) இயற்கையின் இயக்கம்
ஆ) நிலத்தின் இயக்கம்
இ) காற்றின் இயக்கம்
ஈ) நீரின் இயக்கம்
3. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்.
அ) ஔவையார்
ஆ) திருமூலர்
இ) வெண்ணிக்
குயத்தியார்
ஈ) பாம்பாட்டி சித்தர்
4. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில், ஆயுள் பெருக்கம் உண்டாம் என்று கூறியவர்.
அ) புராணகால ஔவையார்
ஆ) சங்ககால ஔவையார்
இ) கம்பர்கால ஔவையார்
ஈ) பிற்கால ஔவையார்
5. கிழக்கு என்பதன் வேறு பெயர்.
அ) குணக்கு
ஆ) குடக்கு
இ) குடகு
ஈ) அனைத்தும்
6. பொருத்தி விடை
காண்க.
அ) கிழக்கு – 1. குடக்கு
ஆ) மேற்கு – 2. தென்கு
இ) வடக்கு – 3. குணக்கு
ஈ) தெற்கு – 4. வாடை
அ-3, ஆ-1, இ-4, ஈ-2
7. கிழக்கில் இருந்து வீசப்படும் காற்று
அ) கோடைக் காற்று
ஆ) கொண்டல் காற்று
இ) ஊதைக்காற்று
ஈ) தென்றல் காற்று
8. மழைக்காற்று என்பது.
அ) கிழக்கில் இருந்து வீசும் காற்று
ஆ) மேற்கில் இருந்து
வீசும் காற்று
இ) தெற்கில் இருந்து
வீசும் காற்று
ஈ) வடக்கில் இருந்து
வீசும் காற்று
9. மேற்கில் இருந்து
வீசும் காற்று.
அ) கோடைக் காற்று
ஆ) கொண்டல் காற்று
இ) ஊதைக்காற்று
ஈ) தென்றல் காற்று
10. வெப்பக் காற்று
என்பது.
அ) கிழக்கில் இருந்து
வீசும் காற்று
ஆ) மேற்கில் இருந்து வீசும் காற்று
இ) தெற்கில் இருந்து
வீசும் காற்று
ஈ) வடக்கில் இருந்து
வீசும் காற்று
11. வடக்கில் இருந்து
வீசும் காற்று.
அ) கோடைக் காற்று
ஆ) கொண்டல் காற்று
இ) ஊதைக்காற்று
ஈ) தென்றல் காற்று
12. வாடைக் காற்று
என்பது.
அ) கிழக்கில் இருந்து
வீசும் காற்று
ஆ) மேற்கில் இருந்து
வீசும் காற்று
இ) தெற்கில் இருந்து
வீசும் காற்று
ஈ) வடக்கில் இருந்து வீசும் காற்று
13. தெற்கில் இருந்து வீசும் காற்று.
அ) கோடைக் காற்று
ஆ) கொண்டல் காற்று
இ) ஊதைக்காற்று
ஈ) தென்றல் காற்று
14. ‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
15. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலின் ஆசிரியர்.
அ) பலபட்டடைச் சொக்கநாத புலவர்
ஆ) இரட்டணை நாராயணகவி
இ) கச்சியப்ப முனிவர்
ஈ) உமாபதி
சிவாச்சாரியார்
16. "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற், செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்.
அ) முகில்விடு தூது
ஆ) பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
இ) அழகர் கிள்ளைவிடு தூது
ஈ) காந்தியடிகள்
நெஞ்சுவிடு தூது
17. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி, நடந்த இளந்தென்றலே" என்ற பாடலை இயற்றியவர்.
அ) ஆலங்குடி சோமு
ஆ) வாலி
இ) கண்ணதாசன்
ஈ) பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
18. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
19. “களி இயல் யானைக் கரிகால் வளவ!" என்று கரிகாலனைப் பாடும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
20. காற்றை ‘‘வளி” என்று குறிப்பிடும் சங்ககாலப் புலவர்.
அ) வெண்ணிக் குயத்தியார்
ஆ) காக்கை பாடினியார்
இ) ஔவையார்
ஈ) முடித்தாமைக்
கண்ணியார்
21. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம்
அ) ஜூன் முதல் செப்டம்பர் வரை
ஆ) ஜீலை முதல் செப்டம்பர் வரை
இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை
ஈ) செப்டம்பர் முதல்
டிசம்பர் வரை
22. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம்.
அ) ஜூன் முதல் செப்டம்பர் வரை
ஆ) ஜீலை முதல் செப்டம்பர் வரை
இ) அக்டோபர் முதல் டிசம்பர் வரை
ஈ) செப்டம்பர் முதல்
டிசம்பர் வரை
23. வளி மிகின் வலி இல்லை என்று கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
24. வளி மிகின் வலி இல்லை என்று பாடியவர்.
அ) ஐயூர் முடவனார்
ஆ) காக்கை பாடினியார்
இ) ஔவையார்
ஈ) முடித்தாமைக்
கண்ணியார்
25. கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர்.
அ) மதுரை இளநாகனார்
ஆ) காக்கை பாடினியார்
இ) ஔவையார்
ஈ) முடித்தாமைக்
கண்ணியார்
26. உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்.
அ) இரண்டாம் இடம்
ஆ) ஐந்தாம் இடம்
இ) ஏழாம் இடம்
ஈ) ஒன்பதாம் இடம்
27. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகத்தின் இடம்.
அ) முதல் இடம்
ஆ) இரண்டாம் இடம்
இ) ஐந்தாம் இடம்
ஈ) ஒன்பதாம் இடம்
28. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஓசோனின் எத்தனை மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
அ) ஆயிரம்
ஆ) பத்தாயிரம்
இ) ஒரு லட்சம்
ஈ) பத்து லட்சம்
29. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் எது குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
அ) மூளை வளர்ச்சி
ஆ) உடல் வளர்ச்சி
இ) உறுப்புகள்
வளர்ச்சி
ஈ) அனைத்தும்
30. உலகக் காற்று நாள்.
அ) ஜூன் 10
ஆ) ஜூன் 15
இ) ஜூன் 17
ஈ) ஜூன் 25




No comments:
Post a Comment