சங்கம் பற்றிய
குறிப்புகள்
இலக்கிய வரலாறு வினா விடைகள்
முச்சங்கங்கள் குறித்து விரிவாக பேசும் நூல்.
இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருள் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது?
இறையனார் களவியல்
இறையனார் களவியல் உரையை இயற்றியவர்.
நக்கீரர்
நக்கீரரின் இறையனார் களவியல் உரைக்கு எழுத்து வடிவம் தந்தவர்.
முசிறியைச் சேர்ந்த நீலகண்டர்
இறையனார் களவியல் உரை எழுத்து வடிவம் பெற்ற காலம்.
8 ஆம் நூற்றாண்டு
இறையனார் களவியல் உரையின் காலம் 8ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடக் காரணம்.
பாண்டிக்கோவையிலிருந்து மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.
இறையனார் களவியலில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன.
60
முச்சங்கங்கள் குறித்து பேசும் சிலப்பதிகார உரையாசிரியர்.
அடியார்க்கு நல்லார்
ஏட்டுச் சுவடியில் இருந்து முச்சங்கங்கள் குறித்து கூறியவர்.
செவ்வூர் சிற்றம்பலக் கவிராயர்
முதல் சங்ககாலம்
முதல் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்.
தென்மதுரை
முதல் சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்
கிமு 9600 முதல் கிமு 5200 வரை (4440 ஆண்டுகள்)முதல் சங்கத்தில் இருந்த அவைக்களப் புலவர்களின் எண்ணிக்கை.
549
முதல் சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை.
4449
முதல் சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை.
[காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக] 89
குறிப்பிடத்தக்க முதற்சங்க நூல்கள்.
முதுநாரை, முதுகுருகு, பரிபாடல், களரியாவிரை
இடைச் சங்ககாலம்
இடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்.
கபாடபுரம்
இடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்.
கி.மு. 2387 முதல் கி.மு. 306) - 3700 ஆண்டுகள்
இடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை.
[வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக] 59 பாண்டிய அரசர்கள்
இடைச் சங்கத்தில் இருந்த அவைக்களப் புலவர்களின் எண்ணிக்கை
59 புலவர்கள்இடைச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை.
3700 புலவர்கள்
குறிப்பிடற்குரிய இடைச்சங்க நூல்கள்.
அகத்தியம், மாபுராணம், பூதபுராணம், பெருங்கலி, வெண்டாலி, அகவல், குருகு, வியாழமாலை
கடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்.
மதுரை
கடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்.
கி.மு. 400 முதல் கி.மு. 200 - 1850 ஆண்டுகள்
கடைச் சங்கத்தில் இருந்த அவைக்களப் புலவர்களின் எண்ணிக்கை
49 புலவர்ககள்
கடைச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
449
கடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை.
[முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக]
குறிப்பிடற்குரிய கடைச்சங்க நூல்கள்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை [தொல்காப்பியம், அகத்தியம்- இலக்கண நூல்கள்]
சங்கமுகத் தமிழே, சங்கமலித் தமிழ்” எனக் குறிப்பவர்.
திருமங்கையாழ்வார்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி, தருமிக்கருளி னோன்காண்” -யாருடைய கூற்று.
திரு நாவுக்கரசர்
சங்கத்தமிழ் மாலை முப்பதும் எனக் குறிப்பிடுபவர்.
ஆண்டாள்
தலைச்சங்கப் புலவனார் தம்முன்” – யார் கூற்று?
சேக்கிழார்
சங்கத்தமிழ் மூன்றும் தா -எனக் குறிப்பவர் யார்?
ஔவையார்
தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்” – யார் கூற்று?
கம்பர்
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” எனக்குறிக்கும் செப்பேடு எது?
சின்னமனூர்ச் செப்பேடு
சின்னமனூர்ச் செப்பேட்டின் காலம்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டு
சங்கம் இருந்தமையைக் குறிக்கும் மேலைனாட்டார் குறிப்புகள்.
- தாலமி, பிளைனி ஆகியோர் குறிப்புக்களில் சங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
- பெரிபுளூஸ் என்னும் நூலில் சங்கம் பற்றியக் குறிப்பு உள்ளது.
சங்கம் இருப்பதைக் குறிக்கும் இலங்கை வரலாற்று நூல்கள்.
- மகாவம்சம்
- இராசாவளி
- இராசரத்னாகிரி
சங்கங்கள் இல்லை என்பவர்கள்.
- கே, என். சிவராசப்பிள்ளை
- பி.டி. சீனிவாச அய்யங்கார்
- எஸ். வையாபுரிப்பிள்ளை
- நமச்சிவாய முதலியார்
சங்கம் இல்லை எனக் கூறுவோர் வைக்கும் காரணங்கள் யாவை?
- சகரம் மொழி முதலில் வராது,
- கடவுளர் சங்கங்களில் தமிழ் ஆய்ந்ததாகக் கூறுதல்,
- முதல் இரண்டாம் சங்க புலவர் கால அளவு,
- புலவர் எண்ணிக்கை கற்பனை போன்ற தோற்றம்,
- சங்க இலக்கியத்தில் சங்கம் இல்லாமை
முதல், இரண்டாம் சங்கங்கள் பொய் கடைச்சங்கம் உண்மை என்றவர்.
- கே. ஏ. நீலகண்ட சாஸ்திர்யார்
- சேஷகிரி சாஸ்திரியார்
- இராமச்சந்திர தீட்சிதர்
முச்சங்கங்களும் இருந்தது உண்மை என்று கூறும் தமிழறிஞர்கள்.
- உ.வே.சாமிநாத ஐயர்
- கா. அப்பாதுரையார்
- தேவநேயப்பாவணர்
- கா. சுப்பிரமணிய பிள்ளை




No comments:
Post a Comment