Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 7, 2025

தமிழ் இலக்கிய வரலாறு (நற்றிணை) வினா விடைகள் - 06


நற்றிணை

  •  நன்மை+திணை = நற்றிணை (சிறந்த ஒழுக்கம் என்னும் பொருள் கொண்ட நூல்)
  • இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடும் நூல்.
  • இது அகப்பொருள் பற்றிய நூல்.
  • நல் என்னும் அடைமொழி கொண்டநூல்.
  • ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிவரையில் பாடப்பட்ட நூல்.
  • இது 400 பாடல்களைக் கொண்டு அமைகிறது.
  • ஆதலால் நற்றிணை நானூறு என்ற சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
  • இதனை 275 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
  • இந்நூலைத் தொகுத்தவர் பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழதி.
  • தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • இதற்குப் பழைய குறிப்புக் கொண்டு பின்னாத்தூர் நாராயணசாமி அய்யர் எழுதிய விளக்க உரையே முதல் உரையாகும்.

No comments:

Post a Comment